\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பெஞ்சமின் ஃபிராங்கிளின்

 

பிரித்தானியப் பேரரசு  காலனிகளிலிருந்து  (colonies) அமெரிக்கா  சுதந்திர நாடாக வந்தமைக்கு, பலதாபகத் தந்தைகள் காரணமாக இருந்தனர். இவர்களில் முதன்மையானவர்களில் பெஞ்சமின் ஃபிராங்கிளினும் ஒருவர்.

இவர் நாட்டின் தாபகர் மாத்திரம் அல்ல, எழுத்தாளர், பதிப்பாளர், பெரும் விஞ்ஞானி, கண்டுபிடிப்பாளர், இராஜதந்திரி , அரசியல்வாதி, ஆசிரியர், நூலகவியலாளர் என்று சகலகலா வல்லவர். அறிவாளர் ஃபிராங்கிளினின் ஆர்வமோ வரையறையற்றது இவர் மருத்துவத்தில் இருந்து, சங்கீதம், சிலேடை, விஞ்ஞானம், தொழில்நுட்பம்,  மெஞ்ஞானம் என பலவற்றையும் ஆவலுடன் தம் கருத்தில், சிந்தனையில் கொண்டவர்.

இவரை பிரித்தானியக் காலனிகளிலேயே அறிவாளர் என்று 1762 இல் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் முனைவர்ப் பட்டம் கொடுத்து டாக்டர் ஃபிராங்கிளின் எனக் கெளரவித்தது.

பெஞ்சமின் ஃபிராங்கிளின் பற்றிய துணுக்குகள்

  1. தாவர போசனத்தையே விரும்பியவர் – இவர் இளவயதில் அச்சகத்தில் வேலை கற்கும் போது தாவர போசன மகிமை பற்றி அச்சுக்குப் போன புத்தகம் ஒன்றில் படித்துத் தெரிந்துக்கொண்டு, அது முதல் தமது சிந்தனைத் தூய்மைக்கும் உடல் நலத்திற்கும்  தாவர போசனமே நலம் என்று கருதிக் கடைப்பிடித்துவந்தார் .
  1. உடல் பயிற்சிக்கு  முக்கியத்துவம் கொடுத்தவர். இவர் வாழ்ந்த காலத்தில் சராசரி மக்கள் ஆயுள் 35-40 வயது மாத்திரமே. இதிலிருந்து விடுபட்டு ஆரோக்கிய நீண்ட கால வாழ்விற்கு உடல் அப்பியாசம் தேவை; நாடித்துடிப்பை  நிமிடத்திற்கு 60-90 வரை வைத்திருப்பது நலம் என்ற கணிப்பை எமக்கு ஆராய்ந்தறிந்து தந்தார்.
  1. கிருமிகள் பரவல் பற்றிய வைத்திய கோட்பாடுகளை நன்கு அறிந்து அதனால் கிடைத்த  சுகாதார நன்மைகளை 1773 ஆம் ஆண்டிலேயே அமுல் படுத்தியவர்
  1. 1784 இல் , உலகிலேயே முதன் முறையாக கண் பார்வைக் கண்ணாடிகளில் இணைப்பார்வை (bifocal spectacles) லென்சுகளை உருவாக்கித் தந்தவர் பெஞ்சமின்.
  1. இவரே அமெரிக்கக் காங்கிரஸிற்கு அடிமைகள் வைத்திருப்பதை அகற்றிவிடுமாறு 1790ம் ஆண்டில் சட்ட ரீதியாக முதல் குரல் கொடுத்தவர்,
  1. தமது நூலகத்தில் உயர்ந்த புத்தக அலுமாரிகளில் இருந்து புத்தகம் எடுக்க நாற்காலி – ஏணிகளை உருவாக்கியவர்.
  1. உலோகக் குழாய்கள் தயாரிப்பில் , பூசம் படும் சாயங்கள் எவ்வாறு தொழிலாளர்க்கு ஈய (Lead) நஞ்சுதனைத் தருகிறது என்பதை விஞ்ஞான ரீதியில் கண்டுபிடித்து நிரூபித்தவர்
  1. ஃபிராங்கிளின் அவர்கள், 37 கண்ணாடிக் கிண்ணங்களில் நீர் கொண்ட ஜலதரங்கம் போன்ற ‘ஆர்மோனிக்கட்’ எனும் இசைக்கருவியை உருவாக்கி, 1761 இல் கச்சேரி நடத்தினார்
  1. பனிக்காலக் குளிரை  நிவர்த்தி செய்யும் பொருட்டு வெட்பதட்ப வாயுக்கள் சீராகப் பரிமாறக் கூடிய அடுக்களை (fire place) ஒன்றினைக் கண்டுபிடித்தார்

தொகுப்பு – யோகி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad