Top Add
Top Ad

கவிதை

கனவுகள்

Filed in கவிதை, வார வெளியீடு by on September 16, 2018 0 Comments
கனவுகள்

ஆழ்மனதில் அமிழ்ந்திருக்கும், நிகழ்வுகளும் நினைவுகளும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் எண்ணங்களின் வண்ணங்களும் கற்பனையின் சிற்பங்களும் அசைந்தெழுந்து மலர்ந்திடுமே ஆழ்ந்துறங்கும் நித்திரையில், கனவுகளாய்!   மனங்களுக்கு மகிழ்வு தரும் கனவுகள் உண்டு மனங்களையே கலங்க வைக்கும் கனவுகளும் உண்டு கடமைகளை உணர வைக்கும் கனவுகள் உண்டு – மன குழப்பத்திற்குத் தீர்வு தரும் கனவுகளும் உண்டு வீரதீரச் செயல் புரியும் கனவுகள் உண்டு வீறிட்டுக் கதற வைக்கும் கனவுகளும் உண்டு   கனவுகளில்…..   இன்பங்களில் திளைக்கலாம் நினைத்ததெல்லாம் அடையலாம் […]

தொடர்ந்து படிக்க »

பரதேசிகள்

Filed in கவிதை, வார வெளியீடு by on September 16, 2018 0 Comments
பரதேசிகள்

நாற்றங்காலில் புற்களுக்கிடையில் முளைத்திருக்கும் நாற்றுகளைத் தப்பாமல் எடுத்து முடிபோடுவார் தாத்தா நடவுநட்டு மீந்த நாற்றுகளை யாருக்காவது தானமளிப்பர்  விவசாயிகள் நெற்கட்டுகளைத் தூக்க இன்னும்நாங்கள் வளராததால் தப்புகதிர்களைப் பொறுக்கும் வேலை எங்களுக்கு களத்துமேட்டில் சிதறிக்கிடக்கும் நெல்மணிகளை ஒன்றுவிடாமல் பொறுக்கிடுவாள் பாட்டி கமிட்டியில் அநியாய விலைக்கு எடுத்தாலும் எடைபோட்டப்பிறகும் இனி நமக்கென்ன லாபம் என்றெண்ணாமல் கொட்டிக்கிடக்கும் நெற்களை அள்ளி மூட்டையில் போட்டுவிட்டு வெளியேறுவார் அப்பா குழந்தை சிந்திய சோற்றுப் பருக்கைகளைத் தம் உணவோடு சேர்த்துத்திண்பாள் தாய் பட்டினிச்சாவறியா பரதேசிகள் கை […]

தொடர்ந்து படிக்க »

அலை பாயும் மனதினிலே !

Filed in கவிதை, வார வெளியீடு by on September 2, 2018 0 Comments
அலை பாயும் மனதினிலே !

சிற்பி கையிலே சிற்றுளி செதுக்க முடியாமல் சிலையாக நின்றான் அலைபாயும் மனதோடு !   அவன் வசிப்பது வசந்த மாளிகை புசிப்பது அறுசுவை உணவு துயில்வது பஞ்சு மெத்தை துக்கம் மனதோடு தழுவி தூக்கம் கண்களைத் தழுவாமல் தூங்காமல் அலை பாய்கிறதே!   அவன் பொய் முகத்தை மெய் முகமெனக் காட்டி பணம் பதவி புகழ் நாட்டி பசித்தவன் போல் மன நிம்மதி தேடி கடல் அலைகள்போல் கவலையில் அலைகின்றானே !   உலகில் காதலே அலைபோலே […]

தொடர்ந்து படிக்க »

உயிர்ச்சொற்களுக்கான சவப்பெட்டி

Filed in கவிதை, வார வெளியீடு by on September 2, 2018 0 Comments
உயிர்ச்சொற்களுக்கான சவப்பெட்டி

எப்போதுமான முகாந்திரமற்ற இலையுதிர்தல் தொடர்கிறது வீதியின் விளிம்புகளில்….. வசந்தத்தை ஒரு வாளியில் மொள்ளுகிறது ஆளும் அரசுகள். ஆங்காங்கே உடைந்துக்கிடக்கின்றன செத்துப்போன இந்திய நாணயங்கள் காலாற நடந்த வீதியின் வீச்சை கணத்த இதயத்தோடு பார்க்கும் நடுத்தரவர்க்க நாய்கள் அவ்வப்போது முளைக்கும் இலவச எலும்புத்துண்டுகள் கூப்பாடு போடலாமென்று கூடிமுடிவெடுத்தது வாலாட்டிக்கூட்டங்கள். நிமிர்த்தவா முடியும்? எப்போதும்போல் வந்தது ஐந்தாண்டுக்கொருமுறை நாடகம். கிடைத்தன எலும்புத்துண்டுகள் ஜனநாயகத்தின் வாய்மூடிவிட்டது. ஜனங்களின் வயிறுகள் காலிக்குடுவைகள். மக்களுக்கான சவப்பெட்டியை மக்களே சுமந்தனர் மடிநிறைய. பெட்டிநிறைய வழிந்தது மக்களாட்சி… […]

தொடர்ந்து படிக்க »

அழகே..

Filed in கவிதை, வார வெளியீடு by on September 2, 2018 0 Comments
அழகே..

குளுகுளு காற்று அழுவது கேட்டேன் உன் பார்வையின் குளுமை அதற்கில்லையாம்   சலசலத்தோடும் நதியின் கண்ணீர் பார்த்தேன் உன் நகைத்தல் இனிமை தன்னிடம் இல்லையாம்   பளபளத்து ஜொலித்தபூ வாடிடக் கண்டேன் உன்னுதட்டு பொலிவைப் பெறுவது கடினமாம்   பரபரக்கும் பட்டாம்பூச்சி பறவாமைக் கண்டேன் உன் முகவண்ணம் கண்டு பொறாமை கூடியதாம்   வரிவரியாக எழுதும் கவிஞரின் வெற்றுத்தாள் கண்டேன் உன் நளினத்திற்கு உவமை காணாமல் தவித்தாராம்   தரதரவெனக் காளையர்கள் கண்ணிமைக்காதது கண்டேன் உன் சிலைவடிவைக் […]

தொடர்ந்து படிக்க »

காளிங்க மர்த்தனம்!!

Filed in கவிதை, வார வெளியீடு by on September 2, 2018 0 Comments
காளிங்க மர்த்தனம்!!

கண்களுக்கு இனியவனாம் கண்ணன் காட்சிக்கு இனியதுவாம் கடவுள் கண்களால் ரசிப்பதுவோ கண்ணன் – அகக் காட்சியாய்த் தொழுதிடவோ கடவுள் ஆயர்பாடி மாளிகையில்  அயர்ந்திருந்த கண்ணனவன் வாயதனில் மண்ணுண்டு தேயத்தைக் காட்டியவன் மாயங்கள் பலசெய்து  நியாயத்தை நாட்டியவன் தாயங்கள் ஒழித்தழித்த தர்மங்கள் மீட்டவனவன்!! காளிங்கன் என்றொரு கடும்விஷப் பாம்பு கலக்கிய விஷமது யமுனை வியாபித்து காகம் குருவிமுதல் கருடன் போன்றவையும் கடல்வாழ் உயிரினமும் கருக்கிச் சரித்தது!! இன்னுயிர் அனைத்தும் இன்னலைத் தழுவ மன்னுயிர் பலவும்  மாண்டொழிதல் மாற தன்னுயிர் […]

தொடர்ந்து படிக்க »

மழை இரவு !

Filed in கவிதை, வார வெளியீடு by on September 2, 2018 0 Comments
மழை இரவு !

மழையே மழையே மகிழ்ந்து மகிழ்ந்து குழந்தைபோல் விளையாட   விண்ணுக்கும் மண்ணுக்கும் ஏணி அமைக்க வா !   மழையே மழையே பகலவன் சூடு தணிய விண்ணில் விளையாடும் கருமேகமே மழைத்துளிகளை மண்ணுக்கு மலர்போல் இரவில் அள்ளி வீசு !   மழையே அந்தி மழையே விண்ணில் சிந்து பாடி மண்ணில் நொந்த உயிர்கள் மகிழ்ந்து வாழ – நீ மண்ணில் வந்து விளையாடு !   மழையே இரவு மழையே மண்ணில் நீ வீழ்ந்தால் மரம் […]

தொடர்ந்து படிக்க »

இனவாதமே பிணமாகு

Filed in கவிதை, வார வெளியீடு by on September 2, 2018 0 Comments
இனவாதமே பிணமாகு

கண் எட்டும் தூரம் கரையுமில்லை! கரையைத் தேடவே துடுப்புமில்லை! நீந்தி ஓடத்தான் மீனுமில்லை! மீனாய் வாழவே வழியுமில்லை! தன்னந் தனியே தத்தளிக்கிறான்  – இவனும் நெருப்பு அள்ளக் காணியிலே! கறுப்பு வெள்ளைத் தோணியிலே! இயற்கை தந்த நிறத்தினிலே இலங்கை பிரிந்த புறத்திலே!    எமனின்  மனமாகும் இனவாதமே பிணமாகு! குயில் ஓசை  இங்கே புயல் பாசை பேசுதுவே! மயில் இறகு இங்கே வெயில் கயிறு வீசுதுவே! எலும்பில்லா தசை ஆகிறேன் -நானும் அரசியலின் ஆட்டமே இனவாத ஓட்டம்! அறிஞரின் […]

தொடர்ந்து படிக்க »

நட்புக்கான நந்நாள்

நட்புக்கான நந்நாள்

பசியென்றால் பகர்ந்திடலாம் அன்னையிடம் – அவளும் புசியென்றே படைத்திடுவாள் அறுசுவை விருந்து!! படித்தாலும் புரியவில்லை, கோரிடலாம் தந்தையிடம் அடித்தாவது விளக்கிடுவார்  அரும்பொருள் அவரும்!! மன்மதனின் பாணமது மார்நோக்கிப் பாய்கையிலே மறுகேள்வி ஏதுமின்றி மகிழ்விப்பாள் மனைவியவள்!! வீதியில் செல்கையில் வீணர்களுடன் சண்டை – அண்ணன் பாதியில் ஓடிவந்து பகைவர்களைத் துரத்துவான்!! வளர்ந்தபின் மனதிலே சிற்சில கிலேசம் – அக்காள் தளர்ந்திடாதே தம்பியென நம்பிக்கை தந்திடுவாள்!! பற்றாக் குறையெனப் பகந்திட்டால் தம்பியவன் வற்றாத செல்வத்தை வாரி வழங்கிடுவான்!! அன்பிற்குச் சிலநாள் […]

தொடர்ந்து படிக்க »

பள்ளிக்கூட வழித்தடம்

பள்ளிக்கூட வழித்தடம்

ஊருக்குக் கிழக்கால, கோயிலுக்குப் பக்கத்துல அமைதியா இருக்குற என் பள்ளிக்கூடம் .. மேற்கால இருக்குற மேட்டுத் தெரு வீதியில ஓலக் குடிச தான் என் வீடு…   ஒத்தயடிப் பாத ஒண்ணு , வளைஞ்சு நெளிஞ்சு போயிருக்கும்!! குண்டும் குழியுமா கல்லெல்லாம் நெரஞ்சிருக்கும்.   காலையில விடியு முன்ன கால் நடையா நடந்தாத்தான் வகுப்பறை மணிக்கு முன்ன வாசலில் சேர முடியும்   ஏரிக்கரையோரம் போகயில தாமரப் பூ வாசம் வரும்! கரையோரப் பனமரத்துல இளப்பார நிக்கத் […]

தொடர்ந்து படிக்க »

banner ad
Bottom Sml Ad