\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

உலகச் செம்மொழி – அத்தியாயம் 12

chemozhi-12_520x747அத்தியாயம் 11 செல்ல இங்கே சொடுக்கவும்

 

“லாந்து” என்ற வார்த்தையின் பொருள் உலவுதல்.

ஒரு செயல் நடந்த இடத்தை அந்த செயலோடு தொடர்பு படுத்திச் சொல்வது நம் தமிழ் மரபு. உதாரணமாக போர் நடந்த இடங்களைப்  போரூர் என்றும், மன்னர்கள்  அல்லது பெரும் வீரர்கள் போர்களில் வீரமரணம் அடைந்த ஊர்களின் பெயரில் “பட்டு”(பட்டுப் போகுதல்) என்ற  சொல் இணைந்திருப்பதையும்  காணலாம்.

தாய்லாந்து மக்கள் சுதந்திரமாய் உலவிய இடம் தான் தாய்லாந்து எனப் பெயர் பெற்றிருக்க வேண்டும்.

தாய்லாந்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் சில தமிழ் மூலத்தையே கொண்டிருப்பதை காணமுடிகிறது . பாட்டையா, காஞ்சினபுரம், பத்தேயா, சகுந்தா, ஆரணியபிரதாப், சிதம்பராத், ராஜசிம்மா, சோழலங்காரா, பட்டாணி, ராமா, சூரதாணி, சாந்தபுரி, பதம்புரி மற்றும் நந்தபுரி போன்ற ஊர்களே இதற்குச் சான்று.

இங்கு இராமாகீயான் என்ற பெயரில் கம்ப இராமாயணம் தலைச்சிறந்து விளங்குகிறது.. வால்மீகி ராமாயனத்திற்கும் தாய் இராமாகீயானத்திற்கும்  இடையே பெரிய இடைவெளி உள்ளது. மீகாலாக்கதை என்னும் கதை மணிமேகலைக் கதையைத் தழுவியிருக்கிறது.

தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் கல்வெட்டுகளும் சோழர்களுக்கும்

தாய்லாந்துக்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துகின்றன.

இராசேந்திரனின் பெருவெற்றிகளில் ஒன்றான கடாரம் படையெடுப்பு தென் தாய்லாந்தை உள்ளடக்கியதே. ”தாய்” மொழியில் மருவியிருக்கும் தமிழ்ச்  சொற்கள்  சில  ….

வீதி -வீதி

மூக்கு – சாமுக்

நெற்றி -நெத்தர்

கை- கை

கால்- கா

பால்  -பன்

சாதி -சாத்

குலம் – குல்

நங்கை – நங்

துவரை -துவா

சிற்பம்   -சில்பா

சூரியன் உதிக்கும் நாடான சப்பானில் ஆரம்பித்த நம் பயணத்தில், நாம் இப்போது தமிழக கதவுகளைத்  தட்டிக்கொண்டுள்ளோம்.

சீன மொழிக் குடும்பத்தையும் பர்மிய மொழிக் குடும்பத்தையும் தவிர்த்தே நாம் தமிழகத்துக்குள் நுழைகின்றோம். அதனால். இவ்விரு  மொழிக் குடும்பத்திலும் தமிழின் தாக்கம் இல்லை என்று அர்த்தம் கிடையாது.

உதாரணமாக நீ நல மா? என்பதை சீனத்தில் நீ ஹ மா?  இதில் நீ என்பது நீங்கள் என்ற அதே  பொருளிளும் மா என்பது அதே  வினாவிற்கான சொல்லாகவும் சீனத்தில் பயன்படுத்தப்படுகின்றது .

சீனத்தில் உள்ள மாண்டரின்  தவிர மற்றும் சில மொழிகள் பற்றிய தரவுகள் தேவைப்படுவதால்  சீனத்தையும் பர்மியத்தையும்  இப்போதைக்கு தவிர்த்து தமிழகத்துக்குள் நுழைந்து தமிழின் அருமைப் பெருமைகளை அறிந்து பின் மேற்குலகம் செல்வோம்.

இந்த தொடர் முடிவதற்கு முன்பாக இவ்விரு மொழிக் குடும்பத்தை

பற்றியும் பார்க்கலாம். அடுத்த சில அத்தியாயத்தில நாம்  தமிழ் என்ற சொல் எங்கெங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. என்று பார்க்கலாம்.

-சத்யா-

 

Refrence

 

தாய்லாந்தில் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் – எஸ். நாகராஜன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad