\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சொர்க்கத்திலே முடிவானது

Filed in இலக்கியம், கதை by on April 16, 2013 3 Comments

sorkathile_257x352அதிகப் பரபரப்பில்லாமல் இருந்தது நெடுஞ்சாலை. துலூத் – 94 மைல்கள் எனக் காட்டியது வண்டியிலிருந்த ஜி.பி.எஸ். அமைதியாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான் ரத்தன்.

முன்னால் செல்லும் வண்டி மெதுவாகச் செல்வது போல தோன்றியது. பொதுவாகச் சாலையில் குறிப்பிட்ட வேகத்துக்கும் குறைவான வேகத்தில் செல்வோர் இடத்தடத்தில் சென்றால் அவர்கள் மீது அவனுக்கு கடுங்கோபம் வரும். அதுவும் அவர்கள் கையில் கைப்பேசியோ, உதட்டுச்சாயக் குச்சியோ இருந்துவிட்டால் அவர்களைக் கடக்கையில் கண்களில் கோபத்தைக் காட்டிச் செல்வான். இன்று அப்படியில்லாமல் வலத்தடத்துக்கு மாறி முன்னால் சென்ற வண்டியைக் கடந்தான்.

பொதுவாக இது போன்ற நெடும்பயணங்கள் ரத்தனுக்கு மிகவும் பிடிக்கும். மனதுக்கு பிடித்த இசையும் அவ்வப்போது உறிஞ்சிக் கொள்ள ஏதாவது ஓரு சோடாவும் இருந்தால் போதும். ஆனால் இன்று ரத்தனின் முகத்தில் துளிக் கூட சலனமில்லை. கல்பனாவிடம் எப்படிப் பேசுவது என்ற எண்ணத்திலே மூழ்கியிருந்தான்.. முழுதாய் ஒரு வருடம் கூட முடிந்திருக்கவில்லை அவளுக்கு திருமணமாகி. அதற்குள் இப்படி ஒரு நிலை!

ரத்தனின் நெருங்கிய நண்பன் கார்த்திக்கின் இரண்டாவது தங்கை கல்பனா. சிறு வயதில் கார்த்திக் வீட்டுக்கு போகும் போது அவளைப் பார்த்திருக்கிறான். மூன்று வருடங்களுக்கு முன் அவள் அர்கன்சாஸ் மாநிலத்தில் ஏதோ ஒரு வேலையில் சேர்ந்த புதிதில் அவளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தான்.

சென்ற வருடம் ஒரு முறை கோயம்புத்தூரிலிருந்து கார்த்திக் பேசிய போது கல்பனாவிற்கு பிட்ஸ்பெர்க்கில் ஒரு வரன் அமைந்திருப்பதாகவும் விசாரித்துச் சொல்லுமாறும் கேட்டிருந்தான். ஜுன் மாதம் திருமணம் முடிந்து, இருவரும் சில மாதங்கள் வெவ்வேறு இடங்களில் இருந்த பின் இருவருக்கும் ஒரே அலுவலகத்தில் வேலை கிடைக்க, சென்ற ஆகஸ்ட் மாதம் துலூத் வந்து சேர்ந்தனர்.

கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது இருவரும் ரத்தன் வீட்டுக்கு வந்திருந்தனர். கல்பனா நன்கு வளர்ந்திருந்தாள். அமெரிக்க வாழ்க்கைக்கு மாறியிருந்தாலும், ரத்தனையும், அவன் மனைவியையும் அண்ணா, அண்ணி என விளித்துக் கொஞ்சமாய் ஒட்டியிருந்த கோயம்புத்தூரை வெளிப்படுத்தினாள்.

கிஷோர் – கல்பனாவின் கணவன் – நெடு நாட்கள் அமெரிக்காவில் தங்கிப் படித்திருந்தாலும் தமிழகச் செய்திகள் பேசினான். அமைதியான தோற்றம், நிதானப் பேச்சு, சீரான உடை என பெண்களை வசீகரிக்கும் விஷயங்கள் பல அவனிடம் தெரிந்தன, பேசும் போது பலமுறை ‘ரைட் கெல்லி?’ என கல்பனாவையும் உரையாடல்களில் ஈடுபடுத்தினான். வெளியே சென்ற போது ரத்தனுடனும், அவன் மனைவியுடனும் சேர்ந்து நிறைய புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். இருந்த மூன்று நாட்களுக்குள் அவர்கள் நான்கு பெரும் சேர்ந்தாற்போலிருந்த படத்துக்கு அழகான போட்டோஃபிரேம் ஒன்றை வாங்கி மாடியில் புத்தக அலமாரியின் மீது வைத்தனர். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ரத்தனின் மகனுக்கும் பரிசுப் பொருள் ஒன்றை அவனது அறையில் விட்டுச் சென்றனர். அவர்கள் வந்து சென்றதை ரத்தன் ஃபோனில் சொன்ன போது கார்த்திக் மிகவும் மகிழ்ந்துப் போனான்.

ஆனால் நாளை அவர்கள் பிறிந்து செல்ல இருக்கிறார்கள். கல்பனாவை மினியாபொலிஸ் அழைத்து வந்து டாலஸ் செல்லும் விமானத்தில் ஏற்றவே ரத்தன் போய்க் கொண்டிருக்கிறான்.

லேசாகப் பனி தூறத் தொடங்கியிருந்தது. முன்னால் சென்ற வண்டிகள் மெதுவாகப் போகத் தொடங்கியிருந்தன. மேலிருந்து விழுந்த பனியை விட வண்டிச் சக்கரங்களில் இருந்து எறியப்பட்ட முந்தைய இரவுப் பனி சகதியாக முன்புறக் கண்ணாடியில் நிறைந்தது. வைப்பரை இயக்கி துடைத்து விட்டு முன்னால் சென்ற பெரிய சுமை வண்டியைக் கடந்தான் ரத்தன். ப்ப்ரப்ப்ப் எனும் ஒலியுடன் மீண்டும் முன்பக்க கண்ணாடி முழுதும் சகதியானது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கார்த்திக் பேசியபோது தான் இது பற்றி தெரிந்தது ரத்தனுக்கு. தொடக்கத்தில் அவன் மிகைப்படுத்துகிறான் என்று நினைத்தவன் கார்த்திக் தினமும் தொடர்பு கொண்டு பேசிய போது தான் ஏதோ பிரச்னை என்று உணர்ந்தான். ‘உன்னைத் தான் தம்பி நாங்க நம்பி இருக்கோம்.. அந்த சிறுக்கி, என்ன சொன்னாலும் கேக்க மாட்டேன்னு ராங்கி புடிச்சி பேசறா .. நீ கொஞ்சம் நேர்ல பாத்து அவளுக்கு எடுத்துச் சொல்லுப்பா‘ என கார்த்திக்கின் அம்மா அழுதார். அதன் பின் மூன்று நான்கு முறை அவர்களைச் சென்று சந்தித்து வந்தான் ரத்தன்.

முதல் முறை சென்ற போதே அவர்களிடமிருந்த இடைவெளியை உணர முடிந்தது. இரண்டு படுக்கையறைகள் கொண்ட அபார்ட்மென்ட்டில் தங்கி இருந்தனர் அவர்கள். ரத்தனும் அவன் மனைவியும் ஒரு அறையில் தங்கிக் கொண்டனர். காலையில் எழுந்து வந்த போது, கிஷோர் வரவேற்பறை சோபாவில் தூங்கிக் கொண்டிருந்தான். ரத்தன் கேட்கும் முன்னரே, ‘காலையில் ஜாகிங் போயிருந்தேன் அங்க்கிள்… வந்தப்புறம் உட்கார்ந்து டீ,வி பார்த்துக்கிட்டிருந்து … அப்படியே தூங்கிப் போய்ட்டேன்’ என்றான் பைஜாமாவை இழுத்து விட்டுக் கொண்டே. அந்த முறை பொதுவாக சில அறிவுரைகள் சொல்லிவிட்டு வந்து விட்டனர் ரத்தனும் அவன் மனைவியும்.

அடுத்த முறை ரத்தன் மட்டும் சென்றிருந்தான். ப்ரிட்ஜில் இருந்த மேக்னடிக் போர்டில் ‘I won’t be home for dinner – k’ என முதல் நாள் எழுதியிருந்ததை பார்த்து மிகவும் வருந்தினான் கெல்லி சுருங்கி வெறும் ‘கே’ ஆகிப் போனது மிகவும் ஆபத்தானது, எதாவது செய்தாக வேண்டும் எனத் தோன்றியது. ரத்தனுக்கு. எங்கு, எப்படி தொடங்குவது என்று தான் புரியவில்லை.

அன்று வரவேற்பறையில் டீ.வி பார்த்துக் கொண்டிருந்த போது, ‘இன்றிரவு உங்களுக்கு ஏதாவது வேலை இருக்கிறதா?’ என்றான் ரத்தன். அவன் கேட்டது காதில் விழாததால் இங்கும் அங்கும் ரிமோட்டை தேடினான் கிஷோர். தன் இருக்கையில் புதைந்திருந்த ரிமோட்டை எடுத்து மேஜை மேல் வைத்தாள் கல்பனா. ‘தேங்க்ஸ்’ என சொல்லிக்கொண்டே அதை எடுத்து டீ.வி சத்தத்தைக் குறைத்த கிஷோர்,

‘ஐ ஆம் ஃப்ரி அங்க்கிள் சொல்லுங்க’ என்றான்.

‘துலூத்தில் ஒரு இந்திய உணவகம் இருப்பதாக கேள்விப்பட்டேன் ..போகலாமா?’ என்றான் ரத்தன்.

‘ஆக்ச்சுவலி .. மினியாபொலிசில் இருக்க அளவுக்கு அது அவ்வளவு பெரிசில்லைங்கண்ணா .. அது மட்டும் இல்ல எனக்கு வீட்ல லாண்டரி வேலை வேற இருக்கு .. நீங்க போய்ட்டு வாங்கண்ணா’

‘இல்லம்மா .. இன்னைக்கு சனிக்கிழமை தானே நாளைக்கு லாண்டரி பண்ணிக்கலாம் … நானே மினியாபொலிஸ் போவதற்கு முன் உனக்கு துணிகளை மடிச்சு தந்துட்டுப் போறேன்.. லெட்ஸ் கோ அவுட் ஃபார் டின்னர் டுநைட்’ முடிவாகச் சொன்னான் ரத்தன்.

உணவகத்தில் நான்கு நபர் அமரும் வட்ட மேஜையில் இருவரும் எதிரெதிரே அமர நடுவேயிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்த ரத்தன் பணியாளைரை அழைத்து நான்காவது நாற்காலியை எடுத்து விடச் சொன்னான். பின்னர் ‘லெட்ஸ் சிட் கம்ஃபர்ட்டபிலி’ எனச் சொல்லி இருவரையும் நெருங்கி அமரச் செய்தான்.

‘ஐ ஆம் கோயிங் டு ஹேவ் ஃபியூ பியர்ஸ் டுநைட் .. எனி ஒன் ஆஃப் யூ கேர் டு ஜாயின்?’ என்றான் இருவரையும் பார்த்து.

இருவருமே பெரிதும் ஆர்வம் காட்டாததால் தனக்கு மட்டும் பியர் ஆர்டர் செய்தான் ரத்தன். கிஷோரும், கல்பனாவும் அவரவர்க்கு தேவையான உணவை சொல்லி அனுப்பினர். முதல் கிளாசை முடித்த பின்னர் சற்று தெளிவு வந்தது போலிருந்தது ரத்தனுக்கு. ப்ளேட்டில் இருந்த ஒரு மிளகு அப்பளத்தை எடுத்துக் கொண்டே..

‘எனக்கு பியர் சாப்பிடும் போதெல்லாம் சில பாட்டு ஞாபகம் வரும் .. மத்த சமயத்திலே கேக்கறதை விட ரொம்ப சுகமாயிருக்கும் அந்த வரிகள் ..இப்ப எனக்கு ஞாபகம் வர்றது … ‘நீலத்தை எடுத்து விட்டால் வானத்தில் ஏதும் இல்லை’ .. ஹேவ் யூ ஹெர்ட் தோஸ் லைன்ஸ் பிஃபோர்?’ என்றான்.

இருவரும் அமைதியாக அவனைப் பார்க்க ..

‘வெல் ..ஐ நோ யூ மே நாட் ஹவ் ஹெர்ட் இட்.. பட் ஹானஸ்ட்லி, தேர் இஸ் நத்திங் பியாண்ட் ப்ளு இன் த ஸ்கை … நான் என்ன சொல்ல வர்றேன்னு உங்களுக்கு புரியுமின்னு நினைக்கிறேன் … காதலை எடுத்து விட்டால் வாழ்க்கையில் எதுவும் இல்லை… கல்யாணங்கிறது எலிமெண்டரி ஸ்கூல், ஹை ஸ்கூல், காலேஜ், வேலைங்கற மாதிரி ஒரு மைல்கல் இல்லை.. இதை தாண்டிட்டோம் அடுத்தத நோக்கி போலாங்கிறதுக்கு..கார்த்திக் உங்க பிரச்சனையைப் பத்தி சொன்னப்ப கூட நான் பெரிசா எடுத்துக்கலை…பொதுவா நிறைய பேருக்கு வர்ற ‘போஸ்ட் மேரேஜ் சிண்டரமா’ இருக்கும்னு நெனச்சேன்..ஆனா அது இவ்வளவு தூரம் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தக் கூடிய விஷயமா மாறி இருக்கும்னு நெனக்கலை..கிஷோர், இஃப் யூ டோன்ட் மைண்ட், கேன் ஐ டாக் அபவுட் சம்திங் ஐ ஹேவ் அப்செர்வ்ட் ரீசென்ட்லி?’

சோடா தம்ளரில் ஸ்ட்ராவை வைத்து சுழட்டிக் கொண்டிருந்த கிஷோர் அதை நிறுத்தி விட்டு ‘நோ அங்க்கிள் .. கோ அஹெட் ..’ என்றான்.

‘அண்ட் வித் யூ கல்பனா?’

‘இல்லைங்கண்ணா சொல்லுங்க’

‘குட் … வாட் தெ ஹெல் இஸ் ஹேப்பனிங் பிட்வீன் யூ போத்? நொடிக்கு நூறு தரம் ‘ரைட் கெல்லி , ரைட் கெல்லின்னு’ கேட்டுகிட்டு இருந்த நீ, சாயந்திரம் ஏதாவது வேலை இருக்கான்னு கேட்டதுக்கு ‘ஐ ஆம் ஃப்ரீ’ ன்னு உனக்கு மட்டும் பதில் சொல்ற.’ திரும்பி கல்பனாவை பார்த்து ‘நீ … தோசை ஆறிட்டா நல்லா இருக்காதுன்னு என் பெண்டாட்டி கெஞ்சினப்ப கூட .. இல்ல அண்ணி அவரு ஃபோன் பேசிட்டு வரட்டும்னு காத்திட்டிருந்த நீ.. இப்ப என்னடான்னா ‘ஐ வோன்ட் பி ஹோம் ஃபார் டின்னர்ன்னு ஃப்ரிட்ஜில’ எழுதிப் போட்டுட்டு போற … நவ் டெல் மீ .. நீ போகும் போது அவன் வீட்ல இல்லன்னே வெச்சிப்போம்.. டோன்ட் யூ ஹேவ் எ செல்ஃபோன்?’ என நிறுத்தினான்.

அவனை நிமிர்ந்துப் பார்த்து தன் பதிலுக்காகத் தான் காத்திருக்கிறான் என்பது புரிந்த கல்பனா, ‘இருக்குண்ணா’ என்றாள்.

‘தென் வொய் கான்ட் யூ கால் ஹிம் அண்ட் டெல் தட்?’ மீண்டும் நிறுத்தினான்.

கல்பனா அமைதியாக இருந்தாள். மூன்றாவது பியரை எடுத்துக் கொண்ட ரத்தன் ..

‘இன்னிக்கி … அவன் ரிமோட்டை தான் தேடறான்னு உனக்கு தெரிஞ்சும் அத எடுத்து அவன் கைல குடுத்துட்டா கவுரவும் கொறஞ்சிடும்னு .. மேஜையில வெக்கிற .. அவனும் தேங்க்ஸ் சொல்லி எடுத்துக்கிறான். ரிமோட்டை பாத்தியான்னு அவனால கேட்க முடியல .. இந்தா ரிமோட்டுன்னு உன்னால அவன் கைல கொடுக்க முடில .. ஆனா அவன் ரிமோட்ட தான் தேடறான்னு உனக்கு தெரிஞ்சிருக்கு .. நாம ரிமோட்டை தேடுறதை அவ புரிஞ்சிப்பாங்கிற நம்பிக்கை அவனுக்கு இருக்கு ..உங்களோட பேசிக் ப்ராப்ளம் இஸ் நாட் அண்டர்ஸ்டாண்டிங் ஈச் அதர்… அக்ஸப்டிங் ஈச் அதர் ..வொய் டூ யூ கய்ஸ் ப்ளே திஸ் ப்ளடி ஸ்மார்ட் கேம்?

‘எல்லாத்துக்கும் மேல.. வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வந்திருக்கிற ஒரு நாள் கூட யூ கயிஸ் ஆர் நாட் எபிள் டு ஷேர் அ ரூம் அட் நைட்.. லீவ் அலோன் த பெட் .. ஒரே ரூம்ல கூட படுக்க முடியாத அளவுக்கு என்ன வெறுப்பு உங்களுக்குள்ள?’

இருவரையும் மாறி மாறி பார்த்த ரத்தன் நீண்ட நேர அமைதியை முறித்து ‘ஆல்ரைட் .. நாளைக்கு நான் திரும்ப வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி உங்க ஒவ்வொருத்தர் கூடவும் தனித் தனியா பேச விரும்பறேன்.. நான் இங்க ஒரு மேரேஜ் கவுன்சலரா நடந்துக்கலை.. உங்க ரெண்டு பேரோட வெல்விஷர்.. அவ்வளவுதான். கிஷோர் இஸ் இட் ஓகே இஃப் ஐ டாக் டு கல்பனா வித்தவுட் யூ?’ என கேட்டான்.

‘ஐ ஆம் ஆல் குட் வித் தட் அங்க்கிள்’.

‘குட் … கல்பனா இஸ் இட் ஓகே வித் யூ?’

‘சரியண்ணா’

எட்டு மணிக்கு முன்னரே வீட்டுக்கு வந்து விட்டதால் அன்றிரவே பேசி விடலாம் என்று தோன்றியது ரத்தனுக்கு. முதலில் கல்பனாவுடன் தான் பேசினான்.

‘என்ன பிரச்சனை கல்பனா?’

‘தெரியலைண்ணா … இன்னும் கேட்டா ஒண்ணுமே இல்லைன்னு கூட சொல்லலாம்’

‘கிஷோர் எப்படி? ஏதாவது ஒல்ட் அஃபயர்ஸ்?’

‘நோ .. நோ .. எனக்கு தெரிஞ்சி அப்படியெல்லாமெதுவும் இல்லைண்ணா’

கையில் கைப்பேசியை வைத்து சுற்றிக் கொண்டிருந்தாள்.

‘ட்ரிங்கிங் .. ஸ்மோக்கிங்?’

தலையை இட வலமாக ஆட்டி ‘ம்ஹ்ஹும்’ என்றவள், ‘சம் டைம்ஸ் ஹி டிரிங்க்ஸ் … பட் நாட் ஆல்வேஸ்’.

‘அதில உனக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா?’

மீண்டும் தலையை இட வலமாக ஆட்டி ‘ம்ஹ்ஹும்’.

‘உன்ன திட்டறது, அடிக்கிறது, சந்தேகப்படறதுன்னு எதாவது…?’

‘அதெல்லாம் ஒன்னுமில்லைண்ணா’

‘இங்க பாரு நான் உன்னை விட பெரியவன் .. உங்க அண்ணனோட ஃப்ரெண்ட் … இதெல்லாம் மறந்துடு .. என்னை உன்னுடைய ஃப்ரெண்டா நெனச்சுக்கோ.. டிட் யூ ஹேவ் எனி ப்ரீவியஸ் அஃபயர்ஸ் .. ஆர் கரென்ட்லி கோயிங் த்ரு சம்திங்?’

சிரித்தவாறு ‘இல்லை …’ என்றாள்.

‘எதாவது செக்ஸ் பிராப்ளம்ஸ்?’

‘இல்லை’

‘டு யூ ஹேட் ஹிம் ஃபார் சம்திங்?’

‘நோ’

‘அப்படி…’

‘பட் அட் த சேம் டைம் ஐ டோன்ட் லவ் ஹிம் எனிமோர்’

இதுவரை அவன் கண்ணைப் பார்த்து பேசியவள் குனிந்து கையிலிருந்த ஃபோனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அழுகிறாள் போலும் என நினைத்து

‘இங்க பாத்து சொல்லு ‘ என்றான்.

அவள் கண்ணில் அழுத்தம் தான் தெரிந்தது.‘எனக்கே தெரியுது … நான் செய்யறது சரியில்லைன்னு .. ஐ ஆம் டிரைவிங் ஹிம் டு தெ எட்ஜுன்னு. ஆனா என்னன்னு தெரிலைண்ணா .. என்னால அவரோட இயல்பா இருக்க முடியலை. என்னை அவரோட இன்ஃபீரியராவோ சுப்பீரியராவோ, எப்பவுமே நினச்சதில்லை.. ஒரு ஃபிரெண்டா தான் நினைச்சிருக்கேன் .. திடீர்னு எப்படி இந்த இடைவெளி வந்ததுன்னு தெரியல.. ரெண்டு பேருமே சின்ன குழந்தைகளும் இல்ல.. நீ செஞ்சது சரியில்ல நான் செஞ்சது சரியில்லன்னு மறுபடியும் சேந்துக்கறத்துக்கு.. ரெண்டு பேருக்கும் ஒரு காமனாலிட்டி இல்லைன்னு தோனுது ..’

சலனமில்லாமல் பேசினாள் ..

கிஷோருடன் பேசும் போதும் கிட்டத்தட்ட இதையே தான் எதிரொலித்தான் ..

‘என்கிட்டே பிடிக்காத விஷயம்னு அவ எதுவும் சொன்னதில்ல … ஒரு வேளை அவ என்கிட்ட சொல்லாம இருந்திருக்கலாம் … சொன்னாலும் உடனே மாத்திக்குவேனான்னு தெரியாது .. எனக்கு அவகிட்ட பிடிக்காத விஷயம்னும் எதுவும் கிடையாது .. ஐ கேன்னாட் போர்ஸ் ஹெர் அண்ட் ஐ டோண்ட் வாண்ட் டு .. ஐ ஜஸ்ட் லெட் ஹெர் பீ ஹெர்செல்ஃப் ..’.

‘ஏதாவது குறிப்பிட்ட விஷயம் உன்ன உறுத்துதா.. லைக் ஹெர் லைஃப் பிஃபோர் மேரேஜ் ஆர் நவ்?’

‘நத்திங் ..’

‘ஹவ் இஸ் யுவர் ப்ரைவேட் செக்ஸ் லைப் … எனி இஷ்யூஸ்’

‘நோ.. நாட் அண்டில் வீ வேர் இண்டு இட் ..’

என்ன பேசுவது என்று தெரியவில்லை.

மறுநாள் கிளம்பும் போது,

‘உங்களுக்குள்ள என்ன நடக்குதுன்னு தெரியல … பட் ரெண்டு பேரும் ரொம்ப மெட்ச்சூர்டா நடக்கிறதா நினச்சி உங்களையும் அடுத்தவரையும் ஏமாத்திக்கிறீங்க .. அது உங்களோட ஈகோவான்னும் எனக்கு தெரியலை .. ஸி … மேரேஜ் இஸ் நாட் ஜஸ்ட் என் இவண்ட்… இட் இஸ் எ ஸ்வீட் ரிலேஷன்ஷிப் .. வாழ்க்கையின் ஒரு பலமான பிடிப்பு அது.. லேர்ன் டு என்ஜாய் இட்.. ஒருத்தரை ஒருத்தர் கவனிக்க ஆரம்பிங்க .. இதோ இந்த மேக்னடிக் போர்ட்ல நீங்க மத்தவர கவனிச்ச விஷயங்களை எழுதி வைங்க.. யூ வில் நோட்டிஸ் த காமனாலிட்டி …ஒரே ஒரு நாள் டின்னர் சேர்ந்து சாப்பிடுங்க….டாக் ஒவர் இட்.. ஸ்பென்ட் எ நைட் டுகெதர் ..கிவ் இட் எ ட்ரை. அடுத்த தடவை நான் இங்க வர அவசியமிருக்காது .. அப்படியே வந்தாலும் உங்கள வித்தியாசமா பாக்க ஆசைப்படறேன்’ என சொல்லிச் சென்றான்,

அதன் பின் பல முறை தொலைப்பேசியில் பேசிய போதும் அவர்களிடையே பிரச்சனை தொடர்ந்து கொண்டிருந்ததை உணர்ந்தான் ரத்தன்.. கார்த்திக்குக்கு பொய்யாக நம்பிக்கையளித்துக் கொண்டிருந்தான். காலம் அவர்களின் பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் என நம்பினான்… இரண்டு நாட்கள் முன்பு வரை.

நேற்றைய முன்தினம் கல்பனா கூப்பிட்டாள் ..

‘அண்ணா .. இந்த ஞாயிற்றுக்கிழமை உங்களுக்கு நேரமிருக்குமாண்ணா.. என்னை மினியாபொலிஸ் ஏர்ப்போர்ட்ல ட்ராப் பண்ண முடியுமா?’ என்றாள்.

‘தாராளமா .. வேர் ஆர் யூ கைஸ் கோயிங்?’

‘இல்லைன்னா நான் மட்டுந்தான் .. டாலஸ்ல ஒரு இன்டர்வியு.. அநேகமா கிடைச்சிடும்னு நினைக்கிறேன் .. அதான் எங்க தங்கறது என்னன்னு நேர்ல போய் பாக்கலான்னு …’

‘யூ மீன் யு ஆர் லீவிங் துலூத்?’

‘ஆமாண்ணா ..’

‘புரியலம்மா .. நீ மட்டும் தனியா போகப் போறியா?’

‘ஆமாண்ணா ..’

‘கிஷோர்?’

‘…’

‘அவனுக்கு இது தெரியுமா?’

‘தெரியும் ..’

‘போர்டல எழுதி வெச்சியா? இல்ல நேர்ல சொன்னியா?’

‘இல்ல .நேர்ல தாண்ணா சொன்னேன்.’

‘இஸ் ஹி ஓகே வித் தட்?’

‘பெரிசா எதுவும் சொல்லலை … ரெண்டு பிரெண்ட்ஸ் அட்ரஸ் கொடுத்தார்.’

‘எதுக்கு? அவன பத்தி நீயும், உன்ன பத்தி அவனும் கேட்டுத் தெரிஞ்சுக்கவா இந்த பிரெண்ட்ஸ்?’

‘……’

‘எங்க இருந்து வந்ததுமா உனக்கு இந்த தைரியம்? நான் உன்ன இன்னமும் ராசிப்பாளையத்தில பாத்த கல்பனாவாவே நெனச்சிட்டிருக்கேன்.

‘……’

‘உங்க வீட்டுக்கு தெரியுமா இது?’

‘……’

‘உடைஞ்சி போயிடுவாங்கம்மா அவங்க ..’

‘…..’

‘யு டூ ஒன் திங்க் .. இன்னமும் பெரிசா ஒன்னும் ஆயிடல … யூ திங்க் த்ரு டு நைட். நாளைக்கு இதே சமயத்தில போன் பண்ணு …இஃப் யூ ஸ்டில் வாண்ட் மீ டு ட்ராப் யு ஆன் சண்டே, ஐ வில் கம் ..’

ஜி.பி.எஸ் ‘யூ ஹேவ் அரைவ்ட் அட் யுவர் டெஸ்டினேஷன்’ என்றது.

கிஷோர் வந்து கதவை திறந்தான்.

‘வாங்க அங்க்கிள்..’

வீட்டில் சமையல் வாசனை தெரிந்தது. சின்னதாய் ஹுமிடிஃபையர் சத்தம் தவிர வீடே நிசப்தமாக இருந்தது.

‘உக்காருங்கண்ணா’ என சொல்லியவாறு தன் அறையிலிருந்து வெளியே வந்தாள் கல்பனா.

‘ஸோ .. நீங்க ரெண்டு பேரும் முடிவு பண்ணீட்டீங்க.. தட் இட்ஸ் நாட் கோயிங் டு வொர்க். அப்படித்தானே?’

‘இல்லண்ணா .. ஜஸ்ட் வான்டட் டு ட்ரை ஃபார் ஃபியூ மந்த்ஸ்.’

‘ஃபியூ மந்த்ஸ்ல என்ன நடக்கும்னு நினைக்கிறே?’

‘மே பீ .. இந்த செபரேஷன் ஏதாவது புரிதலைக் கொடுக்கும்னு’

‘புரிதல்?’ நிறுத்தியவன், ‘இந்த நேரம் உங்கண்ணன் இங்க இருந்திருந்தான்னா இந்த ஒரு வார்த்தைக்காகவே உன்ன கொன்னிருப்பான். பத்தடி ரூமுக்குள்ள இத்தனை நாள் வராத புரிதல் பிரிஞ்சி போய்ட்டா எப்படி வரும்னு நினைக்கிற?‘

‘……’

‘நீ என்ன சொல்ற கிஷோர்?’

‘எனக்கு என்ன சொல்றதுன்னு தெரில அங்க்கிள்.. இஃப் வீ மிஸ் ஈச் அதர் மே பீ வீ வில் ஃபீல் அபௌட் இட் ..’

‘பக்கத்தில இருக்கிறதனால அவளோட அருமை தெரியலேன்ற?’

‘…..’

‘ஓகே … வீ வில் டு திஸ்… இன்னைக்கு ஆஃப்டர் டின்னர் ஐ வில் டிராப் யூ அட் எ மூவி .. பக்கத்து பக்கத்துல உக்காந்திருக்கிற அந்த ரெண்டு மணி நேரத்தில உங்களுக்குள்ள மாற்றம் வரலைன்னா.. ரெண்டு ஜென்மம் ஆனாலும் வராது ..’

‘இல்லேண்ணா அதெல்லாம் வேண்டாம் ..’

‘பயப்படறியா .. அவன் மேல ரெண்டு மணி நேரத்தில காதல் வந்து .. பிளைட் டிக்கெட் வேஸ்ட் ஆயிடும்னு பயப்படறியா?

‘……’

‘ஐ நோ யூ போத் ஆர் நாட் கிட்ஸ்.. யூ ஆர் க்ரோன் அப் மெச்சூர்ட் அடல்ட்ஸ் .. யூ வோன்ட் ஃபால் ஃபார் மை கிட்டிஷ் ஐடியாஸ்.. பட் ஜஸ்ட் ஃபார் மை சேக்.. கடைசியா நீங்க கொஞ்ச நேரமாச்சும் ஒண்ணா இருக்கணும்னு ஆசைப்படறேன்.’

சாப்பிட்டு முடித்து அவர்கள் திரையரங்குக்கு போய்க் கொண்டிருந்தார்கள். ரத்தன் வண்டியோட்டிக் கொண்டிருந்தான்.

‘அடுத்த ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு சாதாரண தம்பதியா இருக்கப் பாருங்க … பாப்கார்ன் வேனுமான்னு கேளுங்க … முன்னாடி இருக்கவன் மறைக்கறான் .. ஹீரோ ஹேண்ட்சம்மா இருக்கான்.. ஹீரோயின் கண்ணு அழகா இருக்குன்னு ஏதாவது பேசுங்க .. நீங்க பிரிஞ்சிருக்கப் போற அடுத்த சில மாதங்கள் உங்களுக்கு ஒருத்தர ஒருத்தர் ஞாபகப்படுத்தப் போறது இந்த ரெண்டு மணி நேரம் தான்.’ என்றான் ரத்தன்.

தூலூத் 10 சினிமாவில், ‘சேஃப் ஹேவன்’ திரைப்படத்திற்கு டிக்கட் வாங்கிக் கொடுத்தான்.

‘திஸ் இஸ் சப்போஸ்ட் பீ எ ரொமாண்டிக் மூவி.. இன்னும் பத்து நிமிஷத்தில ஆரம்பிக்கப் போகுது .. ஸ்கிரீன் 6 .. நான் எதிர்ல தெரியிற சேம்பியன்ஸ் பார்ல இருக்கேன் .. கிவ் மீ எ கால் வென் த மூவி இஸ் ஓவர்.. என்ஜாய் இட் ..’ என சொல்லிச் சென்றான்.

பாரில் அமர்ந்திருந்த ரத்தன் வெளியே போய்க் கொண்டிருந்தவர்களைப் பார்த்தான். தரைக்காற்று சுழன்று சுழன்றடிக்க, வெளியே நடந்துக் கொண்டிருந்தவர்கள் முகத்தைப் பாதுகாக்க இப்படியும் அப்படியும் திருப்பியவாறு நடந்துக் கொண்டிருந்தனர். மூன்றாவது மொஹிட்டோ லேசாக சுயநினைவை பறித்துக் கொண்டிருந்தது.

இருவருக்கும் இவ்வளவு சொல்லி அனுப்பி இருந்தாலும் எதுவும் மாறப்போவதில்லை எனத் தோன்றியது ரத்தனுக்கு. அவர்கள் மீது கோபத்தை விட அனுதாபம் தான் அதிகரித்தது. நிஜமாகவே அவர்களுக்கு நீலத்தை விட்டால் வானில் ஏதுமில்லை என்பது புரியவில்லையோ எனத் தோன்றியது,

கார்த்திக்குக்கு என்ன சொல்வது?

அவன் அம்மாவுக்கு இதைத் தாங்கி கொள்ள முடியுமா?

நிலையில்லாமல் ஏதேதோ கேள்விகள் ஒடிக் கொண்டிருந்தன.

தியேட்டரை விட்டு சிவப்புச் சட்டையணிந்த ஒருவன் ஓடி வருவதைப் பார்த்தான். கோட் கூட போடாமல் வர்றான் .. இவனுக்கு நம்மை விட போதை அதிகமோ எனத் தோன்றியது ரத்தனுக்கு.. மீண்டும் இன்னொரு மொஹிட்டோ ஆர்டர் செய்தான்..

ஓரிரண்டு போலிஸ் கார்கள் சைரனுடன் சென்றன .. அடுத்த சில நொடிகளில் ஆம்புலன்ஸ் சத்தம் … சினிமாத் தியேட்டர் பார்க்கிங்கில் போலிஸ் கார்களும் ஆம்புலன்ஸ்களும் நுழைந்தன..

‘வாட் இஸ் ஹெப்பனிங் தேர்?’ பார் டெண்டரிடம் கேட்டான் ..

‘டோண்ட் நோ.. மஸ்ட் பீ சம்படி ஃபெல் சிக்?’ என கேள்வி தொனிக்கும் பதில் சொன்னான்.

சில நிமிடங்களில் மேலும் ஆம்புலன்ஸ், போலிஸ் கார்கள். இப்போது கூடவே ஃபையர் எஞ்சின்..

கோட்டை மாட்டிக் கொண்டே தியேட்டரை நோக்கி ஓடினான் ரத்தன் …

தியேட்டரை நெருங்கிய போது பெரிய கலவரம் போலத் தெரிந்தது ..

‘ஸ்டே பிஹைண்ட்… ஸ்டே பிஹைண்ட்… என ஒரு பொலிஸ்காரர் மக்களை உள்ளே செல்ல விடாது தடுத்துக் கொண்டிருந்தார் …

மேலும் பல போலிஸ் கார்கள் சைரனுடன் வர துவங்கியிருந்தன … ஸ்வாட் டீம் ஆட்கள் வந்திறங்கினர் … வானில் இரண்டு ஹெலிகாப்டர்கள் முளைத்து தியேட்டருக்கு மேல் நிலைக் கொண்டன …

‘தேர் இஸ் எ கன்மேன்.. ‘ வெளியே வந்த சிவப்புச் சட்டைக்காரன் கத்திக் கொண்டிருந்தான் .. ஸ்வாட் டீம் ஆட்கள் அவனை இழுத்துச் சென்றனர் …

ரத்தன் உள்ளே செல்ல முனைந்தான் … போலிஸ்காரர் தடுத்தார் …

‘ஐ ஹவ் மை ஃபாமிலி இன்சைட் ..’ கதறினான்.

‘ஸார் ..ஐ அண்டர்ஸ்டான்ட் … பட் ஐ கேநாட் லெட் யூ இன்’

பலர் பல கேள்விகளைக் கேட்க,

‘ஆல் வீ நோ இஸ் தேர் வாஸ் சம் கன் ஷாட்ஸ் இன் ஸ்கிரீன் சிக்ஸ். த ஸ்வாட் டீம் ஹேஸ் டு ஃபைண்ட் அவுட் …’

ரத்தனுக்கு சப்த நாடியும் அடங்கிப் போனது ..

கல்பனாவின் ஃபோனும், கிஷோரின் ஃபோனும் அடித்துக் கொண்டே இருந்தன .. யாரும் எடுக்கவில்லை .. ஒரு வேளை அவர்கள் இருவரும்….? ரத்தன் இப்பொழுது தெரிந்த, தெரியாத தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொள்ளத் தொடங்கியிருந்தான் … தான் தியேட்டருக்கு அனுப்பவில்லை என்றால் அவர்கள் எங்காவது எப்படியாவது உயிரோடு இருந்திருப்பார்களே .. தனக்கு ஏன் இந்த அதிகப் பிரசங்கித்தனம் எனத் தோன்றியது அவனுக்கு.

தொடர்ந்து ஃபோன் செய்துக் கொண்டே இருக்க, ‘ ஹலோ ..’ இறைச்சலிடையே ஒரு குரல் கேட்டது .. ‘ஹலோ கல்பனா?’

’ஹீ கில்ட் பீப்பிள் .. ஹீ கில்ட் பீப்பிள்’ என யாரோ ஒரு பெண் அலறினாள்.

‘டூ யூ சீ கல்பனா .. அன் .. அன் இண்டியன் கர்ள்?’ குழறினான்…

‘ஐ டோன்னோ . ஹீ கில்ட் பீப்பிள். ஹீ இஸ் க்ரேசி ..ப்ளீஸ் கெட் அஸ் அவுட்’ என அழுதாள்.

ரத்தன் கிஷோரின் நம்பருக்கு போன் செய்தான்.. மணியடித்துக் கொண்டே இருந்தது.. ரத்தனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. தலைக்குள் எதோ ஃபேன் சுத்துவது போலிருந்தது… ரத்தம் மண்டையில் ஓடுவது தெரிந்தது…. பார்வை மங்கியது .

ஒரு ஆம்புலன்ஸ் வாசலுக்கு நேராக நிற்க, நாலைந்துப் பேர் இறங்கி உள்ளே ஓடினர்.. மேலும் பல ஆம்புலன்ஸ்கள் நிற்க மேலும் பலர் உள்ளே ஓடினர்… கூட்டத்தில் இருந்தவர்களும் உள்ளே செல்ல முயற்சிக்க போலிஸார் அவர்களை பிடித்துத் தள்ளினர்.

‘மூவ் . மூவ்’ எனச் சொல்லிக் கொண்டே வெள்ளைத் துணியில் ரத்தம் தோய்ந்த ஒருவனை ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள்.. வலியில் துடித்துக் கொண்டிருந்தான் அவன்..

ஏண்டி இப்படி இருந்தீங்க . உங்களை நான் ஏன் அனுப்பினேன் என வாய் விட்டு அழுதான் ரத்தன்.

மேலும் சிலரை ஆம்புலன்சில் ஏற்றினார்கள். அந்த இடமே போர்க்களம் போலத் தோன்றியது.. பல நரக நிமிடங்களுக்குப் பிறகு சிலரை நடத்திக் கூட்டி வந்து ஆம்புலன்சில் ஏற்றினார்கள் .. மக்கள்.. தங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா எனப் பார்க்க. ஆம்புலன்சை சுற்றி மொய்த்தார்கள்.. ரத்தனும் முண்டியடித்தான்.. டீ.வி.க்காரர்கள் வேறு கேமராவைத் தூக்கிக் கொண்டு இங்கும் அங்கும் அலைந்தனர்..

வெள்ளைச் சட்டையில் ரத்தம் தோய்ந்த பெண், தலையில் ரத்தம் சொட்ட ஒரு இளைஞன் .. முகத்தில் கலவரத்துடன் நடுத்தர வயதுக்காரர் என பலர் வெளியே வந்த வண்ணமிருந்தனர்.. நடு நடுவே முகத்தையும் சேர்த்து மூடிய சிலர் ஸ்டெரெச்சர்களில் .. கிஷோராகவோ , கல்பனாவாகவோ இருக்குமோ என ரத்தனுக்கு பதைபதைத்தது… நேரம் ஓடிக் கொண்டிருந்தது.. இப்போது காயமில்லாத சிலர் வரத் தொடங்கியிருந்தனர்.. கடவுளே.. கடவுளே என சொல்லிக் கொண்டிருந்தது ரத்தனின் மனது..

தூரத்தில்… கிஷோரா அது? நுனிக்காலில் நின்று எட்டிப் பார்த்தான் .. கிஷோர் அணியும் தொப்பி மாதிரி தெரிந்தது .”கிஷோர் . கிஷோர்” எனக் கத்தினான் ரத்தன். இப்போது வாசலின் கண்ணாடிக் கதவை தாண்டி வந்திருந்தான் அவன் . கிஷோரே தான் .கல்பனா? மறைத்த கூட்டத்தினரை தள்ளிச் சென்று பார்த்தான் ரத்தன்..

முப்பதடி தூரத்தில் .. கிஷோரி்ன் இடது கையை இறுக்கமாகப் பற்றி.. அவன் தோளில் சாய்ந்தவாறு மயக்க நிலையில் கல்பனா. நடந்து வந்துக் கொண்டிருந்தாள்.. கிஷோரின் வலது கை அவளின் கன்னத்தை தட்டிக் கொண்டிருக்க .. அவள் காதில் ஏதோ சொல்லியவாறு வந்தான் கிஷோர் .

ரத்தனுக்கு இப்போது அவர்களிடையே ஒரு புதிய காமனாலிட்டியும், புரிதலும் முளைத்திருந்தது தெரிந்தது!

–    மர்மயோகி.

Comments (3)

Trackback URL | Comments RSS Feed

  1. Anand says:

    Awesome! You kept me in the story all the way to the end. Please keep writing.

  2. Marmayogi. says:

    Thanks much for reading and commenting on it Anand 🙂

  3. Balaji says:

    Good story

Leave a Reply to Anand Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad