Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மாதத்தின் மாமனிதர்

அசோகமித்திரனுக்கு அருகாமையில்….

அசோகமித்திரனுக்கு அருகாமையில்….

சமீபத்திய இந்தியப் பயணத்தின் போது ஒரு அரிய வாய்ப்பாக, பழம் பெரும் எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான எழுத்தாளர் அசோகமித்திரனைச் சந்தித்து  உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த எனது கல்லூரி நண்பன் ஸ்ரீராமிற்கு, இச்சமயத்தில் எனது இதயபூர்வமான நன்றியை உரித்தாக்குகிறேன். எனது சந்திப்பைப் பற்றி எழுதுவதற்கு முன்னால், திரு. அசோகமித்திரன் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுவது பொருத்தமாக இருக்கும். தமிழ்ப் படிக்கும் ஆர்வலர்களுக்கு அவரைப் பற்றிய அறிமுகம் தேவையில்லையெனினும், இந்தக் […]

தொடர்ந்து படிக்க »

கலைவாணர்

கலைவாணர்

”சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே  சொந்தமான கை இருப்பு, வேறு ஜீவ ராசிகள் செய்ய முடியாத செயலாகும்  இந்த சிரிப்பு” என்ற பாடலைக் கேட்டிராத, ரசித்திராத சென்ற தலைமுறையைச் சேர்ந்த தமிழர்களே இருந்திருக்க இயலாது என்று நினைக்கிறேன். இந்தப் பாடலுக்குக் குரல் கொடுத்து, நடித்து அதற்கு முழு உயிரும் கொடுத்த நகைச்சுவை நடிப்பின் மாமேதை கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனுக்கு அறிமுகம் தேவையில்லை. இந்தப் பாடலே அவரின் சிந்தனைக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்று கூறலாம். நகைச்சுவையில், சமூக […]

தொடர்ந்து படிக்க »

நடிப்புலகச் சக்கரவர்த்தினி

நடிப்புலகச் சக்கரவர்த்தினி

”சிக்கலாரே, எப்டி இருக்கீய…. சொகமா இருக்கீயளா……….. அடி ஆத்தி…. இந்த நாயனத்துல வாசிச்சுக் காட்டுங்க…… ஏஏஏஏஏஏன்…..” தில்லானா மோகனாம்பாளில் எல்லா நாதஸ்வரத்திலும் அதே சங்கீதம்தான் வருகிறதா, அல்லது சிக்கல் சண்முகசுந்தரம் (நடிகர் திலகம் சிவாஜி கணேசன்) வாசிக்கும் நாதஸ்வரம் மட்டும் சிறப்பாகச் செய்யப்பட்டதா என்று கேள்வி கேட்கும் நேரத்தில், ஒரு நிமிடம் சிவாஜி என்ற மாபெரும் ஜாம்பவான் அதே காட்சியில் இருக்கிறார் என்பதே நமக்கு மறந்துவிடுமளவுக்கு அதிகமான ஆளுமையுடன் நடிப்பதற்கு இயன்ற ஒரு சில நட்சத்திரங்களில் மிகவும் முக்கியமானவர். […]

தொடர்ந்து படிக்க »

கர்ம வீரர்

கர்ம வீரர்

சீசரைப் பெற்ற தாயும் சிறப்புறப் பெற்றாள் – அன்று நாசரைப் பெற்ற தாயும் நலம்பெறப் பெற்றாள் – காம ராசரைப் பெற்ற தாயோ நாட்டிற்காகவே பெற்றாள் !!! -கவியரசு கண்ணதாசன்- ”பெருந்தலைவர்”, “கர்ம வீரர்”, “கிங் மேக்கர்”, “படிக்காத மேதை”, “கருப்பு காந்தி” எனப் பல்வேறு சிறப்புப் பெயர்களும், புகழும் பெற்ற, இந்த நூற்றாண்டு கண்ட ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான காமராஜர் அவர்களின் 40 ஆவது நினைவு தினம் அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வந்து […]

தொடர்ந்து படிக்க »

யோகசுவாமிகள்

யோகசுவாமிகள்

“சும்மா இரு” என்ற இரு சொற்களிலுமே நாம் தற்போது இந்த நிமிடத்தில் வாழ்வதைப் பற்றிக் கரிசனை செலுத்த வேண்டும் என்றார் யோகசுவாமிகள்.   அசலுக்கும் நகலுக்கும்,  நல்லுறவுக்கும், வல்லுறவுக்கும், அற்பத்துக்கும்,   ஆன்மீகத்திற்கும் வேறுபாடு தெரியாது இலத்திரனியல் வாழ்க்கையில் சஞ்சரிக்கும் மனித குலத்திற்கு மெஞ்ஞானியாகிய யாழ்ப்பாணம் யோகசுவாமிகள் பற்றித் தெரிந்திருப்பது  அரிதான விடயமே.   ஞானிகள் தோன்றி போதிக்கும் தத்துவங்களோ மனித சிந்தனையின் உயர் கட்டத்தை விவரிக்கிறது. ஏரியில் ததும்பும் நீர்க்குமிழிகள் போல வாழ்க்கையில் அவை அவ்வப்போது எமக்கு […]

தொடர்ந்து படிக்க »

பொன்னம்பலம் ராமநாதன்

பொன்னம்பலம் ராமநாதன்

இங்கிலாந்திடமிருந்து இலங்கை நாட்டின் விடுதலைக்காகப் பல தலைவர்கள் உருவாகி அரும்பணியாற்றியுள்ளனர். அவர்களில் தமிழ்த் தலைவர்கள் பலரும் இடம்பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவர் சர். பொன்னம்பலம் ராமநாதன். 1851ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதினைந்தாம் தேதி கொழும்பில் பிறந்தவர் ராமநாதன். இவரது தந்தை கேட் (ராச வாசல்) முதலியார் அருணாச்சலம் பொன்னம்பலம். தாயார் செல்லாச்சி அம்மாள். தந்தை ஆங்கில அரசாங்கத்தில் ஒரு உயர் பதவியில் இருந்ததாலும்,வியாபாரம் நடத்தி வந்ததாலும் ராமனாதனின் பால்ய நாட்கள் சுகமாகவே அமைந்தன. கொழும்பு ராயல் கல்விக்கழகத்தில் […]

தொடர்ந்து படிக்க »

மார்லன் பிராண்டோ

மார்லன் பிராண்டோ

1973ஆம் ஆண்டு, மார்ச் 27ஆம் நாள் லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலுள்ள டோரோதி சான்ட்லர் அரங்கம் (Dorothy Chandler Pavilion) – 45வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா. சிறந்த நடிகர் விருதுக்காக நியமனமாகியிருந்த ஐந்து பெயர்களை நடிகை லீவ் உல்மன் வாசித்து விட்டார். நடிகர் ரோஜர் மூர் வெற்றியாளரின் பெயரை அறிவித்தார். அரங்கம் முழுதும் பலத்த கரகோஷம். ‘சிறந்த நடிகரு’க்கான விருதைப் பெற ஒரு ‘பெண்’ மேடையேறினாள். பார்வையாளர்களுக்குக் குழப்பம். ரோஜர் மூர் ஆஸ்கர் விருதினை அந்தப் […]

தொடர்ந்து படிக்க »

எம். கே. தியாகராஜ பாகவதர்

எம். கே. தியாகராஜ பாகவதர்

“என்னைப் போல் வாழ்ந்தவரும் இல்லை, என்னைப் போல் தாழ்ந்தவரும் இல்லை” சூப்பர் ஸ்டாரின் வார்த்தைகள் இவை! பதினான்கு ஆண்டுகளில் பதினான்கு படங்களில் மட்டுமே நடித்து தமிழ்த் திரையுலகில் அழிக்க முடியாத முத்திரை பதித்தவரின் இறுதிக் கால வார்த்தைகள் இவை! பளபளக்கும் சரீரம், கருகருத்த நீண்ட கேசம், பட்டுச் சட்டை, பட்டு அங்கவஸ்திரம், பட்டு வேட்டி, ஜவ்வாதுப் பொட்டு, வைரக் கடுக்கன், பத்து விரல்களிலும் மோதிரம், கணீரென்ற குரல் இவற்றின் மொத்த உருவமாக, ‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டத்துடன் […]

தொடர்ந்து படிக்க »

சிவாஜி என்றொரு சிம்மம்

சிவாஜி என்றொரு சிம்மம்

கம்பீரத் தோற்றம், கண்ணியத் தோரணை, கர்வம் கொண்ட கூரிய பார்வை இவற்றின் அடையாளம் ‘சிவாஜி கணேசன்’ என்ற ஏழு எழுத்துக்கள். வி.சி. கணேசன் என்ற துடிப்பான இளைஞன் தனது நடிப்பாற்றலின் திறனால், உலகமெங்கும் வியாபித்திருக்கும் தமிழரின் மனங்களில், செதுக்கிய எழுத்துக்கள். தஞ்சை மாவட்டத்தில் உள்ள வேட்டைத்திடல் கிராமத்தைச் சேர்ந்த சின்னையா மன்றாயர், ராஜாமணி ஆகியோருக்கு பிறந்தவர் கணேசமூர்த்தி. வேட்டைத்திடல் சின்னையா கணேசமூர்த்தி என்பதே பின்னர் வி.சி. கணேசன் என்றானது. ராஜாமணி அம்மையார் விழுப்புரத்திலிருந்த தனது தந்தை வீட்டில் […]

தொடர்ந்து படிக்க »

கண்ணதாசன்

கண்ணதாசன்

“அவனது வாழ்க்கை அதிசயமான வேடிக்கை. அவசரத்தில் காரியம் செய்து, சாவகாசத்தில் சங்கடப்படுவது அவனது இயற்கையான சுபாவம். தவறுகளைப் புரிந்து கொண்டே அவற்றை மறந்து நியாயம் கற்பிக்க முயன்றான். அவன் மனம் அழுத பொழுதும் வாய் சிரித்துக் கொண்டிருந்தது. பயனற்ற வேலைகளில் ஆசையோடு ஈடுபட்டுப் பொழுதைச் செலவழித்தான்” கவிஞர் கண்ணதாசனைப் பற்றி, அவரை மிக நெருக்கமாக, நன்றாக அறிந்த ஒருவர் கூறிய வார்த்தைகள் இவை. நாம் கவிஞரைப் பற்றி முதலில் பார்ப்போம். சிறுகூடல்பட்டியில், சாத்தப்பன், விசாலாட்சி தம்பதியருக்கு 1927ஆம் […]

தொடர்ந்து படிக்க »

banner ad
Bottom Sml Ad