\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பட்டாசில்லா தீபாவளி!!

பஞ்சணையில் நாம்துயில
பஞ்சத்திலே தனையிழந்து
பரிதவிக்கும் நிலையினிலே
பலகுடும்பம் இருக்குதிங்கே!

பட்சணங்கள் இனிப்புகளென
பலவிதமாய்க் கொண்டாடுகையில்
பசிக்கொடுமை தாங்காது
பட்டிதொட்டி துடிக்குதங்கே!

பட்டங்கள் பெற்றிட்ட
பட்டிணத்து நீதியரசர்கள்
பட்டாசுக்கு விதியமைக்க
பட்டதுயர் விளக்கிடுமுன்

பச்சிளஞ் சிறார்களும்
பள்ளிக்குச் சென்றிடாமல்
பட்டாசுத் தொழில்புரிவது
பலகாலம் நடப்பதென்று

பக்குவமாய் உணர்ந்துநாமும்
பழிபாவம் ஒன்றறியா
பச்சிளம் பாலகரின்
படிப்பினை நெஞ்சிலிட்டு

பலர்பேசும் வம்பதனை
பயனில்லையென ஒதுக்கிவைத்து
பட்டாசில்லா தீபாவளியை
பண்போடு கொண்டாடிடுவோம்!

வெ. மதுசூதனன்

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad