\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மேல் பட்டண கலைச் சந்தை (UpTown Art Fair)

56 ஆவது கலைச் சந்தை ஆகஸ்ட் 3 – 4ம் தேதிகளில் மினியாப்பொலிஸ் நகரத்தின் ஹென்னப்பின் தெருவில் நடைபெற்றது. இது w 31 st இல் இருந்து w28 th வீதி வரை வாகனங்களை மறித்து ஹென்னப்பின் வீதி இருபுறமும் கூடாரங்கள் போடப்பட்டிருந்தன.  இந்தப் பண்டிகைக்கு வருடா வருடம் சுமார் மூன்றரை லட்சம் மக்கள் வருகைத் தருகின்றனர்.

இவ்விடம் பல ரக ஓவியர்கள், சிற்பிகள், புகைப்படவியலாளர்களின் கைவண்ணங்கள் மிகுந்திருந்தன. விதவிதமான உணவு, குடிபான வகைகளும் விற்கப்பட்டன.

இம்முறை பல புதிய ஒவியமுறைகள் காணப்பெற்றன. இதில் முக்கியத்துவம் பெற்றது உள்ளூர் லினலேக் பகுதி ஓவியர் சக் யூ Chuck U என்பவரின் அழகிய கைவண்ணம் எனலாம். இவர் தமது நிறப்பேனாக்கள்,தூரிகை,கம்பியூட்டர் மென்பொருள் கொண்டு அழகிய கற்பனை ஓவியத்தைத் தந்துள்ளார். இதுவே இம்முறை பிரத்தியேக மேற்பட்டணக் கலைச் சந்தை ஓவியமாகத் தெரிவு செய்யப்பட்டது.

ஓவியர் சக் யூவின் படைப்பு:

– யோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad