அன்றாடம்
மினசோட்டா பன்னாட்டு கலாச்சார திருவிழா
அமெரிக்காவின் மினசோட்டா மாநிலம், பன்முகத்தன்மை கொண்ட கலை மற்றும் கலாச்சாரங்களின் மையமாகத் திகழ்கிறது. அந்தப் பெருமையை மீண்டும் ஒருமுறை பறைசாற்றும் வகையில், மினசோட்டாவின் புகழ்பெற்ற ‘சர்வதேச கலாச்சாரத் திருவிழா’ (International Festival of Minnesota – IFest-MN) சமீபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. பல ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, புதிய பொலிவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, கடந்த ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் செயின்ட் பால் நகரின் ‘ரிவர்சென்டர்’ (Saint Paul RiverCentre) […]
மினசோட்டா யூனிவர்சிட்டியில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
மினசோட்டா பல்கலைக்கழகத்தில் (University of Minnesota) பயிலும் தமிழ் மாணவர்கள், “தமிழ் ஸ்டூடண்ட்ஸ் ஆர்கனைசேஷன்” (Tamil Students Organization) எனும் அமைப்பின் மூலம் பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த ஏப்ரல் 5ஆம் தேதியன்று தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ‘காஃப்மேன் மெமோரியல் யூனியன் கிரேட் ஹால்’ (Coffman Memorial Union Great Hall) அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு […]
நாட்டிய நிகழ்வு!!
தரங்கிணி நாட்டிய பள்ளியின் முக்கிய நிகழ்வாக நிதி திரட்டுதல் (Fundraising) ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இதன் நோக்கம் உயரியது . இதில் பங்கு கொள்வதும், நம்மால் இயன்ற சிறிய தொகையை வழங்குவதும், கடலில், சிறு துளியாய் நாமும் கலப்பது போன்றே! ஓக் பாயிண்ட் தொடக்கப்பள்ளியில் (Oak Point PTO) உள்ள பெற்றோர் ஆசிரியர் அமைப்பிற்கு ஆதரவளித்து அவர்களை கைத்தூக்கி விடும் ஒரு சிறு முயற்சியே! பெற்றோர் ஆசிரியர் அமைப்பின் மாநாடுகள் அல்லது கூட்டங்கள் நடைபெறும் போதெல்லாம், கல்வியாண்டு […]
நாதஸ்வர ஆசான் திரு. ரவிச்சந்திரன் நேர்காணல்
நாதஸ்வர ஆசான் முனைவர் காரியாப்பட்டி திரு. க. ரவிச்சந்திரன் அவர்கள் சமீபத்தில் மினசோட்டா வந்திருந்து, இங்குள்ள ஆர்வமுள்ள மாணவர்களுக்கு நாதஸ்வரம் வாசிக்க கற்றுக் கொடுத்தார். அவருடன் நாம் உரையாடிய நேர்காணல் காணொலியை இங்கு காணலாம். இந்த நேர்காணலில் அவர் தனது குடும்பம், கடந்த வந்த இசை பயணம் ஆகியவற்றைப் பற்றி கூறியுள்ளார். நேர்காணல் எடுத்தவர் – சரவணகுமரன் ஒளிப்பதிவு – இராஜேஷ் கோவிந்தராஜ்
2026 ஆங்கில புத்தாண்டு விழா
ஆங்கில புத்தாண்டு என்றாலே அனைவருக்கும் சிறப்பு மகிழ்ச்சி. ஆண்டின் கடைசி நாள் முதல். ஆண்டின் முதல் நாள் வரை பல விதமான கொண்டாட்டங்கள். சிறப்பு வழிபாடுகள் அனைத்து விதமான கொண்டாட்டங்களும் நடைபெறும். மக்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கு உள்ள சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் புத்தாண்டு கொண்டாட்டங்களும் நடைபெறும். வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் உள்ள இந்து கோயிலில் இந்த வருட புத்தாண்டு விழா நடைபெற்றது. இங்கு உள்ள கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக வழிபாடுகள் செய்து […]
‘ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்’
ஜனவரி 3, 2026 அன்று, வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய அதிரடி ராணுவத் தாக்குதலில் அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ‘ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்’ (Operation Absolute Resolve) எனப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை, அதிகாலை 2 மணியளவில் காரகஸ் நகரிலுள்ள அதிபர் மாளிகையில் அரங்கேறியது. இந்த மோதலில், மதுரோவின் பாதுகாப்பிலிருந்த 23 வெனிசுலா படை வீரர்களும், 32 கியூபா நாட்டுச் சிறப்புப் படை வீரர்களும் […]
“நாட்டிய கலா ஜோதி” பட்டம் பெற்ற லேக்வில் சகோதரிகள்
லேக்வில், மின்னசோட்டா — உள்ளூர் மாணவிகளான செல்வி. மைத்ரி யுக்தா விஜய மணிகண்டன் மற்றும் செல்வி. சாய் ப்ரீக்ஷா விஜய மணிகண்டன் ஆகியோர், செப்டம்பர் 2025-ல் ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (Jackhi Book of World Records) ஏற்பாடு செய்த உலக சாதனை பரதநாட்டிய நிகழ்வில் பங்கேற்று, மதிப்புமிக்க “நாட்டிய கலா ஜோதி” பட்டத்தால் கௌரவிக்கப்பட்டுள்ளனர். மின்னசோட்டாவின் ப்ளைமத்தில் உள்ள நிருத்ய வேதா நடனப் பள்ளியில் ஆறு வயது முதல் பரதநாட்டியம் பயின்று வரும் […]
காற்றில் உலவும் கீதங்கள் 2025: இந்த ஆண்டின் டாப் 10 பாடல்கள்!
தமிழ் இசையுலகம் ஒவ்வொரு ஆண்டும் புதுமையையும் உற்சாகத்தையும் அள்ளித் தெளித்து வருகிறது. 2025-ஆம் ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல! மெலடி, துள்ளலிசை, நாட்டுப்புறம் எனப் பல ஜானர்களில் வெளியாகி ரசிகர்களின் ப்ளேலிஸ்ட்டில் நிரந்தர இடம் பிடித்த பாடல்கள் ஏராளம். சமூக வலைத்தளங்களில் வைரலானவை, சினிமா ரசிகர்களின் வாயில் முணுமுணுக்கப்பட்டவை, இசை விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றவை என அனைத்தையும் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டின் (2025) அதிகம் ரசிக்கப்பட்ட டாப் 10 தமிழ்ப் பாடல்களின் பட்டியலை இங்கே வழங்குகிறோம். மோனிகா […]
ஒரு நுண்ணியல் AI குமிழி இல்லை—மூன்று உள்ளன
ஒரு நுண்ணியல் AI குமிழி இல்லை—மூன்று உள்ளன இதன் அர்த்தம் தான் என்ன.? மூத்த தொழில்நுட்பவியலாளர்களும் சில மிதமான முதலீட்டாளர்களும் ஒரு நுண்ணியல் AI குமிழி இருப்பதாக நினைக்கும் போதெல்லாம், பெரும்பாலும் ஒரு நுண்ணியல் AI குமிழி இருக்கும். ஆனால் அது அதை விட மோசமானது. ஒரு நுண்ணியல் AI குமிழி மட்டும் இல்லை: மூன்று உள்ளன. முதலாவதாக, பொருளாதார வல்லுநர்கள் சொத்து குமிழி அல்லது ஊக குமிழி என்று அழைப்பதில் நுண்ணியல் AI நிச்சயமாக உள்ளது. […]






