நிகழ்வுகள்
மினசோட்டா பன்னாட்டு கலாச்சார திருவிழா
அமெரிக்காவின் மினசோட்டா மாநிலம், பன்முகத்தன்மை கொண்ட கலை மற்றும் கலாச்சாரங்களின் மையமாகத் திகழ்கிறது. அந்தப் பெருமையை மீண்டும் ஒருமுறை பறைசாற்றும் வகையில், மினசோட்டாவின் புகழ்பெற்ற ‘சர்வதேச கலாச்சாரத் திருவிழா’ (International Festival of Minnesota – IFest-MN) சமீபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. பல ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, புதிய பொலிவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, கடந்த ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் செயின்ட் பால் நகரின் ‘ரிவர்சென்டர்’ (Saint Paul RiverCentre) […]
மினசோட்டா யூனிவர்சிட்டியில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
மினசோட்டா பல்கலைக்கழகத்தில் (University of Minnesota) பயிலும் தமிழ் மாணவர்கள், “தமிழ் ஸ்டூடண்ட்ஸ் ஆர்கனைசேஷன்” (Tamil Students Organization) எனும் அமைப்பின் மூலம் பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த ஏப்ரல் 5ஆம் தேதியன்று தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ‘காஃப்மேன் மெமோரியல் யூனியன் கிரேட் ஹால்’ (Coffman Memorial Union Great Hall) அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு […]
நாட்டிய நிகழ்வு!!
தரங்கிணி நாட்டிய பள்ளியின் முக்கிய நிகழ்வாக நிதி திரட்டுதல் (Fundraising) ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இதன் நோக்கம் உயரியது . இதில் பங்கு கொள்வதும், நம்மால் இயன்ற சிறிய தொகையை வழங்குவதும், கடலில், சிறு துளியாய் நாமும் கலப்பது போன்றே! ஓக் பாயிண்ட் தொடக்கப்பள்ளியில் (Oak Point PTO) உள்ள பெற்றோர் ஆசிரியர் அமைப்பிற்கு ஆதரவளித்து அவர்களை கைத்தூக்கி விடும் ஒரு சிறு முயற்சியே! பெற்றோர் ஆசிரியர் அமைப்பின் மாநாடுகள் அல்லது கூட்டங்கள் நடைபெறும் போதெல்லாம், கல்வியாண்டு […]
2026 ஆங்கில புத்தாண்டு விழா
ஆங்கில புத்தாண்டு என்றாலே அனைவருக்கும் சிறப்பு மகிழ்ச்சி. ஆண்டின் கடைசி நாள் முதல். ஆண்டின் முதல் நாள் வரை பல விதமான கொண்டாட்டங்கள். சிறப்பு வழிபாடுகள் அனைத்து விதமான கொண்டாட்டங்களும் நடைபெறும். மக்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கு உள்ள சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் புத்தாண்டு கொண்டாட்டங்களும் நடைபெறும். வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் உள்ள இந்து கோயிலில் இந்த வருட புத்தாண்டு விழா நடைபெற்றது. இங்கு உள்ள கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக வழிபாடுகள் செய்து […]
“நாட்டிய கலா ஜோதி” பட்டம் பெற்ற லேக்வில் சகோதரிகள்
லேக்வில், மின்னசோட்டா — உள்ளூர் மாணவிகளான செல்வி. மைத்ரி யுக்தா விஜய மணிகண்டன் மற்றும் செல்வி. சாய் ப்ரீக்ஷா விஜய மணிகண்டன் ஆகியோர், செப்டம்பர் 2025-ல் ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (Jackhi Book of World Records) ஏற்பாடு செய்த உலக சாதனை பரதநாட்டிய நிகழ்வில் பங்கேற்று, மதிப்புமிக்க “நாட்டிய கலா ஜோதி” பட்டத்தால் கௌரவிக்கப்பட்டுள்ளனர். மின்னசோட்டாவின் ப்ளைமத்தில் உள்ள நிருத்ய வேதா நடனப் பள்ளியில் ஆறு வயது முதல் பரதநாட்டியம் பயின்று வரும் […]
தரங்கினி நடனப் பள்ளியின் சமூக பணி
கற்கும் காலத்திலிருந்தே சிறந்த அர்ப்பணிப்புள்ள மாணவியாகவும், ஆசிரியப் பணியை உணர்ச்சி பூர்வமாகவும், ஆக்கப் பூர்வமாகவும் செய்து வரும் அமிர்தா சிறந்த நடன கலைஞர் என்பதில் ஐயமில்லை. தாம் பெற்ற நடனக் கலையை, வருங்கால இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில், அவரின் குருவாகிய உயர்திரு. கிட்டு ஐயாவின் ஆசியுடன் 2005 ஆம் ஆண்டில் பெங்களூரில் தொடங்கப்பட்டது தான் “ தரங்கினி நடனப் பள்ளி “(“Taraangini school of dance”) கடந்த 2016 ஆம் ஆண்டு மினசோட்டா மாகாணத்தில் […]
ஹோலி 2025
வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் உள்ள மிலன் மந்திரில் மார்ச் மாதம் 16ஆம் தேதி அன்று அன்று ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத பௌர்ணமி தினத்தில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும், மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதைக் குறிக்கோளாக் கொண்டும் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகையன்று ஒருவரை ஒருவர் சந்தித்து, வாழ்த்துக்களைத் தெரிவித்து, கலர்ப் பொடிகளைத் தூவியும், வண்ண நீரைப் பீய்ச்சி அடித்தும், திலகமிட்டும் […]
சங்கமம் 2025 பொங்கல் விழா
பிப்ரவரி 1, 2025 அன்று மினசோட்டா தமிழ்ச் சங்கம் “சங்கமம் 2025” பொங்கல் விழாவை ஹாப்கின்ஸ் உயர்நிலைப் பள்ளியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. இந்த விழாவில் மரபு சார்ந்த கலை நிகழ்ச்சிகள், கேளிக்கை கொண்டாட்ட ஆட்டங்கள், உணவு விருந்து, விருந்தினர் உரை மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. விழா காலை 10:30 மணிக்கு பொங்கல் சிறப்பு விருந்துடன் தொடங்கியது. இதில் கருப்பட்டி பொங்கல், வடை, கூட்டு, சாம்பார் என பலவிதமான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. மதியம் 12:00 […]
மகளிர் தினம் – 2025
சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் செயல்படும் இந்திய கலை மற்றும் கலாச்சார சங்கம் (Indian Art and Culture Association) ஏற்பாடு செய்திருந்த மகளிர் தின விழா மார்ச் 2 அன்று ஹேவர்டு செயல்திறன் மையத்தில் (Hayward Performance Center) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பல்வேறு நடனப் பள்ளிகளைச் சேர்ந்த திறமைமிக்க உள்ளூர் கலைஞர்களின் கண்கொள்ளாக் கலைநிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வைச் சிறப்பிக்கும் வகையில், புகழ்பெற்ற நடன ஆசிரியர் கலைமாமணி கலா மாஸ்டர் அவர்கள் பிரத்யேக அழைப்பின் […]
இலங்கைத் தமிழ்ப் பாடசாலை தைப் பொங்கல் விழா
இந்தப் படத்தில் பொங்கல் திருவிழாவின் அழகிய சாரம் காணப்படுகிறது. வெண்கலத் தட்டில் பல்வேறு பொருள்கள் அமைக்கப்பட்டுள்ளன. மத்தியில் சிவப்பு மலர்கள் அலங்கரிக்கப்பட்ட நாரியல் (தேங்காய்) வைக்கப்பட்டிருக்கிறது. பக்கவாட்டில் வாழைப்பழங்கள் சுவையாக தொங்கிக் கொண்டிருக்கின்றன. சிறப்பாக வெண்கலக் கிண்ணங்கள் மற்றும் தீபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பச்சை நிறத்தில் ஒரு பாய் விரிக்கப்பட்டு, அதன் மேல் ஒரு வண்ணமய மண்டல வடிவ அலங்காரமும் வைக்கப்பட்டிருக்கிறது. இது தமிழர்களின் மகிழ்ச்சியான சூரியப் பொங்கல் திருவிழாவைக் குறிக்கிறது. அடுத்து நமது பள்ளி அமைப்புக்கு வருவோம். […]






