\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

புளூபெரிப் பழங்களின் மகிமை

தற்போது எமது நாட்டில் வருடத்தின்  எந்த மாதத்திலும் புளூபெரி கிடைக்கக் கூடியதாக இருப்பினும், இந்தப் பழங்களுக்கும் பருவகாலங்கள் உண்டு. மினசோட்டா மற்றும் அண்டை மாநிலங்களில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் புளூபெரி அறுவடை காலமாகும். காட்டு புளூபெரிகள் (Wild Blueberries) வட மினசோட்டாவில் ஜூன் மாதத்திலிருந்து கிடைக்கும்.

இந்தச் செடிகள் ஏறத்தாழ அமெரிக்காவில் 38 மாநிலங்களில் வளர்கிறது. இதில் பத்து மாநிலங்களில் விவசாய உற்பத்திக்கென வளர்க்கப்பட்டு வருகிறது. கலிஃபோர்னியா, ஃபுளோரிடா, ஜார்ஜியா, இண்டியானா, மிஸிஸிப்பி, நியூ ஜெர்சி, வட கரோலைனா, ஒரிகான் மற்றும் வாஷிங்டன் மாநிலங்களே இதைப் பிரதான அறுவடைப்பயிராக எடுத்துக் கொள்கின்றன. மினசோட்டாவில் சிறிய தோட்டங்களும், இயற்கை புளூபெரிகளும் மட்டுமே உண்டு.

புளூபெரி பழமானது தமிழர்களுக்குப் புதியது. ஊரில் நாவல் பழமே ஊதா,கரு நீல நிறம் உடையது. அதன் சுவை ஔவைப்பாட்டி முதல் அனைவரும் சுவைத்ததுண்டு.  நாவல் பழம் பெரும் மரத்தில் காய்க்கும், விதையுள்ள பழம். புளூபெரிப்பழம் மிருதுவானது, மிகச் சிறிய, நாக்கில் கரையகூடிய  விதைகளைக் கொண்டிருக்கும்; கொத்துக்கொத்தாக செடிகளில் காய்க்கும் சிறந்த பழம்.

இந்து சமுத்திரத்தில் பிறந்து வட அமெரிக்க உபகண்டத்தில் புகுந்து வாழும் தமிழராகிய நம்மில் பலர் படிப்படியாக இவ்வூர் பழங்களையும் பழகிச் சுவைத்தவாறுள்ளோம். எமது பிள்ளைகளைப் பொறுத்தளவில் புளூபெரிப் பழங்கள், பிளாக் பெரி, ராஸ்பெரி, ஸ்ட்ராபெரி போன்றவை வெகு  சகஜமாக உட்கொள்ளப்படும் பழங்கள்.

இந்தச் சிறிய புளூபெரிப்பழங்கள் பல அருமையான உடல் நலன்களைத் தரவல்லது.

  1. புளூபெரிப்பழம் குறைந்த கலோரியுடன் பரந்த சத்துக்களை தரும் ஒரு கோப்பை புளூபெரிப்பழங்கள் ஏறத்தாழ 5 அவுன்ஸ்/150 கிராம் நிறை கொண்டிருக்கும். இதில் 85% சதவீதம் நீர், 84 கலோரிகள் உயிர்ச்சத்தும், ½ அவுன்ஸ்/15 கிராம் மாப்பொருளும் காணப்படும்.

 

இதன் சத்துக்களைப் பிரித்துப் பார்த்தால்

நார்ச்சத்து  Fiber 4 கிராம்

வைட்டமின் C  24% தினசரி உட்கொள்ளும் அளவு (1 கோப்பையில்)

வைட்டமின் K  36% தினசரி உட்கொள்ளும் அளவு (1 கோப்பையில்)

மங்கனீஸ் Manganese C  24% தினசரி உட்கொள்ளும் அளவு (1 கோப்பையில்)

அத்துடன் இதரத் தாதுப் பொருட்கள் காணப்படும்

 

  1. புளூபெரிப்பழம் பாரிய உயிர்வளியேற்றத் தடுப்பி (Antioxidant) உணவு உயிர்வளியேற்றத் தடுப்பியானது, தீவிர நிலையற்ற மூலக்கூறுகள் (Free radical molecules) தாக்கங்களிலிருந்து உடலைக் காக்க வல்லது. பழங்களில் புளூபெரிப்பழமானது அதிக உயிர்வளியேற்றத் தடுப்பிகளைக் கொண்டுள்ளது. இதில் காணப்படுவது பாலிபினால்கள் (Polyphenols) குடும்பவகை உயிர்வளித் தடுப்பியாகும். Antioxidant and neuroprotective properties of blueberry polyphenols: a critical review https://pubmed.ncbi.nlm.nih.gov/21756533/

  1. புளூபெரிப்பழம் உயிர்மரபணு (DNA) சிதைவைத் தவிர்த்து முதுமை அடைவதைப் பின்போட வல்லது. எமது உடலில் தினமும் பல்லாயிரம் உயிர்மரபணுக்களின் சிதைவு நடைபெறுவது சாதாரணம். இதன் ஒரு பரிவிளைவு முதுமை அடைதல். புளூபெரியானது இந்த இயற்கையான மரபணுச்சிதைவை தனது உயிர்வளித்தடுப்பி கொண்டு பிற்போட வல்லது.

Impact of multiple genetic polymorphisms on effects of a 4-week blueberry juice intervention on ex vivo induced lymphocytic DNA damage in human volunteers https://pubmed.ncbi.nlm.nih.gov/17602170/

 

  1. புளூபெரிப்பழம், ரத்தக்கொழுப்பு(Cholestrol) இரத்தத்தில் கலக்கப்படுவதைத்  தவிர்க்க உதவும். உடலில் காணப்படும் கொழுப்புச் சத்து  பலவகையுண்டு. இவற்றில் LDL எனப்படும் பாதகமான கொழுப்புச் சத்து சிதைவுற்று இரத்தத்தில் கலப்பதை புளூபெரி தவிர்க்கிறது. தினமும் 2 அவுன்ஸ்/50 கிராம் உட்கொண்டால் அது 27% பாதகமான கொலஸ்திரோல் இரத்தத்தில் சிதைந்து கலப்பதைத் தவிர்த்துள்ளது.  

 

Blueberries decrease cardiovascular risk factors in obese men and women with metabolic syndrome https://pubmed.ncbi.nlm.nih.gov/20660279/

  1. புளூபெரிப்பழம் இயற்கையாக இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவலாம். 8 வார மருத்துவ ஆய்வில் அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள், தினமும் 2 அவுன்ஸ்/50 கிராம் புளுபெரி உட்கொண்டு 4-6% இரத்த அழுத்தக் குறைவைக் கண்டு  பயனடைந்துள்ளனர்

 

Blueberries decrease cardiovascular risk factors in obese men and women with metabolic syndrome https://pubmed.ncbi.nlm.nih.gov/20660279/

 

  1. புளூபெரிப்பழம் இதய நோய்களிலிருந்து காக்க உதவும் High anthocyanin intake is associated with a reduced risk of myocardial infarction in young and middle-aged women https://pubmed.ncbi.nlm.nih.gov/23319811/

 

  1. புளூபெரிப்பழம் மூளை தொழிற்படுவதைப் பேணவும், மறதித்தன்மையைக் குறைக்கவும் உதவலாம்

16,000 முதிவர்களைக் கொண்டு 6 வருடம் நடத்திய ஆய்வின் பின்னர்  புளூபெரி ஸ்ட்ராபெரி உட்கொண்டவர்களின் மூளையானது ஞாபக மறதியை 2.5 ஆண்டுகள் வரை பிற்போட்டுள்ளது.

Dietary intakes of berries and flavonoids in relation to cognitive decline

 https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/ana.23594

 

  1. புளூபெரிப்பழத்தில் காணப்படும் அந்தோசயனின் (Anthocyanins) சலரோக நோயின் உக்கிரத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது
  2. புளூபெரிப்பழம் பலவேறு சிறுநீர் வழி தொற்றுநோய்களையும் (Urinary Tract Infections (UTI)) தவிர்க்க வல்லது 

Anti-Escherichia coli adhesin activity of cranberry and blueberry juices https://pubmed.ncbi.nlm.nih.gov/1674106/

  1. புளூபெரிப்பழம் உடற் பயிற்சியினால் வரும் தசை சிதைவுகளையும் குறைக்க உதவும்.

 

    ஊர்க்குருவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad