\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சிறகவரை எண்ணெய்க் கறி

Filed in அன்றாடம், சமையல் by on November 27, 2016 0 Comments

wing_beans_oil_curry_3_620x562

அவரை வகைகளில் தாவரப் புரதம் தரும் காய்கறிகளில் சிறகவரை சிறப்பானதொன்று . மினசோட்டா மாநிலத்தில் சீனக் கடைகளிலும், ரொரோன்ரோவில் தமிழ், சீன, தாய்லாந்துச் சந்தைகளிலும் கிடைக்கும்.

தேவையானவை

1/2 இறாத்தல் பிஞ்சு சிறகவரை

5 நறுக்கிய சின்ன வெங்காயம்

2 நறுக்கிய பச்சை மிளகாய்

1 சிறுகிளை கறிவேப்பிலை

4 நறுக்கிய உள்ளிப்பூண்டு நகம்

1 அங்குல இஞ்சி (தட்டி எடுத்தது )

10-15 கடுகு

½ தேயிலை கரண்டி வெந்தயம்

1 தேயிலை கரண்டி சீரகம்

1 கோளை உருண்டை பழப்புளி

1 தேயிலை கரண்டி சீனி அல்லது சர்க்கரை

1/2 மேசைக்கரண்டி மஞ்சள் தூள்

1 மேசைக் கரண்டி கறி மிளகாய்த்தூள்

1 கோப்பை தேங்காய்பால்

1 மேசைக்கரண்டி சமையல் எண்ணெய்

உப்பு தேவையான அளவு

wing_beans_oil_curry_1_620x562

wing_beans_oil_curry_2_620x620

தயாரிப்பு முறை

சிறகவரையை கழுவி சிறிய துண்டுகளாக அரிந்து எடுத்துக்கொள்ளவும். நீரில் இருந்து அகற்றி, சற்று பிழிந்து நீரை அகற்றி மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்துப் பிரட்டவும்.

சூடான கொதி எண்ணெய்த் தாழியில் உடன் போட்டு 1-2 நிமிடங்கள் தாளித்து, பக்கத்தில் வைத்துக்கொள்ளவும். இளம் பச்சை நிறம் முற்றிலும் மஞ்சளாக வரும் வரை விடாது கிளறிக் கொள்ளவும்.

பழப்புளியைச் சற்று சூடான அரை கோப்பை நீரில் குழைத்து, புளிச்சாறை வடித்துக்கொள்ளவும்.

ஒரு தட்டையான சட்டியில் மிதமான சூட்டில் , வெங்காயம் மிளகாய்த்துண்டுகளைச் சிறிதளவு எண்ணெயில் பொரித்து உடன் வெந்தயம்,கடுகு,சீரகம், கறிவேப்பிலை போன்றவற்றைச் சேர்த்து 1-2 நிமிடம் வறுக்கவும். பின்னர் சமையல் எண்ணெய் உடன் சேர்த்துக்கிளறவும்.

அடுத்து வடித்து எடுத்த புளியம் ரசம், கறித்தூள் (யாழ்ப்பாணத்தார் மிளகாய்க் கறித்தூள்) உப்பு சேர்த்துக்கொள்ளவும். பின்னர் 2-3 நிமிடங்களுக்குப் பொரித்த அவரைக்காய்களையும் சேர்த்துக் கொதிக்க விடவும். அடுத்து தேங்காய்ப்பால், மற்றும் சீனி அல்லது சர்க்கரை சேர்த்து மூடி மேலும் 5 நிமிடங்கள் அடுப்பில் மிதமானச் சூட்டில் கொதிக்கவிடவும்.

சிறகவரை எண்ணெய்க் கறியைச் சோற்றுடன் பரிமாறலாம்.

– யோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad