\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

லெமுரியா

Filed in இலக்கியம், கட்டுரை by on February 28, 2015 0 Comments

lemuriya_620x443லெமுரியா பற்றி ஏற்கனவே பல விடயங்களைப்  பனிப்பூக்கள் இதழ்களில் பார்த்திருக்கிறோம். இந்தக் கட்டுரையில் லெமுரியா என்ற கண்டம் பற்றிய மூல வரலாற்றைப் பார்க்கலாம்.

சுமார் 19ம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவிற்குத் தென்கிழக்கில் உள்ள மடகாஸ்கர் என்ற தீவில் லெமுர் என்ற விலங்கு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த விலங்கு மனிதனுக்கும் குரங்கிற்கும் பொதுவான ஒரு மூலமாக இருக்கலாம் என்று விலங்கியல் வல்லுனர்களால் நம்பப்பட்டது. இந்த வகை விலங்குகள் பார்ப்பதற்கு 50% குரங்கு, 25% மனிதன், 10% பூனை, 15% அணில் போன்று தோற்றமளிக்கும். இந்த விலங்குகளில் பல வகைகள் இருந்தாலும் அதில் Eulemur என்ற வகைதான் இனக்கலப்பு இல்லாத வகையைச் சார்ந்தது. இவ்வகை விலங்குகள் மடகாஸ்கரில் மட்டுமே காணப்பட்டதாக நம்பப்பட்டது. மடகாஸ்கருக்கு மிக அருகில் உள்ள ஆப்பிரிக்காவில் கூட இது  காணப்படவில்லை.

ஆனால் தமிழகத்தில் நீலகிரி மலைச்சாரலில் இதன் படிமங்கள் கண்டறியப்பட்டது. மடகாஸ்கருக்கு மிக அருகில் உள்ள ஆப்பிரிக்காவில் இல்லாத இந்த வகை லெமுர் இனம் தமிழகத்தில் இருந்திருக்கின்றது. இதன் அடிப்படையில் தமிழகத்திற்கும் மடல்கசங்கா இலைகளை உடைய இடமான மடகாஸ்கருக்கும் இடையே ஒரு நிலப்பரப்பு இருந்திருக்க வேண்டும் என்ற கோட்பாடு உருவானது. இந்த நிலப்பரப்பிற்கு லெமுரியா என்று பெயர் கொடுக்கப்பட்டது. இந்த  காலக்கட்டத்தில் தான் கடல் கொண்ட தென்னாடு , குமரிக்கண்டம் என்பது போன்று கொள்கைகள் தமிழ் அறிஞர்களால் முன் மொழியப்பட்டது. இந்த இரு கொள்கைகளும் சம கால அளவில் ஒரே இடத்தைப் பற்றி இருந்ததாலும் லெமுரியாதான் குமரிக்கண்டம், கடல்கொண்ட தென்னாடு எனத்  தமிழறிஞர்களால் உரக்கச் சொல்லப்பட்டது.

மடகாஸ்கரில் வாழும் லெமுர்கள் மரத்தின் இலைகளுக்குப் பின் மறைந்து வாழும் தன்மை உடையவை. மாசே விக்டர் அவர்களின் கருத்துப்படி இலை மற்றும் மறை என்ற வார்த்தைகளின் கூட்டுச் சொல்லே மருவி இலெமர் என்று ஆகியிருக்கும் என்ற  வாதத்தை முன் வைக்கின்றார்.

இலைகளுக்குப் பின் மறைந்து வாழும் விலங்கு இலெமுர் ஆகியது போல தண்ணிருக்கு அடியில் மறைந்து இருக்கும் இந்த கண்டத்திற்கு லெமுரியா என்று பெயர் வைக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.

இந்தக் குமரிக்கண்டம் சுமார் 3000 கிமீட்டர் உள்ளடக்கியதாக இருந்திருக்கின்றது. கடைச்சங்க நூல்களில் இருந்து இந்தக் குமரிக் கண்டத்தில் குமரிக்கோடு என்ற பெரும் மலைத்தொடர் இருந்திருக்கின்றது என்றும் இந்த மலைத் தொடரில் பிறந்து குமரிக் கண்டத்தை பஃறுளி ஆறு மற்றும் குமரி ஆறு என்ற இரு ஆறுகள் வளப்படுத்தியது என்றும் அறியப்படுகிறது. இதைப் பற்றிய செய்திகள் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றது.

பஃறுளி யாற்றுடன் பன் மலை அடுக்கத்துக்

குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு,

தென்திசை ஆண்ட தென்னவன் வாழி

                                                                                    (சிலப்பதிகாரம்)

முந்நீர் விழாவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி

(புறநானூறு)

தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும்,

(அடியார்க்கு நல்லார்)

மேலும் இங்கு ஏழ்பின்பாலை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்தெங்க நாடும், ஏழ்குறும்பனை நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குன்றநாடும் என்னும் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்த செய்திகள் இலக்கியங்களில் இருந்ததாகத் தெறிகின்றது.

குமரிக்கண்டம் இருந்தது என்போரும் அவ்வாறு ஒன்று இல்லவே இல்லை என்போரும் அவரவர் வாதத்தை நீட்டி முழக்கிக் கொண்டிருப்பது ஆத்திக நாத்திக வாதத்தைப் போன்றே முடிவில்லாமல் சென்று கொண்டுள்ளது.

-சத்யா-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad