2026 ஆங்கில புத்தாண்டு விழா
ஆங்கில புத்தாண்டு என்றாலே அனைவருக்கும் சிறப்பு மகிழ்ச்சி. ஆண்டின் கடைசி நாள் முதல். ஆண்டின் முதல் நாள் வரை பல விதமான கொண்டாட்டங்கள். சிறப்பு வழிபாடுகள் அனைத்து விதமான கொண்டாட்டங்களும் நடைபெறும். மக்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கு உள்ள சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் புத்தாண்டு கொண்டாட்டங்களும் நடைபெறும்.
வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் உள்ள இந்து கோயிலில் இந்த வருட புத்தாண்டு விழா நடைபெற்றது. இங்கு உள்ள கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக வழிபாடுகள் செய்து பக்தர்களுக்கும் சிறப்பு பூஜையை கண்டு மகிழ்ந்தனர். அதற்காக கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்திருந்த அனைவரும் கண்டு மகிழ்ந்தனர்.
இங்கு உள்ள நிர்வாக குழு ஒவ்வொரு வருடமும் மாற்றப்படுகின்றன அதற்கான தேர்வுகள் நடைபெற்று புதிய உறுப்பினர்களை தேர்வு செய்து வைத்திருந்தனர். ஆங்கில புத்தாண்டு அன்று அனைவரும் பதவியேற்று பழைய நிர்வாக உறுப்பினர்களுக்கு நன்றியும், வழி அனுப்பும் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
கோவிலில் சிறப்பு மதிய உணவு அளிக்கப்பட்டது வந்திருந்த அனைவரும் உணவை உண்டு மகிழ்ந்தனர்.
அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படம் உங்களுக்காக.







