banner ad
Top Ad
banner ad

பாரீஸ் நாட்ரடாம் புராதன தேவாலயம் (Paris Notre Dame Cathedral)

ஏப்ரல் 15ம், திகதி 2019, ஃபிரஞ்சு மக்கள் சரித்திர அத்தியாயத்தில் இருண்ட பக்கம்.

கலாச்சார துக்க தினத்தில் ஒன்று  என்று கூறலாம். ஐரோப்பிய கலாச்சாரத்தின் எழில் சின்னங்களில் ஒன்றான நாட்ரடாம்  புராதன தேவாலயம் அதன் சீரமைப்பு வேலைகளின் போது தீக்கிரையானது. ஃபிரஞ்சு மக்கள் சனநாயகத்தை வெகுவாகக் கடைப்பிடிக்கும் மக்கள். சகல சிந்தனைகளையும், கலைஞர்களையும், புத்தி ஜீவிகளையும் வரவேற்கும் அதே சமயம் ஃபிரஞ்சு மக்கள் ஆன்மீக சிந்தனை கத்தோலிக்கமாகவும் ஆயிரம் ஆண்டுகளிற்கும் மேலாகவும் உள்ளதை நாம் அவதானிக்கலாம்.

நாட்ரடாம் தேவாலயம் ஐரோப்பிய பாரிய முக்கிய பிரமாண்டமான கட்டங்களில் ஒன்று. இது பிரதானமாகக் கத்தோலிக்க மக்கள் வழிபாட்டிடம் ஆயினும், ஃபிரான்ஸ் நாட்டு பாரிஸ் நகரில் உலகளாவிய விருந்தாளிகள்,  சுற்றுலா வருபவர்கள் ஆகியோர் தேடி வரும் பிரபலமான இடமாகும். புராதனம், பழமை, வேறுபடும் ஐதீகங்களின் புரட்சி இவை யாவற்றிற்கும் ஃபிரஞ்சு மக்கள் முக்கியத்துவம் கொடுத்து அதே சமயம் தமது கலாச்சாரத்தையும் பேணுவதில் வல்லவர்கள்.

இதனால் தான் புராதனக் கட்டிடங்களிற்கு ஃபிரஞ்க மக்கள் முதலிடம் இன்றும் தருவர்.  இந்தத் தேவாலயமானது அழகிய சீன் ஆற்றின் (Seine River) கரையில் பூங்கா, மைதானம் அருகே அமைந்துள்ளது. 1163ம் ஆண்டில் பாப்பரசர் மூன்றாவது அலெக்ஸாண்டர் அத்திவாரக் கல்லை இட்டு இந்தத் தேவாலயக் கட்டுதலை ஆரம்பித்து வைத்தார்.

இந்தத் தேவாலயம் கட்டுதல் பத்தாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டு ஏறத்தாழ 167 ஆண்டுகளில். பல அரசர்கள், ஆளுநர்கள் உதவியுடன். கட்டி முடிக்கப்பட்டது. தேவாலயத்தின் ஆரம்பத்தில் மரக்கட்டிடமாக 1345 ஆம் நிலை கொண்டது. இது ஏறத்தாழ 650 ஆண்டுகளிற்கும் முந்தையது.

தேவாலயம் தொடர்ந்து ஃபிரஞ்சு மக்களால் காலாகாலத்தில் சீரமைக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டிடத்தை, ஐரோப்பியக் கட்டிடக் கலையை அடிப்படையாகக் கொண்டு,மரம் கிளை, விழுதுகள் போன்ற இயற்கை அம்சங்களை ஆதாரமாக வைத்து ஐரோப்பிய சிற்பிகள் பல நூறு வருடங்களாக உருவாக்கினர். மேலும் இந்தத் தேவாலய இசைக்கருவியான ஓகன், ஐந்து தட்டுப் பலகைகளையும், ஏறத்தாழ 8000 குழாய்களையும் கொண்டு இசை மீட்டியது. இலவச இசை நிகழ்ச்சிகள் ஒவ்வொரு சனிக் கிழமைகளிலும் நடைபெற்று வந்தது.

நாட்ரடாம் தேவாலயம அதன் முன்னணியில் பிரதானமாகச் சில அமைப்புக்களைக் கொண்டிருந்தது. இரண்டு கோபுரங்கள் கொண்ட இந்தக் கட்டிடத்தில், வடக்குக் கோபுரம் பிரபல்யமான தேவாலய மணிகளைக் கொண்டது. இந்த மணிகள் Hunchback of Notredame கதையில் வரும் குவாசிமோடோ (Quasimodo) எனும் கூனலானவன் ஒலித்தான் என்கிறது இதிகாசம்.

அடுத்து கட்டத்தின் நடுவில் உள்ளது விரிந்த பெரும் பூப் போன்ற யன்னல்கள். இந்தப் பகுதி 700 ஆண்டுகளிற்கு முன் சிற்பிகள் கட்டினார்கள் என்று கருதப்படுகிறது. இதன் பரிமாணம் 29 ½ அடி அல்லது 9 மீட்டர்கள் ஆகும்..

அடுத்து வருவது அரசர்கள் வரிசை, எனப்படும் இஸ் தி ரலிய, யூத முடிசூடியோர் சிலைகள். அதன் கீழே கிறிஸ்தவத்தின் தியாகிகள் சிற்பங்கள் கூடிய பாரிய மூன்று பெரும் கதவு வாயில்கள் .

பெரியோரும், சிறியோரும்  சமய பக்தி உள்ளவரும், இல்லாதவரும்  மாலை நேரங்களிலும், வார இறுதிகளிலும், பல நூறு ஆண்டுகளாகக் கூடும்  வழிபாட்டுத் தலம் இந்த இடம் . இந்த விபத்து நிச்சயமாக ஃபிரஞ்சு மக்கள், அவ்விடம் பிரவேசம் செய்யும் ஜரோப்பிய மக்கள் மற்றும் அனைவரின்  இதயத்தையும் புண்ணாக்கும் விடயம். ஃபிரஞ்சு மக்கள் கலாச்சாரத்தின் காவலர்கள், புதிய தொழிநுட்பம் கொண்டு எரிந்த நாட்ர-டாம் தேவாலயத்தை மீண்டும் கட்டியெழப்புவார்கள் என்பதில் ஐயம் இல்லை. இந்தக் கலாச்சாரச் சிதைவில் இருந்து துரிதமாக மீள எமது நல்லெண்ணங்கள் மற்றும் பிரார்த்தனைகள் இவ்விடம் அவர்களுக்கு உரித்தாகட்டும்.

குறிப்பு – யோகி

Tags: , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad