\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

தாய்நாடு திரும்புவாய்..!.செல்லமகனே..!

Filed in இலக்கியம், கவிதை by on July 30, 2017 1 Comment

எந்தன் தாயுன்னைத் தேடுகிறாள்
—-எங்கே சென்றாய் செல்லமகனே..!
தாய் நாட்டில் கல்வியறிவுபெற்று..
—-அயல் மண்ணில் பணியாற்றவா..!
இயந்திரமாய் எளிதில் பொருளீட்ட..
—-இயல் புக்கெதிராய் மாறினாயோ..!
நீவளர்ந்த ஊரிங்கே நித்தம்..
—-நீரின்றி நிலமெல்லாம் சிதையுதப்பா..!
கருகிய பயிர்கள் கண்டுழல்கிறான்
—-வெறுப்பினில் வெந்தநம் நல்லுழவன்..!
வரப்பின் மீதேறிவாடுகிறான் விவசாயி..
—-சிரசினுள் சிந்தையுளியிதை வைப்பாயா.!
உணவினும் மேலொன்று மில்லையந்த
—-உணவையுண்டு வாழ்ந்த உன் தாய்நாட்டுப்
பற்றுடைக் கொண்டதன் பங்கமகற்று!.அதன்
—-இடையூறைப் போக்குமட்டு முறங்காதே..!
வானாளும் நம்நாட்டறிஞர் பலரும்..
—-தன்நாட்டையும் தாயையும் மறந்து..
மேனாட்டு மோகத்தால் அஃதோ..
—-பன்னாட்டில் பணிசெய்யும் நிலையில்..
நீரின்றியழியும் தாய்நாட்டை நீபெற்ற
—-சீர்மைக் கல்வியறிவால் சீராக்குவாயா.?
பெருநிதி ஒதுக்கிய அரசுத்திட்டமாம்..
—-பெருநதியிணைக்க நீபெற்றறிவு தகுமா.!
என்னுயிர் என்னுடல் என்னாவியெலாம்
—-எந்தன் தாய்மண்ணுக்கே எனுமுணர்வு
ஓங்கிய இக்கொள்கையினை என்றுமே
—-உலகுக் குணர்த்திடுவா யென்மகனே..!
நன்றேதான் நம்தாயுனக்கு அறிவூட்டினாள்.!
—-நற்றமிழை நாவூட்டினாள் நன்றேதான்.!
தாய்ப்பாலை அமுதாக அருந்தி வளர்ந்தநீ..நம்
—-வாய்க்காலும் ஆறும்பெருக வழிசெய்..!
நாமுதித்த தாய்மண்ணின் நலமே..
—-நாம்பெற்ற கல்விநற் பயனுறவெண்ணி..
நீமதிக்கும் மண்ணிற்குச் சேவைசெய்ய..
—-தாமததித்துத் தள்ளிவைக்கா முடிவெடு..!

-பெருவை பார்த்தசாரதி

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Govindan K says:

    Very good; a very appealing call to our citizens to come back and contribute to India’s development and prosperity.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad