Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மாந்தை தமிழ்க் குடியேற்றம் – பகுதி 2

ஈழநாட்டின் வடமேற்குப்பகுதியில் மாந்தையில் காணப்படும் பழைய தமிழ்க்குடியேற்றமானது, அவ்விடம் வாழ்க்கையைத் தொடர பல்வேறு உவர் நில இயற்கை அம்சங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலை கொண்டிருந்ததைக் காணலாம்.

குடியேற்ற அமைப்பு

இவ்விடத்தில் காணப்படும் மிகவும் பாரிய குடியேற்றமானது கி.பி. 5 ம் ஆண்டில் சுமார் 6000 நிரந்தர வாசிகளை கொண்டிருந்திருக்கலாமென அகழ்வாராய்ச்சிச் சான்றுகள் மூலம் நம்பப்படுகிறது. மாந்தைக் குடியேற்ற நிலப்பரப்புகளில் 30 ஹெக்ரயர்  சுற்றளவில், 12 மீட்டர் ஆழம் வரை மனித நடமாட்ட சுவடுகளைக் காணக்கூடியதாக உள்ளது. மேலும் குடியேற்றம் காணப்பட்ட மணற்றிடல், கடலில் இருந்து 8 மீட்டர் உயர்விலுமே காணப்படுகிறது.

mantai2-rivermap_620x637இந்தக் குடியேற்றத்தின் நீண்ட பகுதிகள் வடக்குத்-தெற்காக அமைந்திருந்த்து. இந்தக் குடியேற்ற நிலப்பரப்பின் வெளியே தாழ்வான பரிமாணத்தில் வெகுவாகப் பகுத்து தரப்பட்ட மண் அமைப்புக்களையும் அவதானிக்கலாம்.

குடியேற்றத்தின் வாசல்

அகழ்வாராய்ச்சி ஆதாரங்களின் படி இந்தக் குடியேற்றத்தின் பிரதான வாசல் வடக்குமுனையில் காணபட்டதாக நம்பப்படுகிறது. வடமுனை வாசலுக்கான ஆதாரங்கள் பல உள்ளன. அவற்றில் சில கீழே

1 – இந்தக் குடியேற்றத்தின் பெருநீர் அகழிகள் இணையும் பகுதி வடமுனையில் காணப்படுகிறது. பெரிய அகழிகள் பற்றி பாகம் ஒன்றில் விவரிக்கப் பட்டுள்ளது.

2 – இரண்டு அகழிகளிற்கும் அப்புறமாக வெளியே செயற்கை ஆழமான உப்புநீர் வாய்க்காலானது, நீர்ப் பரப்பின் மூலம் பண்டங்களைக் கடல் வரை கொண்டு சென்று வர உதவியாக இருந்துள்ளன எனலாம்.

இவ்வாய்க்கால் வழியே, மாந்தைக் குடியேற்றத்திற்கு 300 மீட்டரிற்கு அப்பால் மன்னார் கடலில் தரித்திருக்கும் பெரும் கடல் கப்பல்கள் உள்ளே வர  முடியாதெனினும், சிறு தோணிகள் கட்டுமரங்கள் மூலம் பொருட்கள், ஆட்கள் பரிமாற்றங்களிற்கு உதவியிருக்கலாம்.

மாந்தை கடல்வணிகக் கட்டங்கள்

குடியேற்றத்தைச் சுற்றியுள்ள அகழிகளை சுற்றி அவதானிக்கையில் வடமுனை வாசலின் கடல் நோக்கிய நீர் மூலம் அன்றாட நடைபாடுகள் தெளிவுக்கு வருகின்றன. இவ்விடத்தில் கடல் வணிகத்திற்கு உதவுமுகமான நிரந்தர போக்குவரத்து உவர் நீர் வாய்க்கால் மடைகள், பண்டங்கள் ஏற்றியிறக்கும் மேடைகள் Jetties போன்றவை வடமுனையில் அமைக்கப்பட்டிருந்தன.

இந்தக் கற்களால் ஆன திடமான மேடைகள் ஆழமான போக்குவரத்து உவர் நீர் வாய்க்காலின் பக்கத்தில் இருப்பதும், மேடைகளின் மெதுவான நீர்ப்பரப்பை ஒற்றிய சாய்வுக் கட்டிட அமைப்பும் எவ்வாறு பண்டய தமிழ் தொழிநுட்பவியலாளர் துறைமுக அமைப்புக்களைப் பற்றிச் சிந்தித்தார்கள் என்பது தெளிவுக்கு வருகிறது.

குடியேற்றத்தின் வாசலின் அத்திவாரத்தில் இருந்து சாய்வான மேடை நீர்வாய்க்கால் வரை அமைக்கப்பட்டுள்ளது இரு விதத்தில் நன்மையானது. ஒன்று படகுகளில் இருந்து இலகுவாக ஏற்றி இறக்குதல். இரண்டு போக்கு வரத்து நீர்வாய்க்காலின் இரு பகுதியிலும், கடல் கொந்தளிப்புக் காலங்களிலும் குடியேற்றத்தின் உள் கடல்நீர் வராது தடுப்பதுவும் ஆகும்.

மேலும் பெரும் பாரம் ஏற்றிவரும் படகுகள் அத்திவாரத்துடன் மோதாமல் இருக்க மரத்திலான மோதுதளபாடங்களும் Brickbatts மேடைகளில் பொருத்தப்பட்டிருந்தன.

மாந்தை வாசிகள் தொழிற்பாடுகள்

mantai2-deerheard_425x282குடியேற்ற மக்கள் தம் வாழ்வை இவ்விடம் நிலைத்திருக்கப் பல்வேறு தொழில்களையும் செய்துள்ளனர் என்பது திண்ணம். குடியேற்றமானது பிரதானமாக தமக்குத் தேவையான கடல் சார்பற்ற உணவுப் பொருட்களை பக்கத்தில் விவசாயம் செய்து பெறமுடியவில்லை. காரணம் மண்ணானது பெரும்பாலும் உவர்ப்புக் களிமண்ணாக காணப்பட்டது. எனவே உணவுப் பொருட்கள் உள்நாட்டில் இருந்து அருவியாற்றின் மூலம் இவ்விடம் கொண்டு வரப்பட்டது.

வணிகம் ஏற்றி இறக்குவோர், மாலுமிகள், மீனவர், ஆழ்கடல் முத்துக்குளிப்போர் போன்றவரை விட வர்த்தகர்களும், முத்து, பவள அணிகலங்கள் ஆக்கும் கைநுட்பவியல் கலைஞர்களும் இங்கு வாழ்ந்த விபரம் தெரிய வருகிறது.

அகழ்வாராய்ச்சி சான்றுகளில் முத்து, பவளக் காப்புக்களும் அவற்றை ஆக்கும் மான் கொம்பிலான உளி போன்ற கருவிகளும் கண்டெடுக்கப் பட்டுள்ளது. மாந்தை நிலப்பரப்புக் குறிஞ்சி நிலம் ஈச்சமரத்தையும், பாலை, கத்தாழை மரங்களையும் கொண்ட இடம். இவ்விடம் மான் கூட்டங்கள் சுயாதீனமாக நடமாடும். எனவே மான் கொம்புகள் பெறுவது இலகுவானது. மான் கொம்பு முனைகள் சங்கைச் செதுக்கிப் பவளக்காப்பு, தோடு செய்ய உதவும். மேலும் மன்னார், புத்தளம், செங்களுநீர்ச் சிலாபக் கடல்கள் முத்தும், வலம்புரிச் சங்கும் காணப்படும்  இடங்கள். இவ்வகை மூலப்பொருட்கள் காணப்படுவதால் முத்துப், பவள நகை ஆபரணங்கள் இவ்விடம் ஒருகாலத்தில் பெரிதாகத் தயாரிக்கப்பட்டன என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.

mantai-jewellerymaking_620x479இப்பேர்ப்பட்ட பவள ஆபரணத் தொழிற்சாலைகள், தொழிநுட்பவியல் சமூகங்கள் குறிஞ்சி நிலக் கிராமங்களில் வாழ்ந்தமைக்கு ஆதாரமாக விளங்குகின்றன, இது போன்ற கிராமக் குடியேற்ற அமைப்புக்கள் ஈழத்திலும், தமிழகத்திலும் கி.மு.1400 ஆண்டுகளுக்கு முன்னரும் காணப்பட்டன என்று இவ்விடம் கூறுவதும் மிகையாகாது.

உசாத்துணை நூல்கள் சில

 

Vasant Shinde (1997) Mantai: An Important Settlement In North-West Sri Lanka

Vimala Begley (1988) Rouletted Ware at Arikamedu: A New Approach

Vimala Begley (1983) Archaeological Exploration in Northern Ceylon

Sanmuganathan, S (1950) Excavation at Tirukketisvaram

– யோகி அருமைநாயகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad