\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மே மாதம் மினசோட்டா மீன் பிடிப்பு ஆரம்பம்

பல்லாயிரம் மாநில வாசிகள் தம் பனிகாலத்தைப் பின்வைத்து கோடையில் காலெடுத்து வைக்கும் முதல் பொழுதுபோக்கு நாள் மினசோட்டா மீன் பிடிப்பு தொடக்க நாள் எனலாம். இது வழமையாக அன்னையர் தினத்திற்கு முதல் நாள் வருவதினால்  சில வீடுகளில் தகராறு ஏற்படுவதுண்டு. எனினும் மினசோட்டாவில் மீன் பிடிக்கும் அன்னையருக்கு இது இரு கொண்டாட்டங்களினால் உவகையடையும் நாள் என்று  நாம் கருதிக்கொள்ளலாம்.

இயற்கையன்னை தனது எழிலை இதமாகப் படைத்துள்ளாள் எம் மாநிலத்தில். மினசோட்டா மாநிலத்தை 10,000 ஏரி மாநிலம் என்று பெருமையாக அழைக்கிறோம். உண்மையில் ஏறத்தாழ 12,000 மேற்பட்ட ஏரிகளும், ஆறுகளும், நீர்ச்சுனைகளும் உண்டு. இவற்றில் மீன் பிடிக்கக் கூடியவை 5,400 ஏரிகள்.

மீன் பிடிப்பு ஆரம்ப நாள்

மின் பிடிப்பு ஆரம்பம் என்பது Fishing Opener என்று இவ்விடம் அழைக்கப்படும். இது பல்லாண்டுகளாக பொழுது போக்குக்காக  மீன்பிடிக்கும் மக்களால் சிறப்பு வார இறுதியாக  எடுத்துக்கொள்ளப்படும். இவ்விடம் பல குடும்பங்கள் இதை சந்ததிகளாக ஒன்று கூடி ஆறு,ஏரிகளுக்குப் போகும் நாளாகவும், உணவு சமைத்துக் கொள்ளும் நாளாகவும் இருக்கும்.

நான் பல தசாப்தங்களுக்கு முன்னர் இவ்விடம் வந்த போது, என்னை வரவேற்ற பல்கலைக்கழக நண்பர் குடும்பம் இதுவும் ஒரு கோடையாரம்பக் கொண்டாட்டமாகவே எடுத்துக் கொண்டனர். ஸகந்துநேவியப் பாட்டா ஜோர்க்கசன் சொல்வார் “இது இளவெனிற்காலம் பனி போயாச்சு, இடை விடாது ஏரியில் அமர்ந்து இயற்கையுடன் ஒன்று சேர வேண்டும்”.

காலையில் எழுந்து நாள் முழுக்க ஏரியில் நிலைத்திருக்க  புரதம்,உரொட்டி, பழம், பழச்சாறுகள் கூடிய விசேட காலையுணவு. பின்னர் மாலையுணவுக்கு சில வாலாய் (Walley)  மீன்கள் பிடித்து வருதல் இதுவே இந்த மீன்பிடிப்பு ஆரம்ப நாளின் பிரதான நோக்கம். பின்னர் ஏரிக்கரையில் புதிதாகவும், அனுபவசாலிகளும் படகுகளை இறக்குவதை பார்த்து சிரிப்பதும் அடுத்து படகில் ஏறி உச்சி வெயில் ஓயும் வரை மீன்பிடித்து, தூண்டிலில் சிக்கிய மீனை வலை போட்டு படகுக்குள் குளிர்நீர் பெட்டிகளில் மாலை வரை வைத்தல். இதுவே வழக்கமான ஆரம்ப நாள் தொட்டு இலையுதிர்காலம் வரை எம் மாநில மக்களின் ஒரு சாரார் பொழுது போக்கு.

வாலாய் மீன் Walleye (Sander vitreus, synonym Stizostedion vitreum) இது ஒரு நன்னீர் freshwater கெண்டை வகை மீன். இது வட அமெரிக்கக், கனேடிய, ஏரிகளின் பூர்விக மீன். இந்த மீன் ஐரோப்பிய சாண்டர் (Zander),மற்றும் ஐரோப்பிய. ருஷ்ய பைக் பேர்ச் (pikeperch) போன்ற இனங்களின் தொடர்பினையும் உடையது.

பாட்டா போய்விட்டார் ஆயினும் அவர் படகும், துடுப்பும் இன்றும் அவர் பேரப் பிள்ளைகளால் பாவிக்கப்பட்டு வருகிறது. வட அமெரிக்க மீன்பிடிப்பாளர் யாவருக்கும் எமது வாழ்த்துக்கள்.

சில தகவல் மினசோட்டா மீன்பிடித்தல் துணுக்குகள்.

மினசோட்டா மின்பிடி ஆரம்பமே மாநில உல்லாசத்துறை ஆரம்பம்.

வாலாய் மீன் பிடித்தல் மாநிலத்திற்கு எவ்வளவு பெரியது?

அமெரிக்க நாட்டு வனவிலங்கு இலக்காவின் படி 2011 ஆண்டிலே 1.6 மில்லியன் மாநில வாசிகள் ஒட்டு மொத்தமாக 20 மில்லியன் நாட்களை மீன்பிடித்தல் பொழுது போக்கில் செலவழித்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அவ்வருடம் மினசோட்டா $2.4 பில்லியனை மீன்பிடித்தலுக்குத் தேவையான இதர விடயங்களில் செலவழித்துள்ளார்களாம்.

இதோ மினசோட்டா மீனவர்களின்  அவ்வருட விரிவான செலவழிப்பு விவரம்

  • பயணம், தங்கும் சாவடி போன்ற செலவுகள் $ 925 மில்லியன்
  • உணவு,சாவடி தனியாக $370 மில்லியன்
  • போக்குவரத்து $270 மில்லியன்
  • சமையல் உபகரணங்கள், மீன்பிடித் தூண்டில்கள், மின் பிடித்தீனி கொள்வனவு, படகு, மற்றும் உபகரண வாடகை $282 மில்லியன்.
  • சாதாரண பொழுது போக்கு மீன்பிடியாளர் 2011ம் ஆண்டு சராசரியாக $589 பயணச்செலவுகளில் செலவழித்துள்ளனர்.
  • மீன்பிடி உபகரணங்களில் மாத்திரம் மினசோட்டா மாநில பொழுது போக்கு மின்பிடியாளர் $1.4 பில்லியன் செலழித்துள்ளனர்
  • தூண்டில் வலைகள் மாத்திரம் $376 மில்லியன்கள் செலவழித்துள்ளனர்.
  • மீன்பிடித்தல் விசேட உபகரணங்கள், பிரத்தியேக படகுகள்,இழுக்கும் இயந்திரங்கள்,வண்டிகள் போன்றவற்றில் $1.1 பில்லியன் மினசோட்டர் 2011இல் மாத்திரம் செலவு செய்துள்ளனர்.
  • மேலும் குடியெடுப்புத் தகவல் துறையின் ஒவ்வொரு 5 வருட கால கணிப்புக்களின் படி ஏறத்தாழ மாநில பொழுது போக்கு மீன்பிடிப்பாளர் மினசோட்டா மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட மீன்பிடி நாட்களில் 82 சதவீதத்தை வீணாக்காமல் பாவித்துக் கொள்வார்களாம்.

குறிப்பு – மாநிலத்தில் மீன்பிடிக்கும் ஒவ்வொரு வயதிற்கு வந்தவரும், அதற்கு சட்டப்படி மாநில ஒப்பு (license) பத்திரம் வாங்கிக் கொள்ள வேண்டும்.  மினசோட்டா வாகன ஓட்ட பத்திரம் உள்ள யாவரும் மீன்பிடிப்புப் பத்திரம் வனவிலங்கு இலாக்காக் காரியாலங்கள் DNR offices, மற்றும் எரிபொருள் தரிப்பிடம் (Gas stations) போன்ற இடங்களில் வாங்கிக் கொள்ளலாம்.

இவ்வருட மீன்பிடி காலம் அதாவது 2017-2018 மே மாதம் 13ம் தேதி 2017 யிலிருந்து  பிப்ரவரி  25ஆம் தேதி 2018 வரை ஒதுக்கப்பட்டுள்ளது.

  • தொகுப்பு யோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad