\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

காளிங்க மர்த்தனம்!!

Filed in கவிதை, வார வெளியீடு by on September 2, 2018 0 Comments

கண்களுக்கு இனியவனாம் கண்ணன்
காட்சிக்கு இனியதுவாம் கடவுள்
கண்களால் ரசிப்பதுவோ கண்ணன் – அகக்
காட்சியாய்த் தொழுதிடவோ கடவுள்

ஆயர்பாடி மாளிகையில்  அயர்ந்திருந்த கண்ணனவன்
வாயதனில் மண்ணுண்டு தேயத்தைக் காட்டியவன்
மாயங்கள் பலசெய்து  நியாயத்தை நாட்டியவன்
தாயங்கள் ஒழித்தழித்த தர்மங்கள் மீட்டவனவன்!!

காளிங்கன் என்றொரு கடும்விஷப் பாம்பு
கலக்கிய விஷமது யமுனை வியாபித்து
காகம் குருவிமுதல் கருடன் போன்றவையும்
கடல்வாழ் உயிரினமும் கருக்கிச் சரித்தது!!

இன்னுயிர் அனைத்தும் இன்னலைத் தழுவ
மன்னுயிர் பலவும்  மாண்டொழிதல் மாற
தன்னுயிர் காத்திடத் தாள்பணிந்து வணங்க
மின்னலும் மழையுமாய் மேலிருந்து இறங்கினான்!

பிள்ளைகள் சிலரும் பொழுதுபோக்காய்ப் பந்தாட
பிடித்து ஆடுகையில் பந்ததுவும் நதிவீழ
பிழையறியாய்ச் சிறுவனுமாய்ப் பரந்தாமன் நதிபுக
பிழைப்பானோ இவனென்று பிள்ளைகளும் கலங்கிநிற்க

நாகமது முகம்விரித்து நதிமேல் எழுந்தாட
நன்னிலம் வாழுமக்கள் நடுங்கியே எழுந்தோட
நாயகனாய் வந்துதித்து நற்சிறு பாலகனும்
நாகத்தின் மேலமர்ந்து நதியினுள்ளே மறைந்திட்டான்!

தண்ணீரின் உள்சென்று நாழிகைகள் சிலவோட
தரைமேலே நின்றமக்கள் தவித்துக் கைபிசைய
தளிர்போன்ற பாலகனோ தயைகூர்ந்த நகையுடனே
தருக்கான காளிங்கனின் தலைமீது நடமாடினான்!!

காளிங்க அரக்கனவன் காட்டிய கொடிமைகளும்
காலங்களாய் அவன்செய்த கருணையற்ற செயல்களும்
கால்களைத் தலைவைத்து களியாட்டம் செய்துமங்கே
காலனாய் மாறிவந்தே களைந்தங்கே உய்வித்தான்!!

பாலகன் ஒன்று படமெடுக்கும் பாம்பின்
காலனாக மாறிய கதையதின் விளக்கம்
மானிட மமதையின் தலையேறித் தாக்குதல்
வானகம் புகுதற்கு வளமான வழியென்பதேயாம்!!

வெ. மதுசூதனன்.

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad