\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஹாலோவீன்

ஆதவன் சற்றே இளைப்பாற

அந்திமம் சற்றே பவனி வர

விருந்தா வித்தையா என

அறிந்தும் அறியாமலே

விந்தையாய் கேள்விதனைக் கேட்டபடி

உலாவரும் குழந்தைகளை மகிழ்விக்க

அக்டோபரில் வந்த ஹாலோவீனே

 

இன்முகத்தை முகமூடிக்குள் மறைத்தே

இடையினில் மந்திரக்கோலைக் கொண்டே

விந்தைபல காட்டி வியக்கச் செய்தே

இனிப்புகளை அள்ளிச் சென்ற ஹாரிபார்டரையும் அறிந்தும் அறியாமலே  

சாகசமாய் எண்ணி மகிழ்வித்த  ஹாலோவீனே

 

இல்லாத ஆவியையும் பிசாசையும்

இன்பமாய் கொண்டாடி மகிழவே

காண்பவருக்கு பயத்தினையும்

அணிபவருக்கு இன்பத்தையும்  

குழந்தைகளுக்கோ குதூகலத்தையும்

அன்பளிப்பாய்  அள்ளித் தந்த ஹாலோவீனே

 

 

  • உமா –

 

 

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad