\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

2019 உலகத் தாய்மொழித் தினப் பேச்சுப் போட்டி

உலகத் தாய்மொழி தினத்தையொட்டி,  ஃபிப்ரவரி 23ஆம் தேதியன்று ஹாப்கின்ஸ் வெஸ்ட் ஜூனியர் பள்ளி வளாகத்தில் இளையோருக்கான பேச்சுப் போட்டியை மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளி நடத்தியது. இந்தப் போட்டியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, கொடுக்கப்பட்டிருந்த தலைப்புகளில் அழகாகப் பேசினார்கள். ஒவ்வொரு வருடமும் இதில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், அதில் ஆங்கிலக் கலப்பு பெருமளவு குறைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

நான்கு பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்கள் இறுதியில் அறிவிக்கப்பட்டனர். கூடவே, இதற்கு முன்னால் நடந்த பெரியோர்களுக்கான கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு,

  • சரவணகுமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad