இலக்கியம்
அமெரிக்க விருந்தாளி – நூல் விமர்சனம்

உலக நாடுகளின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், புவியியல், இனம், உரிமை என்ற எதோவொரு காரணத்துக்காகப் போர்கள் தொடுக்கப்பட்டதையும், அதனால் ஏற்பட்ட அழிவுகளையும் அறிய முடியும். அவற்றில், மனித இனம் நாகரிகமடைந்த பின்பு நிகழ்ந்த இரண்டாம் உலகப் போர் மிகக் கொடூரமான பேரழிவுகளை உண்டாக்கியது. ஏறத்தாழ ஏழு மில்லியன் மக்களின் உயிரை மாய்த்த இந்தப் போரில் பல நாடுகள் சுயத்தை இழந்தன; பல தலைமுறை கடந்தும் அதன் பாதிப்புகளிலிருந்து விடுபடாத குடும்பங்கள் ஏராளம். கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில், […]
செர்ரி பூக்கள்

அன்பான வாசகர்களே, செர்ரி பூக்களை நான் இப்படித்தான் விவரிப்பேன். அழகான நீல வானத்தின் கீழ், மென்மையான செர்ரி மலர்கள் தங்கள் வெளிர் இளஞ்சிவப்பு இதழ்களை விரித்து, சாதாரண தெருக்களையும் பூங்காக்களையும் அழகின் கனவு நடைபாதைகளாக மாற்றுகின்றன. இது போன்று மினசோட்டா மாநிலத்தில் குங்கும பூக்கள் சித்திரை அல்லது ஏப்ரலில் மாதத்தில் மலரும். செர்ரி பூக்கள் இயல்பாக ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு அற்புதமாக பூத்து, பின்னர் மென்மையான இளஞ்சிவப்பு , நாவல், வெள்ளை, மஞ்சள் நிறங்களில் […]
மகளிர் தின வாழ்த்துக்கள்

பூமியில் வந்திறங்க, பூதவுடல் வருத்தினாள்! பூரணமாய் வந்தியங்க, பூஞ்சிறகில் வளர்த்திட்டாள்! தீதின்றிப் பிறந்திட்டேன், நன்மைகள் கூட்டினாள்! தீரமுடன் வளர்ந்திட, திண்மைகள் காட்டினாள்! அன்னையவள் பிரிந்தபின் அவளிடத்தை அலங்கரித்தாள்! அன்னியர்கள் அணுகாமல் அருகிருந்து காத்திட்டாள்। அண்ணியர்கள் இல்லம்வர, அரவணைத்தே இணைத்திட்டாள்! அணங்கவளைக் கரம்பிடிக்க, அலங்கரித்தே பார்த்திட்டாள்! தமக்கையும் தன்வழிபோக, தேவதையவள் புகுந்திட்டாள்! தளிர்க்கரத்தால் கல்லிதனைத் தரமான சிலையாக்கினாள்! தலைமையில் எனையேற்ற, தன்னையே ஏணியாக்கினாள்! தரணியில் நானியங்க, தன்னிகரில்லாக் காதலானாள்! பிள்ளைகள் நான்கேட்க, பெண்களாய் உதித்தனர்! […]
பலமிழக்குமா அமெரிக்க டாலர்?

ஜனவரி 20இல் பதவியேற்றதும், அதிபர் டானல்ட் டிரம்ப் “பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரை அழிக்க முயன்றன. அவர்கள் ஒரு புதிய நாணயத்தை உருவாக்க விரும்புகிறார்கள். டாலரை அழிப்பதாகக் குறிப்பிடும் எந்த பிரிக்ஸ் நாட்டிற்கும் 150 சதவீத வரி விதிக்கப்படும். உங்கள் பொருட்களும், நாடுகளும் உடைந்து போவதை நாங்கள் விரும்பவில்லை” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த வாரம், ”அமெரிக்க டாலருடன் யாரும் விளையாட வேண்டாம். ஒருவேளை அவர்கள் அவ்வாறு செய்தால், குறைந்தபட்சம் 100 சதவீத சுங்க வரியை எதிர்கொள்வார்கள் […]
வெகுஜன நாடுகடத்தல் (Mass deportations)

அமெரிக்க அதிபர் டானல்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தின் முதல் நாளில், அமெரிக்க குடியேற்றச் சட்டம் மற்றும் கொள்கைகளை மாற்றும் நோக்கில் பத்து நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அவற்றில் முக்கியமானவை, அமெரிக்காவில் பிறப்புரிமையின் அடிப்படையில் வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது மற்றும் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள அனைவரையும் நாடு கடத்தும் கொள்கையைக் கடைப்பிடிப்பது எனும் உத்தரவுகள். இவற்றில் பிறப்பு அடிப்படையில் அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்படும் சட்டத்தை எதிர்த்து டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு, கூட்டாட்சி நீதிமன்றம் […]
நல்வாழ்வின் ஆதாரம்

நன்றியுணர்வுடன் வாழ்வை அணுகுவது, நமது அன்றாட அனுபவத்தை அழகானதாக மாற்றுகிறது. மகிழ்சியான சிறிய தருணங்கள் முதல் மிகப்பெரிய பொக்கிஷங்கள் வரை, எதுவாகயிருந்தாலும், நம்மிடம் இருப்பதை நாம் பாராட்டும்போது, கடினமான காலங்களிலும் கூட மகிழ்ச்சியைக் காண உதவும் வளமான கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்கிறோம். தேவைப்படுபவர்களுக்கு உதவுவது என்பது பொருளுதவியாக கொடுப்பது மட்டுமல்ல. மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவதாக இருந்தாலும், மற்றவர்களின் துயரங்கள், சங்கடங்களைக் கரிசனத்துடன் காது கொடுத்து கேட்பதாக இருந்தாலும், மற்றவர்களை ஆதரிப்பது அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்குகிறது. இவ்வித அனுசரனைகள் […]
பனிப்பூக்கள் அகவை 13

உலகத் தாய்மொழி தினமான இன்று நமது பனிப்பூக்கள் சஞ்சிகைக்கு 13 அகவையாகிறது. வாசகர்கள் அனைவருக்கும் உலகத் தாய்மொழி தின வாழ்த்துகள். பனிப்பூக்கள் கடந்து வந்த பாதையை வெ.மதுசூதனன் அவர்கள் கவிதையாக எழுதி, வாசித்த காணொலியை இங்கு காணலாம். எமது பயணத்தில் உறுதுணையாக இருக்கும் வாசகர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் அனைவருக்கும் எங்களது உளமார்ந்த நன்றிகள்.
கேட்பரீஸ்…

“ஏன்னா … கேட்டேளா இந்தக் கதைய?” – வழக்கமான ராகத்துடன் லக்ஷ்மியின் கேள்வி வந்து விழ, அன்றைய தினசரியை மேய்ந்து கொண்டிருந்த கணேஷ் தலையை நிமிர்த்தி, கண்ணாடியை மூக்கின் மத்தியப் பகுதிக்குச் சற்று இறக்கி, அதற்கு மேலே கண்களை ஊடுருவி, அவளிருக்கும் திசை பார்த்து, “என்னடி, என்ன ஆச்சு?” என்றான். “வேலண்டைன்ஸ் வீக் பத்தித் தெரியுமான்னா?” – தனது மொபைல் ஃபோனில் வந்து குதித்த லிங்க்கின் மூலம் படித்துத் தெரிந்து கொண்டு அவனிடம் கேட்டாள். “என்னா, வீக்கா?” […]
குவளைப்பாட்டி

காலை நேர பதட்டம். வேகமாக கல்லூரி போக தயாராகிக் கொண்டு இருந்தாள் அதிதி. வெளியில் அம்மாவின் கால்கள் தையல் இயந்திரத்தில் ஒட்டிய சத்தம் காதை கிழித்தது. அந்த சத்தம் பழகி போன எரிச்சலை கொடுத்தது அதிதிக்கு. சமையல் அறையின் உள்ளே சென்று மதிய உணவை நோட்டம் விட்டாள். அம்மா கொடுத்த மதிய உணவை எடுக்காமல் திருட்டுத் தனமாக கிளம்பினாள். “அதிதி. மத்தியானம் தயிர் சாதம் வெச்சுருக்கேன். எடுத்துட்டு போ. உடம்பு சூடு ஆகுது. வெளில சாப்பிட வேண்டாம்”. […]
வர்த்தகப் போர் – இறக்குமதி வரி

“என்னைப் பொறுத்தவரை, இறக்குமதி தீர்வை (Tariff), அகராதியில் உள்ள மிக அழகானதொரு சொல்லாகும். எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை”. தனது தேர்தல் பிரச்சாரங்களில் ‘இறக்குமதி தீர்வையை’ முக்கிய வாக்குறுதியாக முன்வைத்து வென்று, இரண்டாம் முறை அதிபராகப் பதவியேற்கவுள்ள திரு. டிரம்ப்பின் வார்த்தைகள் இவை. வெற்றிக்குப் பிறகு, அவர் தனது இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார். இதன் முதற்கட்டமாக, சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தபோது, மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும் ஒட்டுமொத்தமாக […]