admin
admin's Latest Posts
பதியம் போட்ட உறவுகள்

(பனிப்பூக்கள் 2022 ஆம் ஆண்டு சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை) “கிராமத்தில் தனியா இருக்கிற அம்மாவை, இங்கே வந்து கொஞ்ச நாள் தங்கிட்டு போகச் சொல்லலாமான்னு யோசிக்கிறேன்…..” தயங்கியபடி யோசனையைச் சொல்லிவிட்டு, மனைவி சுகுனாவின் பதிலுக்காக காத்திருந்தேன். அம்மா உள்பட, கிராமத்து உறவினர்கள் எவரையும், குடும்பத்துக்குள் சேர்த்தால், ஒத்து வராது என்ற கருத்தில், கல்யாணம் ஆனதிலிருந்தே பிடிவாதமாக நின்றாள் அவள். சிறு வயதில் அம்மாவை இழந்து, அப்பாவின் ஒரே செல்லப் பெண்ணாக வளர்ந்து, நவீன […]
குடும்பத்தலைவி

குடும்பம் என்பது மரமானால்- அதில் அடியும் வேரும் நீ தானே! பாசக் கிளைகள் விரிந்தோட-அதில் அன்பாய் இலைகள் நீ தானே! பிள்ளைகள் என்பது விழுதாகும்- அது பிரிந்து வேர் ஊன்ற பெரிதாகும்!! மழையோ, புயலோ வந்தாலும்- அது உந்தன் உறுதியில் கரைந்தோடும்! உன் உழைப்பில் பெரிதாகும்- மரம் உலகம் வியக்க செழித்தோங்கும்! குடும்பத் தலைவி பெண்ணே நீ உந்தன் – சிரிப்பில் பூ பூக்கும்!! உலகம் இயங்கும் உன்னாலே – வணங்கிப் போற்றுவோம் என் நாளும்!! இளங்கோ […]
விக்ரனுபவம்

முதல் விக்ரம் 1986 இல் வெளியானது. அந்தக் காலத்தில் முன்னணி நாயகர்களின் திரைப்படங்கள் பலமுறை மீண்டும் மீண்டும் வெவ்வேறு திரையரங்குகளில் திரையிடப்படும். அப்படி விக்ரம் (1986) மீண்டும் தூத்துக்குடி ‘மினி சார்லஸ் தியேட்டரில்’ வெளியான சமயம், அண்ணன்மார்களுடன் ஓர் இரவுக்காட்சிக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அச்சமயம் அப்படம் எனக்குப் பிடித்திருந்தது. ராக்கெட், கடத்தல், ஜேம்ஸ் பாண்ட் டைப் போலீஸ், கேட்ஜட்ஸ், சலோமியா, டிம்பிள் கபாடியா எனப் பிரமிக்க நிறைய விஷயங்கள் படத்தில் இருந்தன. இடைவேளையில் ரசிகர்களின் ‘ஒன்ஸ்மோர்’ […]
விலங்கு

விலங்கிட்டு எனைப் பூட்ட விலங்கா நான்? விளங்காத இந்நினைப்பை விலக்கவும் இயலவில்லை! விலங்கிடப் பட்டேன் நான்! விலங்காக நடத்தப்பட்டேன்! விலகவும் இயலவில்லை விளக்கவும் எவருமில்லை! விளக்காய் ஒளி வீச விழைந்தே அவதரித்தேன்! விலங்கான மனிதர்களால் விளங்காத துயரடைந்தேன்! விலகிப் போகையிலே விழவைத்துச் சிரித்தனர்! விளங்கா வயதினையும் விதைக்குள்ளே ஒழித்தனர்! விலக வேண்டும் இனவெறி! விலக்க வேண்டும் வன்முறை! விளக்க வேண்டும் மானுடர்க்கே விரிவாக அஹிம்சைதனை!! வெ. மதுசூதனன்.
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (மே 2022)

கடந்த பகுதியில் (நவம்பர் இதழ்) சென்ற வருடம் முழுமைக்கும் வந்திருந்த படங்களில் இருந்த நல்ல பாடல்களைப் பார்த்தோம். வருடத்தின் கடைசி இரு மாதங்களில் வந்திருந்த படங்கள் மட்டும், அதில் இடம் பெறவில்லை. இவ்வருடம் தொடங்கி நான்கு மாதங்கள் ஆகிவிட்டதால், கடந்த நான்கு மாதங்களில் வெளியாகிய படங்களில் இருக்கும் குறிப்பிடத்தகுந்த பாடல்களை, இந்தப் பகுதியில் பார்ப்போம். முதல் நீ முடிவும் நீ நடிகர், இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்குனர் அவதாரம் எடுத்த படம். 96 படம் போல் […]
ஏப்ரல் மேயிலே…

“ஏப்ரல் மேயிலே பசுமையேயில்லை காஞ்சு போச்சுடா” பாடலை மினசோட்டாவில் இருக்கும் நாம் பாடினாலும் பொருத்தமாகத் தான் இருக்கும் போல!! ஊசியாய் குத்தும் குளிர் இல்லை அவ்வளவு தான், ஆனால் இன்னும் ஜாக்கெட் இல்லாமல் வெளியே போக முடியவில்லை. “ஜாக்கெட் ஜாக்கெட் ஜாக்கெட், ஐ டோண்ட் லைக் ஜாக்கெட், பட் ஜாக்கெட் லைக்ஸ் மீ” என்று கேஜிஎப்-2 டயலாக் பேச பொருத்தமானவர்கள் மினசோட்டாவாசிகள். பொதுவாக, மார்ச் மாதம் வந்தால் குளிர் போய்க் கொஞ்சம் கதகதப்பு வரும் என்பது ஐதீகம். […]
Donut Dashன் 5 மைல் (Mile) ஓட்டப்பந்தயம்

மினசோட்டா மாநிலத்தில் மினடோங்கா(Minnetonka) என்ற நகரில் கடந்த சனிக்கிழமை, மே 7ஆம் தேதி Eagle Ridge Academy பள்ளி சார்பாக எட்டாவது ஆண்டு ‘Donut Dash’ன் 5 மைல் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இந்தப் போட்டிகளுக்காக காலை 7 மணி முதல் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாகச் செய்யப்பட்டு இருந்தன. சிறுவர்கள் விளையாடி மகிழ பொழுதுபோக்கு அம்சங்களும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்வோர் தயாராவதற்கு ஜூம்பா நடனம் மூலம் (Zumba Warm-Ups) ஆயத்தப் பயிற்சி அளிக்கப்பட்டு தயாராகினர். போட்டி குறித்த மேலதிக […]
பலி-சிறுகதை போட்டியில் முதல் பரிசு வென்ற கதை

“என்ன குழந்தை?” என்று ‘துவாசை’ நோக்கிப் போய்க்கொண்டிருந்த பெருவிரைவு ரயிலிலில் ஒரு குரல் தெறித்தது. மொழிப் பாகுபாடின்றி பல தலைகள் குரல் வந்த திக்கில் திரும்பின. தன்யாவுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் என அதுவரை மனத்தில் ஆக்கிரமித்திருந்த தவிப்பு அகிலனைவிட்டுத் தற்காலிகமாக விலக, குரலுக்கு உரியவனின் மேல் பார்வையை அனுப்பினான். அகிலனுக்கும் அவனுக்குமிடையில் நான்கைந்து பேர் நின்றுகொண்டிருந்தனர். அவனுக்கும் இரண்டு இருக்கை தள்ளி அமர்ந்திருந்த சீனர் ஒருவர் முணுமுணுத்தார். உறக்கம் கலைக்கப்பட்ட கோபம் அவரது வெளுத்த […]
அமெரிக்கா வருபவர்களுடைய முதல் 10 வேலைகள்

பணி நிமித்தம் புதிதாக அமெரிக்கா வருபவர்கள், வந்தவுடன் முதல் வாரத்தில் செய்ய வேண்டிய 10 முக்கிய வேலைகள் இவை. அமெரிக்கப் பயணத் திட்டத்தில் உங்கள் குடும்பத்தினரோ அல்லது நண்பர்களோ இருந்தால், தவறாமல் இதைப் பகிரவும். I-9 வேலைக்குச் சேர்ந்து முதல் மூன்று நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டியது – I-9 பாரம் (Form I-9). ஒரு ஊழியரைப் பணியில் அமர்த்துவதற்கு முன் அவருடைய வேலை செய்வதற்குரிய தகுதியுடன் இருக்கிறாரா என்று அந்த நிறுவனம் சரிபார்க்கும் நடைமுறை இது. முதலில் […]