\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

தெய்வத் தமிழிசை – பாகம் 3

( * பாகம் 2 * )

“மனஸ்சேன லக்ணம் குரோரங்ரி பத்மே

ததஹ் கிம்  ததஹ் கிம்  ததஹ் கிம் ததஹ் கிம்”  

என்ற ஆதி சங்கரரின் குரு அஷ்டகத்தின் வரிகளைத் துணைக் கொண்டு, குருவின் பாதங்களை சரணம் கொண்டபடி இந்த கட்டுரையைத் தொடங்குவது உசிதம் என நினைக்கிறேன்.  எவ்வளவு பெயர், புகழ், திடகாத்திரமான சரீரம், பணம் இருப்பினும் மனமானது குருவின் திருவடிகளை அடையாவிடில் என்ன பயன் என்ன பயன் என்ன பயன்.( ததஹ் கிம்  ததஹ் கிம்  ததஹ் கிம்  )

கர்நாடக சங்கீதத்தில் ஒரு குருவின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பது நாம் அனைவரும் அறிந்தது. “கருகைன ஹரித்ரோக ககனமு கோட்ட சத் குரு லேக எடு வன்டிஎன்று தியாகராஜர் எழுதும் பொழுது, அதை பாடும் ஒவ்வொருவரின்  மனமும் தங்களுடைய குருவின் சிந்தனையில் கரையும் என்பது சத்தியம்.

லயசாரம் மற்றும்க்ளோபல் ஆர்கனைசேஷன் பார்  டிவினிட்டி “ (Global organisation for divinity) இணைந்து நடத்தி வரும் “ Spirits of margazhi 2018 தெய்வத் தமிழ் இசை “; நிகழ்ச்சியின் கடைசி இரண்டு வாரங்கள் கச்சேரிகளில் மினசோட்டா காற்றில் சங்கீதத்தையும் , மனதில் இறையையும், குருவையும் நிறைத்தது என்று சொன்னால் அது சத்தியம்.

சனவரி 6 அன்று தியாகராஜ ஆராதனையோடு தொடங்கியது நிகழ்ச்சி. அதை தொடர்ந்து “நாத தனுமனிஷம் ” என்று செல்வன் திரு வைபவ் ஐயரின் வேணு காண புல்லாங்குழல் கச்சேரி . “ப்ரணமாம்யஹம்” என்று தொடங்கி, “தில்லானாவில்” முடித்த வைபவின் இசை காதுகளுக்கு இதமான ரீங்காரமாக இருந்தது. “சாமஜ வர கமனா” வில் சரணத்தில் அந்த வேணு காண முரளி போன்றே இசைத்தார் வைபவ். சரி சம இணையாக செல்வன் ஸ்ரீநாத் ஹரிஹரன் வயலினில் அசத்தினார். இவ்விருவரோடு திரு சங்கரன் பட்டதிரிபட் மிருதங்கத்தில் , திரு,பாலாஜி சந்திரன் அவர்கள் கடத்திலும் லயம் சேர்த்தனர்.

தொடர்ந்து வந்த முத்தான தியாகராஜர் கிருதிகளை பாடிய அத்தனை இசை கலைஞர்களும் தியாகராஜர் வைபவத்துக்கு அழகு சேர்த்தனர்.

இசையிலும் , பக்தியிலும் மனம் நிறைந்து நெகிழ்ந்த நேரத்தில்இன்னமும் என் மனம் அறியாதவர் போல இருந்திடல் நியாமா ?” என்று  தொடங்கிய செல்வி கௌரி சேலம் அவர்களின் கச்சேரி நம் மனம் உருகி கேட்பது போலவே இருந்தது .கண்ணனைக் கண்டாயா ? , என்ன சொல்லி அழைத்தால் வருவாயோ ” என்று பக்தி ரசத்தோடே நகர்ந்தது.

மனதிற்கு அறிவுறுத்தும்படி  ” பேசும் மொழிகளில் எல்லாம் மௌன மொழியே நன்றென்று இரு ” என்று இசைத்த பொழுது இணையாக மிருதங்கமும் அமைதியான தருணம் “மனதின் ப்ரஹ்மம்” அதனை நமக்கு உணர்த்தியது நாமம் ஒன்றே போதுமேஎன்ற கச்சேரியில் செல்வி. கௌரி யும், வயலினில் திரு சசியும், மிருதங்கத்தில் திரு ஸ்ரீராம் நடராஜன் அவர்களும் நம்மை பக்தி பரவசத்தில்  திளைக்கச் செய்தனர்.

சிறியோருக்கும், பெரியாருக்கும் இசைத்த  மதுர கீதங்கள் மிக இனிமை. சனவரி 13 அன்று நடந்தபாடித் திறிவாய் மனமேகச்சேரியில் குமாரி. மேகனா மூர்த்தி மனதிற்கு உணர்த்தும் பாடல்களை பொருத்தமாய் பாடினார். “இன்னமும் என் மனம் அறியாதவர் போல என்று தொடங்கி, “நீயே வாழ்வின் ஜீவாதாரம்” என்று சரணாகதியோடு வலியுறுத்தினார் .

பின்,  “அன்று செயல் அறிந்தல மரு பொழுது அவன் நாமம் நாவில் வாராதே ஆதலினால் மனமே இன்றே சிவா நாமம் சொல்லி பழுகுஎன்று இசைத்த பொழுது ,இணையே திருமதி அபர்ணா அவர்களின் வயலினும், திரு ஸ்ரீராம் நடராஜன் அவர்களின் மிருதங்கமும் பக்தியோடு இசை கூட்டியது. தமிழின் இசையோடு தொடர்ந்து பாடல்களில் காதலையும், கனிவையும், கருணனையும் உணர்ச்சியில் சேர்த்தார்.  

“நின்னையே எண்ணி நிதம் ஏங்கிடும் என்னை ஆள வந்த மன்னா மணி வண்ணா “ என்று ஏக்கத்துடன் முடித்த பொழுது , நம் மனம் இறை அன்பை தேடி முழுவதும் அலைந்து சரணாகதி அடைந்தது. “சர்வாத்ர சதா ஹம்சத் தியானம் கர்தவ்யம் போ முக்தி நிதானம்” என்று மனதால் பாடிய மஹானின் வரிக ளை நினைவில் கொண்டு, இந்த ஆண்டின்  தெய்வத் தமிழ் இசையின் முடிவில் “சர்வம் பிரம்ம மயம்” என்று உணர்ந்தோம்

நித்திய வாழ்வின் அத்தனை வினாக்களுக்கும், துயரங்களுக்கும், மகிழ்வுக்கும் இறைவனின் செயல் தான் காரணம் என்று உணரும் பொழுது, “அந்த இறைவன் எங்கு “என்ற தேடலின்  பதிலாக, “மனசி பாவயாமி பர தேவதாம் ” என்று மனதில் உள்நோக்கி பயணிக்கும் நமக்கு, மீண்டும் அம்மனத்தை குருவின் திருவடிகளில் சேர்க்காவிடில் வேறு “என்ன பயன் என்ன பயன் என்ன பயன்.( ததஹ் கிம்  ததஹ் கிம்  ததஹ் கிம்  )” என்ற முதல் வரிகளிலேயே வந்து நிற்கிறோம்.

கச்சேரிகளை ஒருங்கிணைத்த அனைவருக்கும், இசையில் மகிழ்வித்த அனைவருக்கும், உழைத்த தன்னார்வலர்களுக்கும், ரசித்த ரசிகர்களுக்கும் குருவின் பேரருள் கிடைக்கும் என்பது சர்வ நிச்சயம்.

குருவின் திருவடிகளே சரணம்.

லட்சுமி சுப்பு –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad