சமையல்
பீஃப் வெலிங்டன் அகலடுப்புச் சமையல்

குளிர்காலத்தில் அகலடுப்பு (Oven) மூலம் பார்க்கப் பொலிவாகவும், சற்று ஏளிதாகவும் செய்யக்கூடியது உரொட்டி தயாரிப்பது போன்ற, வெலிங்டன் வகை வாட்டி வேகவைக்கும் சமையல். பிரித்தானியர் பீஃப் எனும் மாட்டு இறைச்சியைப் பாவிப்பதை விரும்பினும், இதனைக் கோழி, ஏன் உருளைக்கிழங்கு மசாலாவுடனும் இலகுவாகத் தயாரிக்க முடியும். உரொட்டியில் மூடப்பட்ட மாமிசம் (filet de bœuf en croûte – fillet of beef in pastry) என்ற பிரெஞ்சு சமையலை பிரித்தானியர் பின்பற்றி சமைக்க, காலப்போக்கில் அது பீஃப் […]
சமையல் : ஸ்பானியப் பயேயா (Spanish Paella)

இது என்ன வினோதமானப் பெயராக இருக்குதே என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் நீங்கள் கடலுணவுப் பிரியர் என்றால் உங்களுக்காகக் காத்திருக்கிறது இந்த ஸ்பானியக் கடலுணவுப் பொக்கிஷம். இவ்விடம் நாம் தரும் ஸ்பானிய பயேயா சமையல் குறிப்பு, தமிழ் சமையலறையில் எளிதாக உருவாக்கிக் கொள்ளக்கூடியது. மேலும் சைவம் மட்டுமே சாப்பிடக்கூடியவர்களும் இதை எவ்வாறு செய்யலாம் என்ற குறிப்பும் கீழே வழங்கப்பட்டுள்ளது. ஸ்பானிய பயேயா உண்மையில் இத்தாலி நாட்டு வெலேன்சியா கடல் சார்ந்த இடத்திலிருந்து உருவானது என்று கருதப்படுகிறது. இத்தாலியரும், […]
எலுமிச்சை மெறாங் பை (Lemon Meringue Pie)

குளிர் காலம் ஆரம்பித்து விட்டது; சுற்றுப்புற சூழல் யாவும் மந்தமாகும் காலமிது. இச்சமயத்தில் நாக்குத் தித்திக்க மினசோட்டா மற்றும் அண்டை மாநிலங்களில் பனிக் காலப் பண்டிகை, கேளிக்கைகளில் பாங்காகப் பகிரப்படும் உணவுகளில் ஒன்று தான் எலுமிச்சை மெறாங் பை. இது எலுமிச்சையின் புளிப்பு, சர்க்கரையின் இனிப்பு சேர்ந்த பாகினை மத்தியிலும், ஒரத்தில் நறுக்கான மாவினால் ஆன கோது (crust) கொண்டும் அமைந்திருக்கும். தேவையானவை பாகு செய்ய 1 கோப்பை சீனி ½ கோப்பை சோள மாவு (Corn […]
கோழி சுக்கா

சுலபமான முறையில் சுவையான கோழி சுக்காவுக்கான செயல்முறை இது. தேவையான பொருட்கள்: கோழி – 400g –ஊறவைக்க தேவையான பொருட்கள்:– மஞ்சள் தூள் – 1 tsp காஷ்மீரி மிளகாய்த் தூள் – 2 tsp கொத்தமல்லித் தூள் – 2 tsp கரம் மசாலாத் தூள் – 1 tsp சீரகத் தூள் – 1 tsp மிளகுத் தூள் – 1 tsp இஞ்சி பூண்டு விழுது – 2 tbsp தயிர் – […]
பூரிக்க வைக்கும் மஞ்சள் பூசணியும் பச்சிலையும்

வட அமெரிக்கக் குளிர் மாதங்களில், பனிக் காலத்தில் எம்மை உற்சாகப்படுத்த உணவு வகை உதவி தரும். பனிக் காலத்தில் எமது உடலின் நோய் தடுப்புத் தன்மையை உந்து செய்ய மஞ்சள் (turmeric) திரவியமும், சற்று இதமான இனிப்புத் தன்மையான மஞ்சள், செம்மஞ்சள் நிறப் பூசணியும். சிறு கருநீல கேல் (kale), கீரை போன்ற இலை தழையும் இனிமையாகும். குளிர் காலத்தின் வெயில் இல்லாத் தன்மை நுண்கிருமிகள் ஆதிக்கம் அதிகரிக்க வாய்ப்புக்களை உருவாக்குகிறது. பூசணி பற்றிய சிறு வரலாறு […]
அமெரிக்கக் கெய்ஜின் உணவு

கடல் உணவு ரசிகரா நீங்கள்? அப்படியென்றால், உங்களுக்குக் கஜூன் வகை உணவு பற்றித் தெரிந்திருக்கலாம். தெரிந்திருந்தால், அப்படியே ஜம்ப் செய்து அடுத்தப் பத்திக்கு சென்று விடுங்கள். தெரியாதவர்களுக்கு, ஒரு சிறிய அறிமுகம். கஜூன் என்ற சமையல் முறைக்குச் சொந்தக்காரர்கள், அகாடிய இனக்குழு மக்கள். 18 ஆம் நூற்றாண்டில் இந்த மக்கள் கனடாவிலிருந்து, அமெரிக்காவின் லூசியானா மாநில சதுப்பு நிலப்பரப்பில் குடியமர்த்தப்பட்டனர். அப்போது இந்த அடிமை மக்களின் வாழ்வியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. நிலப்பரப்பு, தட்பவெட்பம், உணவு பொருட்கள் […]
மோர் பான்கேக் ஆப்பம் (Buttermilk Pancake)

வட அமெரிக்காவில் மீண்டும் இலை துளிர் காலம் ஆரம்பிக்கவுள்ளது. மினசோட்டா , ஒன்ராரியோ மற்றும் அயல் வடகிழக்கு நிலங்களில் இது சர்க்கரை மேப்பிள் மரங்கள் இனிக்கும் இரசங்களை வடிக்கும் காலம். மேப்பிள் இரசச் சேகரிப்பு பூர்வீக வாசிகளும், ஸ்கந்திநேவியக் குடியேறிகளும் மகிழ்வுடன் பங்கு பெறும் ஒரு சில வாரக் குதூகலம் ஒன்றுண்டு. அது எதுவென்று கேட்கிறீர்களா? அது பஞ்சு மெத்தை போன்ற மோர் பான் கேக்கும் அதன் மேல் மெதுவாக ஊற்றிக் குழந்தைகளும், பெரியவர்களும் சுவைத்து மகிழும் […]
சிங்கறால் பொரித்த சோறு

வட அமெரிக்கப் பண்டிகைக் காலங்கள் அண்மிக்கின்றன, இதன் போது கடலுணவு வேண்டும் தமிழர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கீழேயுள்ள சமையலைத் தருகிறோம். சிங்கறால் பொரியல் சோறு இறால், மற்றும் நண்டு, கணவாய், சிப்பி போன்ற கடல் உணவுகளுடனும் தயாரித்துக் கொள்ளலாம். கடலுணவு வகைகளின் சுவை, அவை எவ்வளவு பக்குவமாகச் சமைக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தே அமையும். தேவையானவை: 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி பப்பிரிக்கா (paprika) 1 – 2 கரண்டி கறித் தூள் 2 கோப்பை […]
ஆப்பிள் டோநட் பணியாரம்

வட அமெரிக்காவில் இலையுதிர் காலம் வந்து விட்டது. இதனால் இவ்விடம் இலை தழைகள் நிறம் மாறுவது ஒரு புறம்; சுவையான பழ அறுவடைகள் மறுபுறம். தமிழர் பிறந்த நிலங்களில் கறுவாப்பட்டை, ஏலக்காய் வாசம் இயல்பாகவே உள்ளது. ஆயினும், அமெரிக்காவுக்கு வருகை தந்த ஐரோப்பியக் குடிகள் கொண்டுவந்து அறிமுகப்படுத்திய ஆப்பிள் பழச் சோலைகளின் பாரம்பரியமோ தனி வகை. மென்மையான ஆப்பிள் பழ நறுமணம் கறுவாப்பட்டையுடன் கலந்து மூக்கை மொய்த்து வயிற்றையும் நாக்கையும் ஊற வைக்கும் வாசம், வட அமெரிக்காவில் […]