\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மரவள்ளிக்கிழங்குப் பொரியல்

Filed in அன்றாடம், சமையல் by on October 3, 2016 2 Comments

fried_cassava_620x802

வட அமெரிக்காவில் கூதல் காற்று அடிக்கத் தொடங்குகிறது, ஆமாம் இலையுதிர்காலத்தை அணுகுகிறோம் என்பதற்கான அறிகுறிகள் பல. எனவே படிப்படியாக நமது உடல் குளிரைத் தாங்கவும்,  நாக்குகள் நல் உருசி பெறவும் நாடுவது கொழுப்பு, எண்ணெய் சார்ந்த தின்பண்டங்களே.

குளிர்ப்பிரதேசங்களி்ல் வாழ்பவர் பருவகாலத்தைப் பொறுத்து பொரித்தல், அகலடுப்புச் சமையலில் (oven baking) நாட்டம் கொள்வது இயல்பு. இந்தக் காலகட்டத்தில் சூடான சோற்றிற்கும், சுகமான ஒடியல்  மாக்கூழிற்கும், தனியாகக் கொறித்திடவும் சுவையானது மரவள்ளி்க்கிழங்குப் பொரியல்.

தேவையானவை

1 – முழு மரவள்ளிக் கிழங்கு

1 – நீளமான பச்சை மிளகாய் – சிறுதுண்டுகளாக நறுக்கவும்

3 – சின்ன வெங்காயம் அரிந்து எடுத்துக் கொள்ளவும்

1 – கிளை கறிவேப்பிலை

1/2 – 1 கரண்டி கடுகு

1 கரண்டி சமையல் எண்ணெய் (தனியாக)

பொரி்க்கத் தேவையான அளவு சமையல் எண்ணெய்

தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

மரவள்ளிக்கிழங்கைத் தோல் உரி்த்து, சிறு சீவல் துண்டுகளாக அரிந்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து மரவள்ளிக் கிழங்குத் துண்டுகளை உப்பு தண்ணீரில் பாதிப் பதத்திற்கு அவித்து எடுத்துக் கொள்ளவும். பாதிப் பதம் என்பது மரவள்ளித் துண்டுகளைப் பிசைந்தால், அவை நடுவில் சற்று வெண்மையைக் காண்பித்தலும், விரலால், அல்லது கரண்டியால் அழுத்தும் போது முழுமையாகப் பசையாக மாறாது இருப்பதே ஆகும்.

அவித்த பின்னர், எஞ்சிய நீரை வடித்து துண்டுகளை எடுத்துக் கொள்ளவும். அடுத்து வாணலியில் எண்ணெய்விட்டுப் பொன்னிறமாகும் வரை பக்குவமாகப் பொரித்தெடுக்கவும்.

பொரியல்களைச் சூட்டோடு சூடாக மிளகாய்த்தூள் சேர்த்து, எண்ணெய் வடிதாளில் வடித்து சூடாறவிடவும்.

அடுத்து பச்சை மிளகாய்,வெங்காயம்,கடுகு மற்றும் கறிவேப்பிலை பொரித்து எடுத்து மரவள்ளிப் பொரியலுடன் கலந்து பரிமாறவும்.

தொகுப்பு – யோகி

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. ராஜேஷ் பிள்ளை says:

    அருமை. மின்னெசோட வில் எங்கு கிடைக்கும்? சில வருடங்களுக்கு முன்னர் இந்திய மளிகை கடைகளில் பார்த்திருக்கிறேன். கன்னியாகுமரி பக்கம் ‘மரச்சீனி கிழங்கு’ என்றும் ‘கப்ப கிழங்கு’ என்றும் அழைப்பர்.மாவுச்சத்து மிகுந்தது.

    • மினசோட்டாவில் மரவெள்ளிக் கிழங்கு கீழ்த் தரப்புட்டுள்ள கடைகளில் கிடைக்கும்

      1 – Dragon Star Oriental Foods – 633 W Minnehaha Ave, St Paul, MN 55104
      2 – Dragon Star Supermarket – Parksquare Shopping Center, 8020 Brooklyn Blvd, Brooklyn Park, MN 55445
      3 – Sun Foods – 544 University Ave W, St Paul, MN 55103
      4 – Groceries of the Orient – 3101 E Hwy 13, Burnsville, MN 55337
      5 – Shuang Hur Oriental Market – 2710 Nicollet Ave Minneapolis, MN 55408
      6 – Asian Food Market – 2105 Cliff Dr # 7, Eagan, MN 55122
      7 – Cub Foods

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad