\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கலைஞர் எனும் பிரமிப்பு

அண்மையில் காலமான, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி, அரசியல், கலை, இலக்கியம் எனப் பல துறைகளில் தவிர்க்க முடியாத தலைவராக, எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் புகழ் பெற்றுத் திகழ்ந்தவர்.

அவரைப் பற்றிய குறிப்புகள் இங்கே குறுக்கெழுத்துப் புதிர் வடிவில் தரப்பட்டுள்ளன. விடுவித்து மகிழுங்கள்!

இடமிருந்து வலம்

  1. கருணாநிதியின் தாயார் பெயர்    (5)

  2. சாதி வேறுபாடற்ற சமூகம்,, சுமூகமாக  வாழ்ந்திட கருணாநிதி முன்னெடுத்த அரசுக் குடியிருப்புத் திட்டம் (8)

  3. தனது பதினெட்டாம் வயதில், திராவிட இயக்கக் கொள்கைகளைப் பரப்பிட அவர் தொடங்கிய தமிழ் ஏடு. (4)

  4. திராவிட இயக்கத் தலைவர்களுள் ஒருவரான இவரது பேச்சால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் கருணாநிதி. இவரது பெயரை தன் பிள்ளை ஒருவருக்கும் வைத்து மகிழ்ந்தார் அவர். (4)

  5. கருணாநிதியின் இயற்பெயர் (8)

    18. இவரது ஆட்சியில் 1972 இல் துவங்கப்பெற்ற தமிழ்நாடு மாநில தொழில் முன்னேற்றக் கழகம் (4)

    21. தனது பத்திரிகை வாயிலாக 7000க்கும் கடிதங்கள் எழுதிய கருணாநிதி தொண்டர்களை உடன்பிறப்பே என்று விளிப்பதற்கு முன்னர் அவர்களை இப்படி அழைத்து கடிதம் எழுதினார். (3).

     25.  போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வென்ற கருணாநிதி அதிகமாகப் போட்டியிட்ட தொகுதி இது  (6)

     29. சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டையொட்டி 196௮ இல் கருணாநிதியின் தலைமையில் திறக்கப்பட்ட இவரது சிலை பின்னர் அகற்றப்பட, கருணாநிதி மீண்டும்  முதல்வராக வந்தபொழுது நிறுவப்பட்டது. (4)

வலமிருந்து இடம்

  1. மாநிலத்திலேயே அதிக அளவான வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்ற தொகுதி. (5) 
  2.  நெஞ்சுக்கு நீதி – கருணாநிதியின் சுய வரலாற்று நூல் (7) 
  3. இத்தொலைக்காட்சி தொடர்தான் கருணாநிதி எழுதிய கடைசி தொலைக்காட்சி தொடர். (5) 

    23. ஹிந்தி மொழித் திணிப்பை எதிர்த்து கருணாநிதி ரயில் மறியல் செய்த இடம் – நடுவில் ஓர் ஒற்றெழுத்து விடுபட்டுள்ளது. (5)

    24. சிலப்பதிகாரக் கதாபாத்திரங்களைக் கொண்டு கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவான தமிழ்த் திரைப்படம். (5)

    28. பள்ளி நாட்களில் கருணாநிதி வெளியிட்டு வந்த கையெழுத்துப் பிரதி பத்திரிகை (6)

மேலிருந்து கீழ்

  1.  கருணாநிதி அரசியலில் தொடக்க நாட்களில்  சார்ந்திருந்த கட்சி (6)

  2. கலைஞர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தொகுதி (5)

  3. கருணாநிதி எழுத்தில் நூலாக வெளியாகி, பின்னர் திரைப்படமாக உருவாகியது வரலாற்றுக் கதை.  (8)

  4. எம்.ஜி. ஆர் அவர்களுக்கு கலைஞர் அளித்த பெருமைக்குரிய பட்டம். (8)

  5. இவரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட கலைஞர், அவர் நினைவாக நூலகம் ஒன்றை உருவாக்கி, தன் தலைவனது பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.  (3)

  6. இவர் முன்மொழிந்த மூன்றாம் பாலினத்தவருக்கான இந்தப் பெயர் தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று பரவலாகப் பயன்படுகிறது.(7) (பன்மையில் தரப்பட்டுள்ளது)

     15. வள்ளுவர்க்குப் புகழ் சேர்த்திட  கருனாநிதி முதலமைச்சராக இருந்தபோது முனைப்புடன் 133 அடியில் உருவாக்கிய திருவள்ளுவர்  சிலை இருக்கும் மாவட்டம்(7)

     16. கலைஞர் தனது மூத்த மகனைத் திரைப்படக் கதாநாயகனாக  அறிமுகம் செய்த படம் (7)

     17. கருணாநிதி முதன் முதலாக எழுதிய நாடகம். பின்னர்  இதற்கு நச்சுக்கோப்பை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  (7)

      19. விவசாயப் பண்ணையார்களின் அநியாயப் போக்கினைக் கண்டித்து கலைஞர் போராடிய இந்த இடம் வரலாற்றில் புகழ் பெற்றது. (6)

     20. தனது ஆட்சிக்காலத்தில் சென்னையில் இவற்றைக் கட்டிய பொழுது ஊழல் நடைபெற்றதென 2001 ஆம் அதிகாலையில் கைது செய்யப்பட்டார் கலைஞர் (5)

     22. தென்பாண்டிச் சிங்கம் என்ற நாவலுக்காகக்  கலைஞருக்கு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்  இந்த விருதினை வழங்கியது. (5)

கீழிருந்து மேல்

    14. கட்சி உருவானபோது முதன்மைக் கொள்கையாக உருவான இந்தக் கருவுருவைக் கடைசி நாள் வரை போற்றி வந்தார் கலைஞர்.(5)

  1. சிவாஜி கணேசன் மற்றும்  கலைஞர் கருணாநிதி கூட்டணியில் ,  சமூக அவலங்களை வீதிக்கு கொண்டு வந்த  படம். (5)

  2. கலைஞர் வசனமெழுதி வெளிவந்த முதல் தமிழ்த்திரைப்படம் (5)

   26 திருக்குறள் ஒவ்வொன்றையும் காட்சிப்படுத்தி, கலைஞர் தீட்டிய நூல் (6)

  1. கருணாநிதியின் அரசு கல்வியில் பொதுத்தன்மை வேண்டி உருவாக்கிய பாடமுறை. (5)

 

விடைகள் இங்கு காண்க

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad