\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பௌவெள 2018-வசிப்பி கலாச்சார விழா

பூர்வீக மக்கள் மிதேவாகட்டன் சூ சமூக வசிப்பி 2018 Mdewakanton Sioux Community Wacipi

உங்கள் அனைவரையும் நல்லிதயத்துடனும், இதமான  கை குழுக்களுடனும் வரவேற்கிறோம் என்றது மினசோட்டா மாநில சாக்கோப்பி நகர  மிதேவாகட்டன் பூர்விகத்தினர் சமூகம். இது வருடா வருடம் கோடை முடிவில் ஆகஸ்ட் மாத நடுவில் வரும் வார இறுதி மூன்று நாட்கள் நடைபெறும் நடன உற்சவம் ஆகும். இம்முறை ஆகஸ்ட் 17, 18, 19 ஆம் தேதிகளில் இந்நிகழ்வு நடை பெற்றது.

வசிப்பி என்றால் என்ன?

வசிப்பி அல்லது பெளவெள (PowWow) என்பது வாழ்வினைக் கொண்டாடும் பூர்வீக அமெரிக்க மக்களின் உற்சவம். சூ சமூகத்தினரின் (Sioux community) லகோட்டா மொழியில் வசிப்பி என்பது ” நாம் ஆடுகிறோம்” என்று பொருள் தரும்.

இங்கு என்ன தான் நடக்கும்?

இந்த மிதேவாகட்டன் வசிப்பியானது பூர்வீக வாசிகளின் நடனப் போட்டியாக அமையும். மூன்று நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டிகளில் கனடா, அமெரிக்கா, மெக்ஸிக்கோ போன்ற நாடுகளிலிருந்தும், அமெரிக்க பூர்வீகர் வாழும் இதர நாடுகளிலிருந்தும் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என பலரும் கலந்துகொள்வர் .

போர் வீரர்கள் உடையணிந்த அணிவரிசையினர், ‘கிராண்ட் என்ட்ரி’ எனப்படும் பெரும் உள்ளிடலில் உள்ளே வந்ததும், பல்வேறு வண்ணக் கொடிகளுடன் அணிவகுப்பு நடைபெறும்.  அதனை அடுத்து வருடாந்த பூர்வீக இளம் அரச, அரசிகள் அறிமுகம், பறை இசை எனத் தொடரும். போருக்கு முன்னரான பூர்வீக வழிபாட்டின் வெளிப்பாடான இதில் , போர் தம்பட்டங்களையும், பறை இசையையும் மாறி மாறி இசைப்பர்.

ஒருபுறம் பறை ஒலிக்க, மறுபுறம் உரத்த குரலில் இசையாளர்கள் தமிழ் ஒப்பாரி மாதிரியான தொனிப்பில் பாடுவர். நம்மில் பலருக்கு, இது ஒரு வகையில் கரகம், காவடியாட்டம் போன்ற உணர்வை ஞாபகப்படுத்தலாம். இம்முறை பூர்வீக சமூகத்தினரின் பல இசைக் குழுக்கள் தொடங்கப்பட்டன. பூர்வீக அமெரிக்கர்களின் வாழ்க்கை முறையினை அறிந்து கொள்ள இது போன்ற விழாக்களுக்குச் செல்வது பெரிதும் உதவும்.

— யோகி.

Tags: , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad