\n"; } ?>
Top Ad
banner ad

பலதும் பத்தும்

மினசோட்டாவில் வைகாசி விசாக முருகர் வழிபாடு

Filed in பலதும் பத்தும் by on July 27, 2026 0 Comments
மினசோட்டாவில் வைகாசி விசாக முருகர் வழிபாடு

மினசோட்டா மாநிலத்தில் வசிக்கும் முருகப் பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நடத்திய வைகாசி விசாகத் திருவிழா மே 31, 2026 அன்று ஹப்கின்ஸ் ஆக்டிவிட்டி சென்டரில் (Hopkins Activity Center) பக்திப்பூர்வமாக நடைபெற்றது. அன்று மதியம் 3:00 மணிக்கு வைகாசி விசாக சிறப்பு வழிபாடுகள் தொடங்கின. மினசோட்டா ஹிந்து மந்திர் அர்ச்சகர் கௌரி சங்கர் அவர்கள் முருக வழிபாட்டுச் சடங்குகளை முறைப்படி முன்னின்று நடத்தினார். பூஜையின் போது, திரளாகக் கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முருகப் பெருமானின் புகழ்பாடும் […]

Continue Reading »

மினசோட்டா பன்னாட்டு கலாச்சார திருவிழா

Filed in பலதும் பத்தும் by on April 29, 2026 0 Comments
மினசோட்டா பன்னாட்டு கலாச்சார திருவிழா

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலம், பன்முகத்தன்மை கொண்ட கலை மற்றும் கலாச்சாரங்களின் மையமாகத் திகழ்கிறது. அந்தப் பெருமையை மீண்டும் ஒருமுறை பறைசாற்றும் வகையில், மினசோட்டாவின் புகழ்பெற்ற ‘சர்வதேச கலாச்சாரத் திருவிழா’ (International Festival of Minnesota – IFest-MN) சமீபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.  பல ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, புதிய பொலிவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, கடந்த ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் செயின்ட் பால் நகரின் ‘ரிவர்சென்டர்’ (Saint Paul RiverCentre) […]

Continue Reading »

பலமிழக்குமா அமெரிக்க டாலர்?

பலமிழக்குமா அமெரிக்க டாலர்?

ஜனவரி 20இல் பதவியேற்றதும், அதிபர் டானல்ட் டிரம்ப்  “பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரை அழிக்க முயன்றன. அவர்கள் ஒரு புதிய நாணயத்தை உருவாக்க விரும்புகிறார்கள். டாலரை அழிப்பதாகக் குறிப்பிடும் எந்த பிரிக்ஸ் நாட்டிற்கும் 150 சதவீத வரி விதிக்கப்படும். உங்கள் பொருட்களும், நாடுகளும் உடைந்து போவதை நாங்கள் விரும்பவில்லை” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த வாரம், ”அமெரிக்க டாலருடன் யாரும் விளையாட வேண்டாம். ஒருவேளை அவர்கள் அவ்வாறு செய்தால், குறைந்தபட்சம் 100 சதவீத சுங்க வரியை எதிர்கொள்வார்கள் […]

Continue Reading »

இளவெனில் காலம் நிறம் தீட்டுக

இளவெனில் காலம் நிறம் தீட்டுக

Continue Reading »

பரதநாட்டியத்தில் உலகச் சாதனை

பரதநாட்டியத்தில் உலகச் சாதனை

பரதநாட்டியம் எனும் செவ்வியல் நடன வடிவம், இந்தியாவின் மிகத் தொன்மையான, பாரம்பரிய நடனமாகவும், பல இந்திய நடன வடிவங்களின் மூலமாகவும் கருதப்படுகிறது. ‘பரதம்’, ‘நாட்டியம்’ எனும் சொற்களின் கூட்டாக வழங்கப்பெறும் இக்கலையில், சமஸ்கிருத கூற்றுப்படி பரதம் என்ற சொல், ப – பாவம் (உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மை), ர – ராகம் (இன்னிசை), த – தாளம் (ஒத்திசைவு)  என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, பாரம்பரியமாக இந்த வார்த்தை பாவங்களை(உணர்வின் வெளிப்பாடு), ராகம்(இசை) மற்றும் […]

Continue Reading »

ஹோலி 2023

ஹோலி 2023

வட அமெரிக்காவில்  உள்ள மினசோட்டா மாநிலத்தில் உள்ள மிலன் மந்திரில் மார்ச் மாதம் 12ஆம் தேதி அன்று அன்று ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.  ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத பௌர்ணமி தினத்தில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும், மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதைக் குறிக்கோளாக் கொண்டும் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகையன்று ஒருவரை ஒருவர் சந்தித்து, வாழ்த்துக்களைத் தெரிவித்து, கலர்ப் பொடிகளைத் தூவியும், வண்ண நீரைப் பீய்ச்சி அடித்தும், திலகமிட்டும் […]

Continue Reading »

தமிழ்த் திருவிழா 2023

தமிழ்த் திருவிழா 2023

உலகத் தாய்மொழி தினத்தையொட்டி மினசோட்டாத் தமிழ்ப் பள்ளி ஆண்டுதோறும் நடத்தும் ’தமிழ்த் திருவிழா’ கடந்த இரு வருடங்களாக நோய்தொற்றுக்காலத்தில் நடைபெறாமல் இருந்தது. இவ்வாண்டு, தமிழ்ப்பள்ளி நேரடி வகுப்புகளாக நடைபெற தொடங்கியதைத் தொடர்ந்து, தமிழ்த் திருவிழா தமிழ்ப்பள்ளி வளாகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட மாணவர்கள் தமிழர் உணவுகள், இடங்கள், விளையாட்டுகள், தொழில்கள், எழுத்தாளர்கள் என வெவ்வேறு தலைப்புகளில் கண்கவர் காட்சிப்பொருட்களைச் செய்து மக்களின் பார்வைக்குக் கொண்டு வந்திருந்தனர். […]

Continue Reading »

வீழும் வங்கிகள்

வீழும் வங்கிகள்

அண்மையில் பெரு வங்கிகள் சில நொடித்து, திவால் நிலைக்குத் தள்ளப்படுவது பொதுமக்களிடையே அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது. பொதுவாகப் பங்கு வர்த்தகம், பத்திரங்கள், வீடு / மனை போன்ற அசையாச் சொத்துகளில் முதலீடு செய்யுமளவுக்குப் பொருள், அனுபவமில்லாத  இல்லாத  மக்கள் இருப்பதைப் பாதுகாப்பாக வைக்கவும், எதிர்காலத் தேவைகளுக்காகவும்,  வங்கிகளில் சேமிப்பதுண்டு. அத்தகையோரது நம்பிக்கைகளை அசைத்துள்ளது தொடர்ந்து நிகழும் வங்கிகளின் வீழ்ச்சி. அமெரிக்காவில் இதற்கு முன்பும் சில தனியார் வங்கிகள் திவாலானதுண்டு. ஆனால்  ஏற்கனவே மந்தநிலை நோக்கி நகர்ந்து வரும் அமெரிக்கப் […]

Continue Reading »

#பாய்காட்

#பாய்காட்

அண்மைக்காலங்களில், இந்திய வட்டாரச் சமூக வலைத்தளங்களில் பரவலாகக் காணப்படும் சொல் ‘புறக்கணிப்பு’. இந்த புறக்கணிப்பு அழைப்புகள் அரசியல் கொள்கை, கட்சி, தலைவர் அல்லது வன்முறை இயக்கங்கள் குறித்தவை அல்ல; சமூகத்தைப் பாதிக்கும் வியாபாரப் பொருட்கள், போதை வஸ்துகள் சம்பந்தப்பட்டவை அல்ல; சுற்றுச் சூழலைப் பாதிக்கும் மாசுப் பரவல், பசுங்குடில் வாயுக்கள் பற்றியவை அல்ல;  திரைப்படங்கள் குறித்தவை – அதிலும் புராணத்தை இழிவுப்படுத்தி, வரலாற்றைத் திரித்து சமூகத்தில் கிளர்ச்சியைத் தூண்டும் திரைப்படங்கள் குறித்து அல்ல; இந்தியத் திரைப்படங்களின் வழக்கமான […]

Continue Reading »

மினசோட்டாவில் இந்திய சுதந்திர தின விழா 2022

மினசோட்டாவில் இந்திய சுதந்திர தின விழா 2022

இந்தியாவின் 75வது சுதந்திரத் தினத்தை மினசோட்டாவில் உள்ள ‘இந்தியன் அசோசியேஷன்   ஆஃப் மினசோட்டா’ (IAM) அமைப்பினர், செயின்ட் பாலில் உள்ள மாநில தலைமைக் கட்டிட மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி நடத்தினர். விழா மைதானத்தில் பல வகையான இந்திய உணவகங்கள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு இடங்கள், குழந்தைகள் விளையாட பல்வேறு விளையாட்டுப் பகுதிகள், மெஹந்தி கூடங்கள் என நிரம்பி வழிந்தன. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக  இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் சங்கங்களும் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad