\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

உலகச் செம்மொழி – அத்தியாயம் 11

அத்தியாயம் 10 செல்ல இங்கே சொடுக்கவும்

chemozhi11_520x747போன அத்தியாயத்தை எழுதி முடித்த பொழுது நான் தாய்லாந்தில் பேசப்படும் “தாய்” மொழி பற்றி பார்க்கலாம் என்று முடித்திருந்தேன். அதை முடிச்சதுக்கு அப்புறம் நான்கு ஐந்து நாட்களுக்கு எனக்கு தூக்கமே வரலை. தாய்லாந்து என்ற வார்த்தையில ஒரு பாதியான ”தாய்” நல்ல தமிழ்ல இருப்பதாகவும் மற்றொரு பாதி லாந்து(land) என்ற வார்த்தை ஆங்கிலத்தில் இருப்பதாகவும் பட்டது. எனக்கு அப்படி இருப்பதற்கான சாத்திய கூறுகள் குறைவு என்று மட்டும் பட்டது. இதுவும் ஒரு தமிழ் வார்த்தையின் மருவாகத்தான் இருக்க முடியும் என்று நம்பிக்கை இருந்துதுங்க. ஏன் என்றால் தாய்லாந்தின் நில அமைப்பு இது வரை எந்த ஐரோப்பியர்களாலும் வெல்ல முடியாத தேசமாகவே அந்த தேசத்தை வைத்துள்ளது.

”தாய்” மொழியில தாய்லாந்து என்றால் சுதந்திரமான இடம் அல்லது சுதந்திர பூமி என்று அர்த்தம். ”தாய்” மொழிக்கான மொழி மூலச் சொற்களை ethomologyல தேடுறது கடினமான பணியாக இருக்கின்றது. “தாய்” மொழியில நிறைய சமஸ்கிருதச் சொற்களும் தமிழ்ச் சொற்களும் கலந்திருக்கின்றன. இதுக்கு மூலக்காரணம் சுமார் எட்டாம் நூற்றாண்டுக்கு முந்தியே பல்லவப் பேரரசின் ஆதிக்கமும் பிறகு சோழப் பேரரசின் ஆதிக்கமும் அங்க இருத்தததுதான். இதற்கான ஆதாரங்களா சில கல்வெட்டுகள் தாய்லாந்தில் கிடைக்கப் பெறுகின்றனங்க. அதுவும் இல்லாம ”தாய்” மன்னர்களின் அரசவையில திருப்பாவை ஓதும் நிகழ்ச்சிகள் இன்றும் வழக்கில் இருக்குங்க. அத்துடன் நான் முன்னைய அத்தியாயத்தில் சொன்னது போல ஆழிப்பேரலையில் தப்பிய குமரிக்கண்டத்து மக்கள் குடியேரிய நாடுகளில் தாய்லாந்தும் ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.

அங்க புத்த மதம் மிகப் பெரிய அளவில் பரவியிருக்கு அதுக்கும் நம்முடைய தமிழர்களின் பங்களிப்பு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகின்றது. தமிழ்நாட்டில் மூன்றாம் நூற்றாண்டில் இருந்து ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டு வரை புத்தமும் சமணமும் தமிழ் நாட்டில் ஏற்றம் பெற்றிருந்தன.. புத்த மத வழக்கங்கள் தமிழகத்தில் வழக்கொழிந்து விட்டன அல்லது மத வெறியர்களால் வழக்கொழிக்கப்பட்டன. ஆகையால் தமிழகத்திற்கும் தாய்லாந்திற்குமான பழக்க வழக்கங்களை ஒப்பு நோக்க மிகவும் கடினமாக  உள்ளது.

.

போன வாரத்தில் ஒரு நாள் நான் என் மதுரை நண்பரின் வீட்டுக்குத் தொலைப்பேசியில் அழைத்த பொழுது நண்பரின் அம்மாதான் எடுத்தாங்க நலம் விசாரித்ததற்குப் பிறகு நண்பர் எங்கே என்று கேட்ட பொழுது அவுங்க சொன்ன பதில் என்னைத் திகைக்க வைத்தது மட்டுமல்லாமல் தாய்லாந்து பற்றிய என் தேடலுக்கும் உந்து சக்தியா இருத்ததுங்க.

இதே மாதிரி இன்னுமொரு சம்பவம் நடந்துதுங்க. நான் மைலாப்பூர் லஸ் சர்ச் சாலையில பூ விற்றுக்கொண்டிருந்த 80 வயது மூதாட்டியிடம் சாய்பாபா கோவிலுக்கு வழி கேட்ட பொழுது அவுங்க சொன்ன ஒரு வார்த்தை tank என்ற ஆங்கில வார்த்தையின் தமிழ் மூலத்த சொல்லிக் கொடுத்துதுங்க.

அந்த பாட்டி எனக்கு வழி சொன்ன சென்னைத் தமிழ்ல, நீ நேரா போனேனா அப்பால ஒரு தேங்கு வரும் அப்டிக்கா சோத்தாங்கைப் பக்கமா திரும்பி நேராப் போனா கோவிலாண்ட போகலாமுனு சொன்னாங்க.எனக்கு அப்பதான் புரிஞ்சிது தண்ணி தேங்கி நிக்கிற இடம் அல்லது தேக்கி வைக்கப்பட்டிருக்கின்ற இடம் tankனு.

என் நண்பரோட அம்மா என்ன பதில் சொன்னாங்கனா, அவன் எங்க “லாந்தி” கிட்டு இருக்கானு தெரியலைப்பா. இப்ப எல்லாம் துரை சொல்லிட்டுப் போறது இல்லை. இந்த வார்த்தைக்கு அப்புறம் அவுங்ககிட்ட ஒரு பத்து நிமிடங்கள் பேசி இருக்கேன் ஆனா என்ன பேசினேன்னு தெரியல. அந்த ”லாந்திகிட்டு” என்ற வார்த்தை தாய்லாந்து என்ற வார்த்தையோட மூலமாக இருக்குமானு ஒரு பொறி தட்டி பெரிய சுவாலையா எறிய ஆரம்பிச்சுதுங்க.. லாந்திக்கிட்டு இருப்பதற்கும் லாந்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கானு அடுத்த இதழ்ல பார்க்கலாங்க.

-சத்யா-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad