கட்டுரை
சின்னாபின்னமாகும் ஜனநாயகம்

‘நாடாளுமன்றங்களின் ஒன்றியம்’ (Inter-Parliamentary Union (IPU)) எனும் அமைப்பு, 1997 ஆம் முதல் செப்டம்பர் 15 ஆம் நாளை சுதந்திரமான தேர்தல்கள், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் போன்ற அத்தியாவசிய மக்களாட்சி கொள்கைகளை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக அனுசரித்து வந்தது. இதனை மேலும் வலுப்பெறச் செய்ய, 2007ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை உலகளவில் மக்களாட்சி கொள்கைகளை மேம்படுத்தி, நிலைநிறுத்தும் நோக்கத்துடன் இத்தினத்தை சர்வதேச மக்களாட்சி தினமாக அறிவித்தது. இந்நாளில் பல நாடுகளில், சுதந்திரம், சமத்துவம், […]
முத்துகள் மூன்று

முத்துகள் மூன்று அன்றாட வாழ்வில் பிரபலங்கள் உதிர்க்கும் முத்துகள் சில நம் கண்ணில் படாமல் போய்விடுவதுண்டு. அல்லது அவசரத்தில் அம்முத்துகளின் மகத்துவத்தை உணராமல் நாம் கடந்து சென்றுவிடுகிறோம். இதோ உங்களுக்காக இந்த மாத மூன்று உயர்தர முத்துகளின் தொகுப்பு. குறிப்பு :- இந்த முத்துகள் எதிலும் கருத்துக் கலப்படமில்லை. அவை முற்றிலுமாக சொன்னவரின் சொந்த வார்த்தைகள் மற்றும் கருத்துகள். மெய்யாலுமா? இந்திய மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், போபாலில் உள்ள இந்திய அறிவியல் […]
ஒரு உன்னதமான குழந்தைப் பருவப் பொழுதுபோக்கு மறைந்து வருகிறது

ஒரு காலத்தில் தெருக்களில் சைக்கிள்களில் குழந்தைகள் நிறைந்திருந்தார்கள். இப்போது இல்லை. சில தசாப்தங்களுக்கு முன்பு ஒரு அமைதியான இந்திய இலங்கை கனேடிய அமெரிக்கத் தெருக்களில் நடந்து சென்றால், அருமையான ஒரு காட்சியை நீங்கள் காண்பீர்கள்: எஃகு போன்ற உறுதியுடன், எந்தப் பாதுகாப்புத் தலைக்கவசமும் இல்லாமல், சைக்கிளில் வாகனம் ஓட்டிச் செல்லும் பள்ளி வயதுக் குழந்தைகள் கூட்டம். இன்று நீங்கள் அந்த மாதிரியான காட்சியைப் பார்ப்பது குறைவு. 1990களில்,அமெரிக்காவில் 7 முதல் 17 வயது வரையிலான சராசரியாக 20.5 […]
அதிபர் டிரம்பின் ஆறு மாதங்கள்

அமெரிக்காவின் நடப்பு அதிபராக, அதாவது 47வது அதிபராக, திரு. டிரம்ப் பதவியேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளது. தேர்தலுக்கு முன்னர், பல உத்தரவாதங்களை முன் வைத்து பேசினாலும், சுருக்கமாக ‘உலக அரங்கில் அமெரிக்கா இழந்திருக்கும் நன்மதிப்பையும், மரியாதையையும் மீட்பேன். அமெரிக்காவை மீண்டும் சிறப்புறச் செய்வேன்’ எனும் தாரக மந்திரத்தை வாக்காளர்கள் மனதில் அழுந்த பதியச் செய்து, வெற்றியும் கண்டார். வரிச் சுமையைக் குறைத்தல், விலைவாசியைக் குறைத்தல், முறையற்ற குடியேற்றங்களைத் தடுத்தல், உலகில் நடைபெறும் போர்களை முடிவுக்கு கொணர்தல், அமெரிக்கத் […]
கீழடி அகழாய்வு

தென் தமிழ்நாட்டில், வைகை ஆற்றின் அமைதியான வளைவில், கீழடி அமைந்துள்ளது. 2013 வரை, கோயில் நகரமான மதுரைக்கு அருகாமையில் இருப்பதைத் தவிர்த்து, மிக அரிதாகவே பேசப்பட்ட கிராமம் . ஆனால் கடந்த பத்தாண்டுகளில், இந்த சிற்றூர் இந்தியாவின் மிகத் தீவிரமான தொல்பொருள் மற்றும் அரசியல் விவாதங்களில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் மத்தியத் தொல்லியல் துறை நடத்திய ஆகழ்வாய்வில் அங்கு, 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் சங்க […]
அமெரிக்க விருந்தாளி – நூல் விமர்சனம்

உலக நாடுகளின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், புவியியல், இனம், உரிமை என்ற எதோவொரு காரணத்துக்காகப் போர்கள் தொடுக்கப்பட்டதையும், அதனால் ஏற்பட்ட அழிவுகளையும் அறிய முடியும். அவற்றில், மனித இனம் நாகரிகமடைந்த பின்பு நிகழ்ந்த இரண்டாம் உலகப் போர் மிகக் கொடூரமான பேரழிவுகளை உண்டாக்கியது. ஏறத்தாழ ஏழு மில்லியன் மக்களின் உயிரை மாய்த்த இந்தப் போரில் பல நாடுகள் சுயத்தை இழந்தன; பல தலைமுறை கடந்தும் அதன் பாதிப்புகளிலிருந்து விடுபடாத குடும்பங்கள் ஏராளம். கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில், […]
செர்ரி பூக்கள்

அன்பான வாசகர்களே, செர்ரி பூக்களை நான் இப்படித்தான் விவரிப்பேன். அழகான நீல வானத்தின் கீழ், மென்மையான செர்ரி மலர்கள் தங்கள் வெளிர் இளஞ்சிவப்பு இதழ்களை விரித்து, சாதாரண தெருக்களையும் பூங்காக்களையும் அழகின் கனவு நடைபாதைகளாக மாற்றுகின்றன. இது போன்று மினசோட்டா மாநிலத்தில் குங்கும பூக்கள் சித்திரை அல்லது ஏப்ரலில் மாதத்தில் மலரும். செர்ரி பூக்கள் இயல்பாக ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு அற்புதமாக பூத்து, பின்னர் மென்மையான இளஞ்சிவப்பு , நாவல், வெள்ளை, மஞ்சள் நிறங்களில் […]
பலமிழக்குமா அமெரிக்க டாலர்?

ஜனவரி 20இல் பதவியேற்றதும், அதிபர் டானல்ட் டிரம்ப் “பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரை அழிக்க முயன்றன. அவர்கள் ஒரு புதிய நாணயத்தை உருவாக்க விரும்புகிறார்கள். டாலரை அழிப்பதாகக் குறிப்பிடும் எந்த பிரிக்ஸ் நாட்டிற்கும் 150 சதவீத வரி விதிக்கப்படும். உங்கள் பொருட்களும், நாடுகளும் உடைந்து போவதை நாங்கள் விரும்பவில்லை” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த வாரம், ”அமெரிக்க டாலருடன் யாரும் விளையாட வேண்டாம். ஒருவேளை அவர்கள் அவ்வாறு செய்தால், குறைந்தபட்சம் 100 சதவீத சுங்க வரியை எதிர்கொள்வார்கள் […]
வெகுஜன நாடுகடத்தல் (Mass deportations)

அமெரிக்க அதிபர் டானல்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தின் முதல் நாளில், அமெரிக்க குடியேற்றச் சட்டம் மற்றும் கொள்கைகளை மாற்றும் நோக்கில் பத்து நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அவற்றில் முக்கியமானவை, அமெரிக்காவில் பிறப்புரிமையின் அடிப்படையில் வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது மற்றும் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள அனைவரையும் நாடு கடத்தும் கொள்கையைக் கடைப்பிடிப்பது எனும் உத்தரவுகள். இவற்றில் பிறப்பு அடிப்படையில் அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்படும் சட்டத்தை எதிர்த்து டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு, கூட்டாட்சி நீதிமன்றம் […]