\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

உலகச் செம்மொழி – அத்தியாயம் 9

அத்தியாயம் 8 செல்ல இங்கே சொடுக்கவும்

ulagach_chemmozhiகி. பி. 48ஆம் ஆண்டு சமயத்தில், இன்றைய இந்தியாவைச் சேர்ந்த இளம் பேரழகியின் கனவிலும் கொரிய இளவரசன் சுரோவின் கனவிலும் ஒருவருக்கொருவர் மாறிமாறி தோன்ற இருவரும் காதல் வயப்படுகின்றனர்.இந்தியப் பேரழகி மரக்கலம் ஏறிக் கடல் வழியே பயணம் செய்து கொரிய தீபகற்பத்தை அடைகின்றாள். இளவரசன் சுரோவை மணந்து கொரியாவின் காராக் பேரரசை ஆள்கிறார்.. அவர்களுக்கு 12 வாரிசுகள் இருந்தனர். அரசி இறக்கும்போது தங்கள் குழந்தைகளை அழைத்து  “அம்மா, அப்பா” என்று உச்சரித்துவிட்டு இறக்கிறாள். அந்த அரசியின் பெயர்தான் ஹியோ ஹவாங் ஓக்கே. 1206 – 1289ஆம் ஆண்டு காலகட்டத்தில் எழுதப்பட்ட கொரியாவின் மூன்று பேரரசுகளின் வரலாற்றுத் தொகுப்பான ‘சாம்குக் யுசா’ (SAMGUK YUSA) இதை விவரிக்கிறது. கொரிய மக்கள் இன்றைக்கும் அரசியைத் தெய்வமாக வழிபடுகின்றனர். இந்த அரசியின் இந்தியப் பெயர் என்னவென்று தெரியவில்லை. இப்ப ராணி ஹியோ ஹவாங் ஓக்கேவின் பூர்வீகம் பற்றிய ஒரு சர்ச்சை  நடந்துகிட்டு இருக்கு.

ராணி இந்தியாவிலிருந்து கிளம்பிய இடம் ‘அயுத்த’ அல்லது ‘ஆயித்த’ என்று ‘சாம்குக் யுசா’வில் சொல்லப்படுகின்றது. அதனால், வடநாட்டு ஆய்வாளர்கள் அதை ‘அயோத்தி’ என்றே பதிவு செய்துள்ளனர். ஆயியை என்ற பெண் தெய்வ வழிப்பாடு தமிழ் நாட்டில இருக்கு.

இங்கிருந்து சென்றவர் ஒரு தமிழச்சியாகவே இருந்திருக்க வேண்டும் பல ஆதாரங்களை தமிழகத்தின் கடல் ஆராய்ச்சியாளர  பாலு அவர்களும் மற்றும் முனைவர் கண்ணன் அவர்களும் பல தரவுகளைத் தந்திருக்காங்க. அதே போல வடநாட்டவர்கள் கருத்துகளுக்கும் ஆதாரங்கள தந்திருக்காங்க. ஆன ராணி அயோத்தியிலிருந்து போயிருந்தா அம்மா அப்பானு சொல்லியிருப்பாங்களானு சந்தேகம்.

கொரிய மொழியில தமிழோட தாக்கம் இருப்பதற்கு புத்த மதம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருத வாய்ப்புண்டு. கொரிய புத்த குருமார்கள் பௌத்தம் படிப்பதற்காக இந்தியாவிற்கோ அல்லது சீனாவிற்கோ சென்று வந்தார்கள் என்று அறியப்படுகின்றது.

கொரியாவில் சோழர்களின் புற படை மையம் வணிக பாதுகாப்பிற்காக இருந்திருக்கலாம் என்ற கருத்தை ஆய்வாளர்கள் முன் வைக்கின்றனர்.

கொரியா பற்றி படிப்பதற்காக முயன்ற போது, எல்லாரும் கொரிய தீபகற்பமுனு தான் எழுதி இருந்தாங்க. தீபகற்பம் என்ற சொல் வட சொல். இதற்கு சரியான ஆங்கில சொல் பெணின்சுலா(peninsula.). இந்த ஆங்கில சொல்லின் மூலச்சொல் பெண்ணின் சூல் (சூல்- கரு) தமிழ் சொல் என்று எனது போற்றுதலுக்குரிய தமிழ் ஆய்வாளர் மா. சொ விக்டர் அவர்கள் கண்டறிந்திருக்கின்றார்.

இதுல என்ன கொடுமைன்னா உலகமே தமிழ் மூலச்சொல் உள்ள பெணின்சுலாங்கிற சொல்லை பயன்படுத்தும்போது நாம் தமிழ் மொழியில வட மொழிச்சொல்லை பயன்படுத்துகின்றோம். என்ன கொடும சரவணன் இது?.

-சத்யா-

.1.https://balubpos.blogspot.com

2. https://groups.google.com/forum/#!topic/mintamil/5-r5-1MlKYs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad