\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

வார வெளியீடு

விநாயகர் சதுர்த்தி | உரையாடல்

விநாயகர் சதுர்த்தி | உரையாடல்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் குறித்தும், பண்டிகை குறித்தும் திரு. மதுசூதனன், திரு. சரவணகுமரன் அவர்கள் உரையாடிய பாகம்.  

Continue Reading »

டைகர் கா ஹுக்கும் ..

டைகர் கா ஹுக்கும் ..

72 வருடங்கள், எட்டு மாதங்கள், 10 நாட்கள் – இந்தப் படம் வெளியாகும் தினம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வயது. முக்கால்வாசி மனிதர்களுக்கு, அந்த வயதில் கழிப்பறை செல்வதற்கே துணை வேண்டும். இவரால் மட்டும், இன்னும் அந்த லட்சக்கணக்கான ரசிகர்களை வசீகரிக்க முடிகிறது என்பதை நினைத்தால் ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. 1978இல் வெளிவந்த ‘பைரவி’ கதாநாயகனாக அவரின் முதல் படம். அதைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்துப் பெற்று, கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் என்று வைத்துக் கொள்ளலாம். […]

Continue Reading »

நிறம் தீட்டுக

நிறம் தீட்டுக

Continue Reading »

மரணிக்கும் மனிதம்

மரணிக்கும் மனிதம்

ஜூன் 8, 1972ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ‘கிம் பக்’ எனும் வியட்நாமிய சிறுமியின், போர் பதட்டத்தால், ஆடைகளின்றி தெருவில் ஓடும் புகைப்படம் ஒன்று வியட்நாம் போரை நிறுத்தக் காரணமாகயிருந்தது என்பது வரலாறு. அதே போல் இன்று, பெண்கள் இருவர், ஆடைகள் களையப்பட்டு, காமச் சீண்டல்களுடன் தெருவில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்படும் காணொளி, சமூக ஊடகங்களில் பரவி, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், பெண்களின் நிலைமைக்கு அத்தாட்சியாகப் பதியப்பட்டுள்ளது. மிக வேகமாகப் பரவிய இந்தக் காணொளி உலக […]

Continue Reading »

மணிப்பூர்

மணிப்பூர்

மணிப்பூர் – இந்தியாவின் எட்டு வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று. இந்தாண்டு மே மாதம் துவக்கம் முதல் இங்கு மேத்தயி எனப்படும் மேத்தி மற்றும் குக்கி/நாகா இனப்பிரிவினருக்கிடையே பல காலமாகவே இருந்து வந்த பூசல்கள் வலுபெற்று போராட்டமாக மாறத் துவங்கியது. பிரிட்டிஷ்காரர்கள் வருவதற்கு முன்பிருதே இப்பகுதியில் இனக்கலவரங்கள் பரவியிருந்தது. கிபி 33 ஆம் ஆண்டிலிருந்தே மணிப்பூர் வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன. அச்சமயத்தில் மேத்தி இனக்குழுவினர், பகாங்பா எனும் மன்னரின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்ததாகச் சொல்லப்படுகிறது. சனாமயிசம் (Sanamahism) எனும் […]

Continue Reading »

மனம் நாடும் மனித போக்குகள்

மனம் நாடும் மனித போக்குகள்

  முன்னேற்றம் என்பது செய்பவை யாவற்றையும் துரிதமாக செய்தல்; இதற்கு இலத்திரனியல் Digital தொழில் நுட்பங்களை உபயோகித்தல் என்பது சாதாரணமாகி விட்டது. இவ்வகை நுட்பம் தெரியாவிட்டால், நாம் பின்தங்கி விட்டதாகவும் ஒரு சிந்தனை எம்மிடையே காணப்படுகிறது. நாம் மனிதர்; எமது சுபாவம், குணாதிசயம் இரண்டும் இணைந்து சமூகவியல் வாழ்வை அமைத்துக் கொள்வதே எங்கள் நோக்கம். அண்மைக்காலத்தில் எதையும் திறமையாக, துரிதமாக, இலத்திரனியல் மென்பொருளூடு செய்து முடித்து விடவேண்டும் என்ற உந்தல் இருந்து கொண்டே இருக்கிறது, இருந்தாலும் மனம் […]

Continue Reading »

பணிவாய்ப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு

பணிவாய்ப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு

கல்லூரிப் படிப்பை முடித்து, பெருங் கனவுகளுடன் வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்தில் காலெடுத்து வைக்கும் இளைஞர்களுக்கு, செயற்கை நுண்ணறிவு உதவப்போகிறது.  டோக்கியோ, யப்பானை தளமாகக் கொண்ட ஃபோரம் இன்ஜினியரிங் கிரேடுகள் மற்றும் பலவற்றின் அடிப்படையில் பொருந்தக்கூடிய தன்மையை அளவிடுகிறது சென்ற நான்கு ஆண்டுகளில் நாடு முழுவதும் 1.2 மில்லியன் பயனாளிகளைப் பெறுவதை இலக்காகக் கொண்டு, யப்பானைச் சேர்ந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களை வேலை வாய்ப்புகளுடன் பொருத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது.  ஃபோரம் இன்ஜினியரிங் நிறுவனத்தின் புதிய […]

Continue Reading »

நாசாவின் புவி அறிவியல் தரவுகளை ஆய்வு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட மினசோட்டா மாணவர்

நாசாவின் புவி அறிவியல் தரவுகளை ஆய்வு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட மினசோட்டா மாணவர்

மினசோட்டாவைச் சார்ந்த மாணவரான ஜெர்விஸ் ரூவின் பெஞ்சமின், தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்-நாசா (NASA) தொகுத்தளிக்கும் புவி அறிவியல் தரவுகளை ஆய்வு செய்யும் கோடைக்கால பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது, நாசா, டெக்சாஸ் பல்கலைக்கழகத்துடன் (ஆஸ்டின்) இணைந்து நடத்தும் ‘புவி மற்றும் விண்ணியல் துறையில் மாணவர் மேம்பாடு’ (Student Enhancement in Earth and Space Science (SEES)) நடத்தும் விசேடப் பயிற்சியாகும். இப்பயிற்சியில், செயற்கைகோள் / சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து  நாசா பெறும்  தரவுகளை, மாணவர்கள் […]

Continue Reading »

‘ஃபெட்னா 2023’ – தமிழர் திருவிழா

‘ஃபெட்னா 2023’ – தமிழர் திருவிழா

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து நடாத்திய பேரவையின் 36 வது தமிழ்ப் பெருவிழா, சாக்ரமெண்டோ, கலிபோர்னியாவில் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை 2 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து பல எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பங்கெடுத்திருந்தனர். 2017 ஆம் ஆண்டுக்கான விழா, நான் வசிக்கும் மின்னசோட்டா மாகாணத்தில் இருக்கும் மினியாபோலிசு செயின்ட்பால் இரட்டை நகரில், […]

Continue Reading »

தமிழ் புத்தாண்டு விழா 2023

தமிழ் புத்தாண்டு விழா 2023

தமிழ் புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக மினசோட்டா மாநிலத்தில் உள்ள மேப்பில் குரு நகரில் அமைந்துள்ள இந்து கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்ற மாதம்  ஏப்ரல் 16ஆம் தேதி இந்த தமிழ்  புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு வழிபாடுகளுடன் ஆரம்பித்து பின்பு பக்தர்கள் அனைவரும் கந்த   சஷ்டியுடன் ஆரம்பித்து பின்பு இறைவன் பாடல்களை பாடி  பின்பு இறைவனுக்கு அலங்காரம் செய்து  பூஜை செய்து சிறப்பாக வழிபட்டனர். பூஜை முடிந்தவுடன் அனைவருக்கும் தமிழ் பண்பாடான  வாழையிலை […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad