\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

வரலாறு

கேனன் காட்டாற்று வெள்ளம்

Filed in கலாச்சாரம், வரலாறு by on October 31, 2016 0 Comments
கேனன் காட்டாற்று வெள்ளம்

மினசோட்டா மாநிலத்தின் நாட்டுப்புறமும், பட்டினங்களும் இலையுதிர் காலத்திலே பல அடைமழைகளினால் அல்லல் பட்டவாறுள்ளன. செயின்ட்பால் தலைநகரத்தின் தென்கிழக்கில்  நார்த்ஃபீல்ட் எனும் அமைதியான விவசாய நிலங்கள் மற்றும் சிறிய பல்கலைக் கழகங்கள் கொண்ட ஊர் ஒன்றுள்ளது. கால்ரன் கல்லூரி, மற்றும் செயின்ட் ஓலஃப் பல்கலைக் கழகங்கள் நூற்றாண்டுகளாக நார்த் ஃபீல்ட் ஊரை இருப்பிடமாகக் கொண்டுள்ளன. வளமான இலைகள் கோலாகலமாக ஒருபுறம் நிறம் மாற அதேசமயம் கேனன் (Cannon River) எனும் பட்டினத்தூடு செல்லும் காட்டாறு மடை கடந்து பாய்ந்தவாறுள்ளது. […]

Continue Reading »

சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி

Filed in கலாச்சாரம், வரலாறு by on January 15, 2014 1 Comment
சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி

அரசியல் சாணக்கியர் என்று பலரால் அழைக்கப்பட்ட ராஜாஜி எனும் ராஜகோபாலாச்சாரி பிறந்தது 1878ம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 10ம் நாள். இவர் அப்போதைய சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொரப்பள்ளியில் பிறந்தவர். இவரது தந்தை சக்கரவர்த்தி ஐயங்கார். சமஸ்கிருத பண்டிதரான அவர் தமது பிள்ளையின் படிப்பைக் கருத்தில் கொண்டு ஓசூருக்கு வர, ராஜாஜியின் பள்ளிப்படிப்பு ஓசூரில் துவங்கியது. படிப்பில் மிகவும் சூட்டிகையான மாணவராக இருந்தார் தொடர்ந்து தனது ஆசிரியர்களிடம் கேள்விகள் கேட்டு உலக விஷயங்களைத் தெரிந்துக் கொள்வதில் ஆர்வம் […]

Continue Reading »

சிலப்பதிகாரம்

Filed in கலாச்சாரம், வரலாறு by on December 5, 2013 0 Comments
சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் சேர இளவரசன் இளங்கோ அடிகளால் எழுதப்பட்டது. இவர் புகழ் பெற்ற சேர மன்னன் சேரன் செங்குட்டுவனின்  தம்பி என்றும் அறியப்படுகின்றது. இக்கதை அந்த நாட்களின் பெரும் அரசுகளான சேர சோழ மற்றும் பாண்டிய நாடுகளில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.  சோழ நாட்டின் தலை நகரும் கடற்கரைப் பட்டிணமும் கடல் கொண்டதுமான பூம்புகாரைச் சேர்ந்த கோவலன் மற்றும் அவனது மனைவியான கண்ணகியினது கதையைக் கூறுவதே இந்நூல். இந்நூல் இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று ஒரு சாராரும் எட்டாம் நூற்றாண்டில் […]

Continue Reading »

கலிங்கத்துப்பரணி

Filed in கலாச்சாரம், வரலாறு by on November 4, 2013 0 Comments
கலிங்கத்துப்பரணி

ஆயிரம் யானைகளைப் போரில் வென்ற வீரனைப் பாடும் நூல் பரணி எனப்படும். பரணி என்பது தமிழ் மொழியிலுள்ள 96 வகைப் பிரபந்தங்களுள் ஒன்று. இது கலித் தாழிசையாற் பாடப்பெற்றது. பெரும்போர் புரிந்து வெற்றிபெற்ற வீரனைச் சிறப்பித்துப் பாடுவதையும் பரணி யென்று கூறுவர். கலிங்கத்துப்பரணி என்ற இரண்டு நூல்கள் உள்ளன. அவை முறையே செயங்கொண்டார் மற்றும் ஒட்டக்கூத்தரால் எழுதப்பட்டது. செயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப்பரணியே தமிழின் முதல் பரணி நூல் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பலபட்டடைச் சொக்கநாதர் என்னும் புலவர் “பரணிக்கோர்ச் […]

Continue Reading »

திருப்புறம்பியம்

Filed in கலாச்சாரம், வரலாறு by on November 4, 2013 0 Comments
திருப்புறம்பியம்

காவிரியின் கிளை நதியான மணியாற்றிற்கும் கொள்ளிடத்திற்கும் இடையே அமையப்பெற்ற வளமையான ஊர் திருப்புறம்பியம். சோழர் வரலாற்றை மாற்றியமைத்த பெருமை இவ்வூருக்கு உண்டு. பல்லவரும் பாண்டியரும் கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது.விசயாலயச் சோழர் தஞ்சையை முத்தரையரிடம் இருந்து கைப்பற்றித் தலைநகராக ஆக்கி பல்லவர்களுடன் நட்புடன் ஆட்சி செய்து கொண்டிருந்த காலம்.ஆதித்தச் சோழர் இளவரசுப் பட்டம்மேற்று சோழச் சிற்றரசை சோழப் பேரரசாக ஆக்க கனவு கண்டுகொண்டிருந்த காலம். பாண்டிய நாட்டின் வட எல்லையாகவும் பல்லவ நாட்டின் தென் எல்லையாகவும் சோழநாடு […]

Continue Reading »

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

தமிழ்  கூறும் நல்லுலகில்  காஞ்சி ஒரு பழமையான நகரம். கல்வியில் சிறந்ததோர் காஞ்சி என்னும் வழக்குச் சொல்லிலிருந்தே இந்நகரின்  பெருமை புரியும். காஞ்சி என்ற சொல்லிற்கு அணிகலன் என்று பொருள் கொள்வர். முற்காலத்தில் இவ்வூர் கச்சி அல்லது கச்சிப்பேடு என்று அழைக்கப்பட்டுள்ளது. இதற்கு ”பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே !” போன்ற வரிகளே சாட்சி. நகர நாகரிகங்கள் எப்பொழுதுமே  ஆற்றங்கரையிலேயே அமையும் என்பதற்கு எடுத்துக்காட்டாக,  இந்நகரும் பாலாற்றங்கரையில் செழிப்பான பகுதியில் அமைந்துள்ளது.  காஞ்சி மரங்கள் மிகுதியாக இருந்த […]

Continue Reading »

மூவர் தேவாரம்

மூவர் தேவாரம்

ஓம் நம்ச்சிவாய!

தேவாரம் எனப்படுவது சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் மீது கிபி 6ம் 7ம் 8ம் நூற்றாண்டை சேர்ந்த அப்பர் என்ற திருநாவுக்கரசர், ஆளுடைய பிள்ளை என்னும் திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் இம்மூவரும் சிவாலயங்கள் தோறும் எழுந்து பாடிய இசைத்தோகுப்பே ஆகும். இவர்கள் மொத்தமாகப் பாடியது ஒரு லட்சத்தி இருபதினாயிரம் பாடல்கள் என்பது செவிவழிச்செய்தி.

Continue Reading »

ஈழம் – மதுரை சங்ககால இலக்கியத் தொடர்புகள்

ஈழம் – மதுரை சங்ககால இலக்கியத் தொடர்புகள்

தேவதட்சனால் குபேரனுக்காக இலங்காபுரி அமைக்கப் பட்டதாக இராமாயண உத்தர காண்டம் கூறுகின்றது. காலத்துக்குக் காலம் இலங்கைக்கு பல்வேறு நாட்டினரும் பல பெயர்களைக் கூறி அழைத்துள்ளமையினை வரலாற்றுக் குறிப்புக்களில் இருந்து அறிய முடிகின்றது. ‘ஈழம்’ என்ற பெயரால் பண்டைக் காலத்தில் இலங்கை அழைக்கப் பெற்றமைக்கு கல்வெட்டு ஆதாரங்கள், புதைபொருள் ஆய்வுகள் இன்றும் சான்றாக உள்ள அதே வேளையில் சங்ககால இலக்கியமான பட்டினப்பாலையில் வரும் “ஈழத்துணவும் காழகத்து ஆக்கமும்”(1) என்ற வரி முக்கியம் பெற்றுக் காணப்படுகின்றது. ஈழம் என்றால் ‘பொன்’(2) […]

Continue Reading »

மாந்தை தமிழ்க் குடியேற்றம் – பகுதி 2

மாந்தை தமிழ்க் குடியேற்றம் – பகுதி 2

ஈழநாட்டின் வடமேற்குப்பகுதியில் மாந்தையில் காணப்படும் பழைய தமிழ்க்குடியேற்றமானது, அவ்விடம் வாழ்க்கையைத் தொடர பல்வேறு உவர் நில இயற்கை அம்சங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலை கொண்டிருந்ததைக் காணலாம். குடியேற்ற அமைப்பு இவ்விடத்தில் காணப்படும் மிகவும் பாரிய குடியேற்றமானது கி.பி. 5 ம் ஆண்டில் சுமார் 6000 நிரந்தர வாசிகளை கொண்டிருந்திருக்கலாமென அகழ்வாராய்ச்சிச் சான்றுகள் மூலம் நம்பப்படுகிறது. மாந்தைக் குடியேற்ற நிலப்பரப்புகளில் 30 ஹெக்ரயர்  சுற்றளவில், 12 மீட்டர் ஆழம் வரை மனித நடமாட்ட சுவடுகளைக் காணக்கூடியதாக உள்ளது. மேலும் […]

Continue Reading »

தஞ்சை வரலாறு

தஞ்சை வரலாறு

இஞ்சியும் மஞ்சளும் கொஞ்சித் தவழும் தஞ்சை மாநகர். என்னடா தஞ்சை மாநகர்னு சொல்லுறான், அது ஒரு சின்ன நகரம் அவ்வளவுதானே என்று நினைச்சிங்கன்னா உங்களுக்கு இந்தக் கட்டுரை வியப்பா இருக்கும். இன்னைக்கு மாநகர்ன்னு சொல்ற முக்கால்வாசி நகரங்கள் உருவாவதற்கு முன்னாடியே  தஞ்சாவூர் ஒரு மாநகர். அதுவும் சும்மா இல்ல, தெற்காசியாவின் மிக முக்கியமான மாநகர். ஒரு உவமைக்குச் சொல்லனும்னா இப்போ இருக்கிற வாஷிங்டன் மாதிரி. இந்த ஊர் தலைநகரா இருந்த போது இதன் ஆட்சிக்குக் கீழ் இருந்த […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad