\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

காசேதான் கடவுளடா நாடகம்

அக்டோபர் ௮, 2017 , மினியாபொலிஸ் நகரைச் சிரிப்பு புயல் தாக்கியது. 1970 ல் வெளிவந்த காசேதான் கடவுளடா தமிழ்ப் படத்தை நாடகமாக்கியுள்ளார் Y Gee மகேந்திரன். அவர் நடத்தும் யுனைடெட் அமெசூர் ஆர்ட்டிஸ்ட் (United Amateur Artists) நிறுவனத்தினர் அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். ஷங்கர் கிருஷ்ணன் நடத்தும் மினசோட்டா பிரெண்ட்ஸ் கேரியோக்கி (Minnesota Friends Karaoke) என்னும் மினியாபொலிஸ் அமைப்பு இவர்களை அழைத்து வந்தது.

திரு Y Gee மகேந்திரன் இந்த நாடகத்தில் தேங்காய் ஸ்ரீனிவாசன் நடித்த பாத்திரத்தை எடுத்து நடித்திருந்தார். நாற்பது வருடங்களுக்கு முன்பு வந்தக் கதையை இந்தக் காலத்திற்கேற்ப மாற்றியுள்ளனர். இன்றைய அரசியல் நடப்பு , சினிமா இவைகளைக் கலந்து அருமையான நாடகத்தைக் கொடுத்தார்கள் இவர்கள். நாடகம் துவங்கியாதும்  “இஞ்சி போட்ட டீ” ஜோக்கில் ஆரம்பித்து முடிவு வரை இடைவிடாது சிரிப்புமழை. Y Gee மகேந்திரன் அவர்கள் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடி அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

மினியாபொலிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு நகைச்சுவை கலந்த குடும்ப நாடகத்தைக்  கொடுத்ததற்காக ஷங்கர் கிருஷ்ணன் நடத்தும் மினசோட்டா பிரெண்ட்ஸ் கேரியோக்கி (Minnesota Friends Karaoke) மற்றும் திரு Y Gee மகேந்திரன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தொகுப்பு: பிரபு

படத்தொகுப்பு : ராஜேஷ்

Tags: , , , , ,

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Chandra says:

    is there no video link available to see online who missed the event?

Leave a Reply to Chandra Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad