\n"; } ?>
Top Ad

முகவுரை

இன்றைய நாள் இனிய நாள்

இன்றைய நாள் இனிய நாள்

மார்ச் மாதம் என்றவுடன், மரங்களில் இலைகள் துளிர்த்து, வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் ரம்மியமானச் சூழல் மனதில் உருவாவது இயல்பு. இயற்கையின் படைப்பில் தாவரங்களும், மரங்களும் புத்துயிர் பெறுவதைப் போல, வாழ்க்கையில் வசந்தம் என்பது மாற்றங்களை உணர்த்தி புதிய தொடக்கங்கள், நம்பிக்கைகளைத் துளிர்க்கச் செய்கிறது. குளிர்கால இறுக்கங்கள் களையப்பட்டு, மன ரீதியாக மட்டுமல்லாமல், உடலிலும் மெலிதான  புத்துணர்ச்சி பரவும்.  இந்த உத்வேகத்தைக் குறிக்கவே, இப்பருவத்தை ஆங்கிலத்தில் ‘ஸ்ப்ரிங்கிங் டைம்’ (springing time)  அல்லது சுருக்கமாக ‘ஸ்ப்ரிங்’ (Spring) […]

Filed in தலையங்கம் by on March 9, 2025 0 Comments

வார வெளியீடு

வேலு ஆசானின் பத்மஸ்ரீ அனுபவங்கள்

வேலு ஆசானின் பத்மஸ்ரீ அனுபவங்கள்

பறை கலைஞர் திரு. வேலு ஆசான் அவர்கள் தான் பத்மஸ்ரீ விருது பெற்ற தருணத்தை நினைவு கூர்ந்து அந்த அனுபவங்களை நம்முடன் இந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். பேட்டி எடுத்தவர் – சரவணகுமரன் ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ்

அதிபர் டிரம்பின் ஆறு மாதங்கள்

அதிபர் டிரம்பின் ஆறு மாதங்கள்

அமெரிக்காவின் நடப்பு அதிபராக, அதாவது 47வது அதிபராக, திரு. டிரம்ப் பதவியேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளது. தேர்தலுக்கு முன்னர், பல உத்தரவாதங்களை முன் வைத்து பேசினாலும், சுருக்கமாக ‘உலக அரங்கில் அமெரிக்கா இழந்திருக்கும் நன்மதிப்பையும், மரியாதையையும் மீட்பேன். அமெரிக்காவை மீண்டும் சிறப்புறச் செய்வேன்’ எனும் தாரக மந்திரத்தை வாக்காளர்கள் மனதில் அழுந்த பதியச் செய்து, வெற்றியும் கண்டார். வரிச் சுமையைக் குறைத்தல், விலைவாசியைக் குறைத்தல், முறையற்ற குடியேற்றங்களைத் தடுத்தல், உலகில் நடைபெறும் போர்களை முடிவுக்கு கொணர்தல், அமெரிக்கத் […]

கீழடி அகழாய்வு

கீழடி அகழாய்வு

தென் தமிழ்நாட்டில், வைகை ஆற்றின் அமைதியான வளைவில், கீழடி அமைந்துள்ளது. 2013 வரை, கோயில் நகரமான மதுரைக்கு அருகாமையில் இருப்பதைத் தவிர்த்து, மிக அரிதாகவே பேசப்பட்ட கிராமம் . ஆனால் கடந்த பத்தாண்டுகளில், இந்த சிற்றூர் இந்தியாவின் மிகத் தீவிரமான தொல்பொருள் மற்றும் அரசியல் விவாதங்களில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் மத்தியத் தொல்லியல் துறை நடத்திய ஆகழ்வாய்வில் அங்கு, 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் சங்க […]

கடவுள் இல்லையே

கடவுள் இல்லையே

மேடையில் ஒலிபெருக்கியில் நடன வகுப்புகளின் பெயர்களை அழைத்தார் நிகழ்ச்சி தொகுப்பாளர். முதல் வரிசையில், பேத்தியின் நடனத்தைப் பார்ப்பதற்காகக் காத்திருந்த மீனாட்சி அம்மாள் நிமிர்ந்து உட்கார்ந்தாள். இவளது பேத்தியின் நடனப் பள்ளி தான் அடுத்து ஆடப் போகிறது. ஒலிபெருக்கியில் “இடது பதம் தூக்கி ஆடும் ..” பாடல் ஒலித்தது. பதினைந்து வயது அனன்யா அவளது குழுவுடன் நடனமாடினாள். மீனாட்சி அம்மாளின் முகத்தில் பெருமிதம், புன்னகை எல்லாம் சேர்ந்து கலந்தது. அருகில் இருந்த கணவர் சதாசிவத்திடம் “பாருங்கோ பாருங்கோ , […]

Filed in கதை, வார வெளியீடு by on July 26, 2025 1 Comment
பாட்டி வீட்டுப் பரண் – பகுதி 3

பாட்டி வீட்டுப் பரண் – பகுதி 3

முன் பகுதி சுருக்கம்    அமெரிக்காவில் இருந்து ஐஷு பாட்டி வீட்டிற்கு விடுமுறைக்காக வருகிறாள். அங்கு பாட்டி வீட்டு தூணில் ஒரு அதிசய படிக்கட்டு இருப்பதை கண்டு அதன் உள்ளே செல்கிறாள். அந்தப் படிக்கட்டு ஒரு பரணில் சென்று விட, ஐஷு அங்கு உள்ள ஒரு புத்தகத்தின் உள்ளே இழுத்து செல்லப் படுகிறாள். … இனி இது என்ன இடம்? தான் எங்கு இருக்கிறோம் என்று ஐஷுவிற்கு புரியவில்லை. ஏதோ பெரிய வீடு.  பாட்டி வீடா இது […]

Filed in கதை, வார வெளியீடு by on July 26, 2025 0 Comments
பேராசிரியர் முனைவர் திரு. பா. இராசா பேட்டி

பேராசிரியர் முனைவர் திரு. பா. இராசா பேட்டி

பல்வேறு தமிழர் கலைகளைக் கற்று நிபுணத்துவம் பெற்று, அதில் பல ஆய்வுகளைச் செய்து வரும் பேராசிரியர் முனைவர் திரு. பா. இராசா அவர்கள், இந்தப் பேட்டியில் தனது குடும்பப் பின்னணி குறித்தும், இத்துறையின் மீதான ஆர்வம் குறித்தும் விரிவாக பேசியுள்ளார். நேர்காணல் & படத்தொகுப்பு – சரவணகுமரன் ஒளிப்பதிவு – இராஜேஷ் கோவிந்தராஜ்

நாடகக் கலைஞர்கள் எனும் சமூக செயற்பாட்டாளர்கள்!!

நாடகக் கலைஞர்கள் எனும் சமூக செயற்பாட்டாளர்கள்!!

மூத்த தமிழ் மேடை நாடக இயக்குனர், நடிகர், முனைவர் திரு. ராஜு ராஜப்பன் அவர்களுடனான விரிவான நேர்காணலின் நிறைவு பகுதியை இந்தக் காணொலியில் காணலாம். நவீன நாடகங்களின் பங்கு குறித்தும், திரைத்துறை அனுபவம் குறித்தும் இந்தப் பகுதியில் திரு. ராஜூ அவர்கள் பேசி உள்ளார். நேர்காணல் மற்றும் படத்தொகுப்பு – சரவணகுமரன் ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ்

பாட்டி வீட்டு பரண் – பகுதி 2

பாட்டி வீட்டு பரண் – பகுதி 2

முன் பகுதி சுருக்கம்  அமெரிக்காவில் இருந்து ஐஷு பாடி வீட்டிற்கு விடுமுறைக்காக வருகிறாள். அங்கு பாட்டி வீட்டு தூணில் ஒரு அதிசய படிக்கட்டு இருப்பதை கண்டு அதன் உள்ளே செல்கிறாள். இனி .. இயல்பிலேயே ஐஷு ஒரு துறு துறு பெண். அதனாலேயே அந்த தூண் திடீரென்று பிளவு கொண்டு அதில் படிக்கட்டுகள் தெரிந்த போது பயம் இல்லாமல் அதில் காலை வைக்க முடிந்தது. வளைந்து வளைந்து சென்ற அந்தப் படிகளில் பழைய ஒட்டடைகள் இருந்தது. அதை […]

பாட்டி வீட்டு பரண் – பகுதி 1

பாட்டி வீட்டு பரண் – பகுதி 1

“என் பேத்தி பொண்ணே.” பதில் வர வில்லை.  “என் அம்மு பொண்ணே”. பெருங்குரலில் கூப்பிட்டாள் பாட்டி பதில் வர வில்லை.  நமுட்டு சிரிப்பு சிரித்தபடி பாட்டி வேணுமென்றே ,”என் ஐஸ்வர்ய சுகந்தம்மா ” என இழுக்க . “No… Call me Ash.”  என்று சிணுங்கிய படி ஒன்பது வயது பெண் ஒளிந்திருந்த இடத்தில் இருந்து வெளியில் வந்தாள்.  “ஆஷ் ஆ? அப்படினா சாம்பல் இல்ல. என் தங்கத்தை எப்படி அப்படி கூப்பிடுவேன்” “இந்த ஐஸ்வர்யம் சுகந்தம் […]

கவிதை

மகளிர் தின வாழ்த்துக்கள்

மகளிர் தின வாழ்த்துக்கள்

பூமியில் வந்திறங்க, பூதவுடல் வருத்தினாள்! பூரணமாய் வந்தியங்க, பூஞ்சிறகில் வளர்த்திட்டாள்! தீதின்றிப் பிறந்திட்டேன், நன்மைகள் கூட்டினாள்! தீரமுடன் வளர்ந்திட, திண்மைகள் காட்டினாள்!   அன்னையவள் பிரிந்தபின் அவளிடத்தை அலங்கரித்தாள்! அன்னியர்கள் அணுகாமல் அருகிருந்து காத்திட்டாள்। அண்ணியர்கள் இல்லம்வர, அரவணைத்தே இணைத்திட்டாள்! அணங்கவளைக் கரம்பிடிக்க, அலங்கரித்தே பார்த்திட்டாள்!   தமக்கையும் தன்வழிபோக, தேவதையவள் புகுந்திட்டாள்! தளிர்க்கரத்தால் கல்லிதனைத் தரமான சிலையாக்கினாள்! தலைமையில் எனையேற்ற,  தன்னையே ஏணியாக்கினாள்! தரணியில் நானியங்க, தன்னிகரில்லாக் காதலானாள்!   பிள்ளைகள் நான்கேட்க, பெண்களாய் உதித்தனர்! […]

பனிப்பூக்கள் அகவை 13

பனிப்பூக்கள் அகவை 13

உலகத் தாய்மொழி தினமான இன்று நமது பனிப்பூக்கள் சஞ்சிகைக்கு 13 அகவையாகிறது. வாசகர்கள் அனைவருக்கும் உலகத் தாய்மொழி தின வாழ்த்துகள். பனிப்பூக்கள் கடந்து வந்த பாதையை வெ.மதுசூதனன் அவர்கள் கவிதையாக எழுதி, வாசித்த காணொலியை இங்கு காணலாம். எமது பயணத்தில் உறுதுணையாக இருக்கும் வாசகர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் அனைவருக்கும் எங்களது உளமார்ந்த நன்றிகள்.

கலிஃபோர்னியா பற்றி எரிகிறது

கலிஃபோர்னியா பற்றி எரிகிறது

  இயற்கை சொர்க்கத்தை எரிக்க விரும்பியது கலிஃபோர்னியா பற்றி எரிகிறது பல தசாப்தங்களாக நிலைத்து நின்ற வீடுகளையும் குடும்பக் கதைகளையும்  நேசத்துக்குரிய நினைவுகளையும்  பாதுகாத்த பொக்கிஷங்கள்  ஒரு தீ மூச்சில் அழிக்கப்பட்டன இன்னும் தீ பரவுகிறது தென் கலிஃபோர்னியா ஒரு தீப்பொறியாக மாறிவிட்டது ஒரு கவிஞர் தனது உயிருக்காகத் தப்பி ஓட  தனது காரை கைவிடுகிறார் தீக்காயம் பட்ட தனது குழந்தையை  ஆம்புலன்ஸ் எடுத்துச் செல்ல   பின்னே ஓடுகிறாள் ஒரு தாய்  ஒரு சிற்பியின் கண்கள்  கனவுகளின் […]

இனி ஒரு விதி செய்வோம்

இனி ஒரு விதி செய்வோம்

இங்கே விதிகள் பலவகை உண்டே இவைகளை உடைத்திட  இங்கேயே யாருண்டு?   தேவதூதனைத் தேடுகிறோம் அவதாரங்களுக்காக  அங்கலாய்கிறோம்   மனிதம் இங்கே  தலை தூக்கிட   மானிட சமுதாயம் மாறிடவே வழிவகுப்போம்   சமுதாய நீதியைச் சமைத்திட சாதித்திடுவோம்   ஆண் பெண்  இரண்டே சாதி   எல்லாமும் எல்லோருக்குமே கிடைப்பதே சமூகநீதி   அன்பின் உலகம்  ஆர்வமாய் படைத்திட்டே   அகிலம் சிறக்க பாடு படுவோம்   உயர்வு தாழ்வு இல்லாத சமுதாயம்   சமைத்திடவே […]

இறைத்தூதர்

இறைத்தூதர்

அறைந்தேன் ஆணியதை மிகச்சிறிதாய், படம் மாட்ட! அது சற்றே விலகி சுண்டுவிரல் பதம் பார்க்க, அழுதேன் சுருண்டு விழுந்தே, விளைந்த வலி மாற! அந்த வலி சற்றே நீங்க, சடுதியில் மனம் நினைக்க,   அகத்தினிலே திருவுருவாய் ஆண்டவர் மலர்ந்தருள, அவர்மேனி சிலுவையிலே ஆணிகளால் நிறைந்தறைய, அங்கமெலாம் உதிரமுமாய் அணிவித்த முள்கிரீடமென, அவயமெலாம் வலித்திருக்க அவைகருதா நகைப்புற்ற   அவதார புருஷரவர் அமைதியாய் அகிலமுய்ய அபயமென்றே இறங்கிவந்த அன்புருவாம் இறைத்தூத! அவதரித்த நாளிதிலே அங்கமுழுதும் புழுதிபட அறிந்த […]

இயேசு பிறப்பு நற்செய்தி

இயேசு பிறப்பு நற்செய்தி

ஆண்டின் இறுதியும் – புதிய ஆண்டு புகுமுன் நிகழும் ஆண்டவர் பிறப்பு நற்செய்தியும் ஆவல் தூண்டிட   ஆயிரம் வர்ண விளக்குகள் ஆதவன் அடங்க மின்னி ஆகாயம் ஒளிர்ந்து ஆனந்தம் பொங்கிட   ஆடம்பரத் திருவிழா ஆட்டங்கள் களைகட்ட  ஆன்ம இசை விருந்துகள்  ஆசையாய் அரங்கேற   ஆகம வார்த்தையானவரை  ஆனந்த பாசுரம் பாடி  ஆலயத்திலும் அகத்திலும் ஆராதித்துப் போற்றிட   ஆதி இல்லாதோன் மகனே ஆன்ம நேசராய் அகிலம் காக்க ஆவியார் அன்னை மரியை ஆட்கொள்ள […]

சமையல்

சுட்டு / வாட்டிச்சமைப்பது (Grilling) எளிதானது

சுட்டு / வாட்டிச்சமைப்பது (Grilling) எளிதானது

கோடைகாலங்களில்,  புறநகர் பகுதிகளில், பல அப்பாக்கள் தங்கள் வீட்டின் பின்புறத்திலோ, பூங்காக்கள் போன்று பொதுவெளியிலோ வாட்டு அடுப்பு அல்லது வலைத்தட்டிகளில் (Grill) இறைச்சி, காய்கறிகள், பழங்களை நெருப்பிலும், புகையிலும் வாட்டி சமைப்பதைப் பார்த்திருக்கிறோம். நேரடியாக தணலில் சமைப்பதால் உணவின் மணமும், தன்மையும் காற்றில் பரவி, புதியதொரு சுவையுணர்வை அளிக்கும். குடும்பமாக, திறந்தவெளியில் நேரத்தைச் செலவிட எத்தனிக்க நினைக்கும் எவருக்கும், அதே சந்தர்ப்பத்தில் உணவும் தயாராவது அலாதியானதொரு அனுபவத்தைத் தரக்கூடும். தண்ணீரில் வேகவைக்காமல், பாத்திரங்கள்  அதிகமில்லாமல் நேரடியாக நெருப்பில் […]

நிகழ்வுகள்

தரங்கினி நடனப் பள்ளியின் சமூக பணி

தரங்கினி நடனப் பள்ளியின் சமூக பணி

கற்கும் காலத்திலிருந்தே சிறந்த அர்ப்பணிப்புள்ள மாணவியாகவும், ஆசிரியப் பணியை உணர்ச்சி பூர்வமாகவும், ஆக்கப் பூர்வமாகவும் செய்து வரும் அமிர்தா சிறந்த நடன கலைஞர் என்பதில் ஐயமில்லை. தாம் பெற்ற நடனக் கலையை, வருங்கால இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில், அவரின் குருவாகிய உயர்திரு. கிட்டு ஐயாவின் ஆசியுடன் 2005 ஆம் ஆண்டில் பெங்களூரில் தொடங்கப்பட்டது தான் “ தரங்கினி நடனப் பள்ளி “(“Taraangini school of dance”) கடந்த 2016 ஆம் ஆண்டு மினசோட்டா மாகாணத்தில் […]

ஹோலி 2025

ஹோலி 2025

வட அமெரிக்காவில்  உள்ள மினசோட்டா மாநிலத்தில் உள்ள மிலன் மந்திரில் மார்ச் மாதம் 16ஆம் தேதி அன்று அன்று ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.  ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத பௌர்ணமி தினத்தில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும், மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதைக் குறிக்கோளாக் கொண்டும் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகையன்று ஒருவரை ஒருவர் சந்தித்து, வாழ்த்துக்களைத் தெரிவித்து, கலர்ப் பொடிகளைத் தூவியும், வண்ண நீரைப் பீய்ச்சி அடித்தும், திலகமிட்டும் […]

சங்கமம் 2025 பொங்கல் விழா

சங்கமம் 2025 பொங்கல் விழா

பிப்ரவரி 1, 2025 அன்று மினசோட்டா தமிழ்ச் சங்கம் “சங்கமம் 2025” பொங்கல் விழாவை ஹாப்கின்ஸ் உயர்நிலைப் பள்ளியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. இந்த விழாவில் மரபு சார்ந்த கலை நிகழ்ச்சிகள், கேளிக்கை கொண்டாட்ட ஆட்டங்கள், உணவு விருந்து, விருந்தினர் உரை மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. விழா காலை 10:30 மணிக்கு பொங்கல் சிறப்பு விருந்துடன் தொடங்கியது. இதில் கருப்பட்டி பொங்கல், வடை, கூட்டு, சாம்பார் என பலவிதமான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. மதியம் 12:00 […]

மகளிர் தினம் – 2025

மகளிர் தினம் – 2025

சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் செயல்படும் இந்திய கலை மற்றும் கலாச்சார சங்கம் (Indian Art and Culture Association) ஏற்பாடு செய்திருந்த மகளிர் தின விழா மார்ச் 2 அன்று ஹேவர்டு செயல்திறன் மையத்தில் (Hayward Performance Center) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பல்வேறு நடனப் பள்ளிகளைச் சேர்ந்த திறமைமிக்க உள்ளூர் கலைஞர்களின் கண்கொள்ளாக் கலைநிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வைச் சிறப்பிக்கும் வகையில், புகழ்பெற்ற நடன ஆசிரியர் கலைமாமணி கலா மாஸ்டர் அவர்கள் பிரத்யேக அழைப்பின் […]

திரைப்படம்

விடாமுயற்சி – திரை விமர்சனம்

விடாமுயற்சி – திரை விமர்சனம்

1997 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளிவந்த ‘ப்ரேக்டௌன்’ எனும் திரைப்படத்தைத் தழுவி வந்த தமிழ்த் திரைப்படம் “விடாமுயற்சி”. இருபத்தி ஏழு வருடங்களுக்கு முன்னர் பார்த்த கர்ட் ரஸ்ஸல் முழுவதுமாக மறந்து விட்டிருக்க, நம்ம ‘தல’யின் அளவான நடிப்பு அந்தத் திரைப்படத்தை ஒப்பீடலாக மனதிற்குள் கொண்டு வரவேயில்லை என்பதுதான் உண்மை. காதலித்துத் திருமணம் செய்து கொண்ட அஜித்தும், த்ரிஷாவும் சோவியத் யூனியனின் ஒரு பகுதியான அஜர்பெய்ஜானின் தலைநகரான ‘பாகு’வில் வசித்து வருகின்றனர். சில பல காரணங்களுக்காக விவாகரத்து செய்வது […]

காற்றில் உலவும் கீதங்கள் – 2024

காற்றில் உலவும் கீதங்கள் – 2024

இவ்வருடத்தில் வெளியான படங்களில் இருந்து ரசிகர்களைக் கவர்ந்த பாடல்களில் தொகுப்பு. அரண்மனை 4 – அச்சோ அச்சோ சென்ற வருடம் அனிருத் இசையில், தமன்னா ஆட்டத்தில் புகழ்பெற்ற “வா காவலா வா” பாடல் போலவே, இவ்வருடம் ஹிப்ஹாப் ஆதி இசையில் தமன்னா மற்றும் ராஷி கன்னா ஆட்டத்தில் ஹிட் அடித்த பாடல் இது. அதே போன்ற இசை, அதே போன்ற ஆட்டம், ரசிகர்களுக்கும் அதே போல் பிடித்துப் போனது. பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களைத் […]

பேட்டி

வேலு ஆசானின் பத்மஸ்ரீ அனுபவங்கள்

வேலு ஆசானின் பத்மஸ்ரீ அனுபவங்கள்

பறை கலைஞர் திரு. வேலு ஆசான் அவர்கள் தான் பத்மஸ்ரீ விருது பெற்ற தருணத்தை நினைவு கூர்ந்து அந்த அனுபவங்களை நம்முடன் இந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். பேட்டி எடுத்தவர் – சரவணகுமரன் ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ்

ஆன்மிகம்

தவக்காலம் மனிதம் மலரும் ஓர் வசந்த காலம்!

தவக்காலம் மனிதம் மலரும் ஓர் வசந்த காலம்!

அனைவருக்கும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய பெயரால் வணக்கமும் வாழ்த்துக்களும்…! நம் கத்தோலிக்க தாய்த் திரு அவை, இந்த 2025ஆம் ஆண்டினை ‘புனித ஆண்டு’ ஆண்டாக அறிவித்து, “நம்பிக்கையின் திருப்பயணிகள்” என்ற நோக்குடன் கடந்து செல்ல, நம்மை இறைவழியில் ஒருங்கிணைத்து அழைத்துச் செல்கிறது. கத்தோலிக்க திரு அவை, மன்னிப்பு மற்றும் நல்லிணக்கத்திற்கான சிறப்பு ஆண்டுகளை புனித ஆண்டாக (ஜூபிலி) கொண்டாடுகிறது. இத்தகைய புனித ஆண்டில், திருப்பயணிகளாகிய நாம் பயணிக்க ஆரம்பித்த நிலையில், இறைமகன் இயேசுவின் மீது […]

மினசோட்டா மலையாளி சங்கத்தின் கிறிஸ்துமஸ் விழா 2024

மினசோட்டா மலையாளி சங்கத்தின் கிறிஸ்துமஸ் விழா 2024

மினசோட்டா மலையாளி  அமைப்பு (Minnesota Malayalee Association) ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றது. இந்தாண்டு டிசம்பர் 7ஆம் தேதி அன்று மினசோட்டா, புளூமிங்டன் நகரில் அமைந்துள்ள ஆல்சன் நடுநிலை பள்ளியில்  (Olson Middle School, Bloomington, MN) கிறிஸ்துமஸ் விழாவை நடத்தியிருந்தார்கள் அவர்கள். மினசோட்டாவில் உள்ள  கேரள மக்களும், இன்னும் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர். மதிய உணவுடன் ஆரம்பித்த விழாவில், பல விதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சுமார் மூன்று […]

கட்டுரை

அதிபர் டிரம்பின் ஆறு மாதங்கள்

அதிபர் டிரம்பின் ஆறு மாதங்கள்

அமெரிக்காவின் நடப்பு அதிபராக, அதாவது 47வது அதிபராக, திரு. டிரம்ப் பதவியேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளது. தேர்தலுக்கு முன்னர், பல உத்தரவாதங்களை முன் வைத்து பேசினாலும், சுருக்கமாக ‘உலக அரங்கில் அமெரிக்கா இழந்திருக்கும் நன்மதிப்பையும், மரியாதையையும் மீட்பேன். அமெரிக்காவை மீண்டும் சிறப்புறச் செய்வேன்’ எனும் தாரக மந்திரத்தை வாக்காளர்கள் மனதில் அழுந்த பதியச் செய்து, வெற்றியும் கண்டார். வரிச் சுமையைக் குறைத்தல், விலைவாசியைக் குறைத்தல், முறையற்ற குடியேற்றங்களைத் தடுத்தல், உலகில் நடைபெறும் போர்களை முடிவுக்கு கொணர்தல், அமெரிக்கத் […]

கீழடி அகழாய்வு

கீழடி அகழாய்வு

தென் தமிழ்நாட்டில், வைகை ஆற்றின் அமைதியான வளைவில், கீழடி அமைந்துள்ளது. 2013 வரை, கோயில் நகரமான மதுரைக்கு அருகாமையில் இருப்பதைத் தவிர்த்து, மிக அரிதாகவே பேசப்பட்ட கிராமம் . ஆனால் கடந்த பத்தாண்டுகளில், இந்த சிற்றூர் இந்தியாவின் மிகத் தீவிரமான தொல்பொருள் மற்றும் அரசியல் விவாதங்களில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் மத்தியத் தொல்லியல் துறை நடத்திய ஆகழ்வாய்வில் அங்கு, 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் சங்க […]

அமெரிக்க விருந்தாளி – நூல் விமர்சனம்

அமெரிக்க விருந்தாளி – நூல் விமர்சனம்

உலக நாடுகளின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், புவியியல், இனம், உரிமை என்ற எதோவொரு காரணத்துக்காகப் போர்கள் தொடுக்கப்பட்டதையும், அதனால் ஏற்பட்ட அழிவுகளையும் அறிய முடியும். அவற்றில், மனித இனம் நாகரிகமடைந்த பின்பு நிகழ்ந்த இரண்டாம் உலகப் போர் மிகக் கொடூரமான பேரழிவுகளை உண்டாக்கியது. ஏறத்தாழ ஏழு மில்லியன் மக்களின் உயிரை மாய்த்த இந்தப் போரில் பல நாடுகள் சுயத்தை இழந்தன; பல தலைமுறை கடந்தும் அதன் பாதிப்புகளிலிருந்து விடுபடாத குடும்பங்கள் ஏராளம். கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில், […]

செர்ரி பூக்கள்

செர்ரி பூக்கள்

அன்பான வாசகர்களே, செர்ரி பூக்களை நான் இப்படித்தான் விவரிப்பேன். அழகான நீல வானத்தின் கீழ், மென்மையான செர்ரி மலர்கள் தங்கள் வெளிர் இளஞ்சிவப்பு இதழ்களை விரித்து, சாதாரண தெருக்களையும் பூங்காக்களையும் அழகின் கனவு நடைபாதைகளாக மாற்றுகின்றன. இது போன்று மினசோட்டா மாநிலத்தில் குங்கும பூக்கள் சித்திரை அல்லது ஏப்ரலில் மாதத்தில் மலரும். செர்ரி பூக்கள் இயல்பாக ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு அற்புதமாக பூத்து,  பின்னர் மென்மையான இளஞ்சிவப்பு , நாவல், வெள்ளை, மஞ்சள் நிறங்களில் […]

கதை

கடவுள் இல்லையே

கடவுள் இல்லையே

மேடையில் ஒலிபெருக்கியில் நடன வகுப்புகளின் பெயர்களை அழைத்தார் நிகழ்ச்சி தொகுப்பாளர். முதல் வரிசையில், பேத்தியின் நடனத்தைப் பார்ப்பதற்காகக் காத்திருந்த மீனாட்சி அம்மாள் நிமிர்ந்து உட்கார்ந்தாள். இவளது பேத்தியின் நடனப் பள்ளி தான் அடுத்து ஆடப் போகிறது. ஒலிபெருக்கியில் “இடது பதம் தூக்கி ஆடும் ..” பாடல் ஒலித்தது. பதினைந்து வயது அனன்யா அவளது குழுவுடன் நடனமாடினாள். மீனாட்சி அம்மாளின் முகத்தில் பெருமிதம், புன்னகை எல்லாம் சேர்ந்து கலந்தது. அருகில் இருந்த கணவர் சதாசிவத்திடம் “பாருங்கோ பாருங்கோ , […]

Filed in கதை, வார வெளியீடு by on July 26, 2025 1 Comment
பாட்டி வீட்டுப் பரண் – பகுதி 3

பாட்டி வீட்டுப் பரண் – பகுதி 3

முன் பகுதி சுருக்கம்    அமெரிக்காவில் இருந்து ஐஷு பாட்டி வீட்டிற்கு விடுமுறைக்காக வருகிறாள். அங்கு பாட்டி வீட்டு தூணில் ஒரு அதிசய படிக்கட்டு இருப்பதை கண்டு அதன் உள்ளே செல்கிறாள். அந்தப் படிக்கட்டு ஒரு பரணில் சென்று விட, ஐஷு அங்கு உள்ள ஒரு புத்தகத்தின் உள்ளே இழுத்து செல்லப் படுகிறாள். … இனி இது என்ன இடம்? தான் எங்கு இருக்கிறோம் என்று ஐஷுவிற்கு புரியவில்லை. ஏதோ பெரிய வீடு.  பாட்டி வீடா இது […]

Filed in கதை, வார வெளியீடு by on July 26, 2025 0 Comments
பாட்டி வீட்டு பரண் – பகுதி 2

பாட்டி வீட்டு பரண் – பகுதி 2

முன் பகுதி சுருக்கம்  அமெரிக்காவில் இருந்து ஐஷு பாடி வீட்டிற்கு விடுமுறைக்காக வருகிறாள். அங்கு பாட்டி வீட்டு தூணில் ஒரு அதிசய படிக்கட்டு இருப்பதை கண்டு அதன் உள்ளே செல்கிறாள். இனி .. இயல்பிலேயே ஐஷு ஒரு துறு துறு பெண். அதனாலேயே அந்த தூண் திடீரென்று பிளவு கொண்டு அதில் படிக்கட்டுகள் தெரிந்த போது பயம் இல்லாமல் அதில் காலை வைக்க முடிந்தது. வளைந்து வளைந்து சென்ற அந்தப் படிகளில் பழைய ஒட்டடைகள் இருந்தது. அதை […]

பாட்டி வீட்டு பரண் – பகுதி 1

பாட்டி வீட்டு பரண் – பகுதி 1

“என் பேத்தி பொண்ணே.” பதில் வர வில்லை.  “என் அம்மு பொண்ணே”. பெருங்குரலில் கூப்பிட்டாள் பாட்டி பதில் வர வில்லை.  நமுட்டு சிரிப்பு சிரித்தபடி பாட்டி வேணுமென்றே ,”என் ஐஸ்வர்ய சுகந்தம்மா ” என இழுக்க . “No… Call me Ash.”  என்று சிணுங்கிய படி ஒன்பது வயது பெண் ஒளிந்திருந்த இடத்தில் இருந்து வெளியில் வந்தாள்.  “ஆஷ் ஆ? அப்படினா சாம்பல் இல்ல. என் தங்கத்தை எப்படி அப்படி கூப்பிடுவேன்” “இந்த ஐஸ்வர்யம் சுகந்தம் […]

காப்பகங்கள் (Old posts)

பிரிவுகள் (Categories)

ad banner
Bottom Sml Ad