\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கேம்பிரிஜ் அனலிடிக்கா சொடுக்குதல் மூலம் சூசக வாக்குகள்

அமெரிக்காவில் 87 மில்லியன் பிரசைகளின் முகநூல் (Facebook) தனிப்பட்ட தகவல்கள் சூறையாடப்பட்டு தகாதவகையில் 2016 தேர்தலில் உபயோகிக்கப்பட்டமை கவலைக்குரிய விடயம்.

மின் இணைய சொடுக்கலிலிருந்து சுயேட்சை வாக்குகளுக்கு வரம்பு கட்டி, தேர்தலில் சாதகமான வேட்பாளர் பெட்டிகளை நிரப்புவது சாத்தியம் என்ற நிலைமையை அமெரிக்கா எதிர்கொண்டுள்ளது.

இந்தச் சூசக நடவடிக்கை சுதந்திர நாட்டின் சுயேட்சை மக்கள் எனும் சிந்தனைக்கு முரணானது. எனினும் இன்று மக்களின் முகநூல் (Facebook), டுவீட்டர் (Twitter) போன்ற சமூக வலயங்களை. முன்னர் இருந்த  பொதுசன ஊடகங்களாகிய பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது, அவை பின் தங்கி விட்டன எனலாம். சமூக வலயங்கள் ஒவ்வாரு நுகர்வோருக்கும் தனித்துவமான தகவல்களைத் தரவல்லவை. எனவே இந்தத் தசாப்தத்தில் சமூக வலயங்கள், அவற்றை உபயோகிப்போர் பற்றிய பல தகவல்களை பொதுசன ஊடகங்கிளிலும் பார்க்க வெகுவாகத் திரட்ட வல்லவை.

கேம்பிரிஜ் அனலிடிக்கா நிறுவனம் முகநூல் பயனர் தகவல்களைச் சேகரித்து பிரமாண்டமான வகையில் அவர்களுக்கு  எதிராகப் பாவித்தது ஒரு பிரதான செய்தியேயாகும்.

 

நாம் இது தொட்டு எழும் இரு வினாக்களைச் சற்று ஆழ்ந்து பார்ப்போம்.

  • முகநூல் மக்கள் தகவல் சேகரிப்பதற்கு என்ன யுக்திகள் கைய்யாளப்பட்டன?
  • சேகரிக்கப்ட்ட தகவல்கள் எம்மைப் பற்றி என்ன தான் சொல்லுகின்றன?

இலவசம், இலகு உபயோகம், இச்சமறியா இணைய திருப்தி

87 மில்லியன் மக்கள் . தமது தகவல்களைச் சமூகவலை மூலம், சுலபமாக தெரியாதவர்களிடம் கொடுக்கப் போவது இல்லை – எனவே இதைப் பெறுவதற்கு சூசக வியாபாரத் தந்திரங்கள் தேவை. மென்பொருள் உபயோக செளகரியம், உடன் அனுபவிப்புத் திருப்தி, இலவசம் என்ற போர்வையில் பல நுகர்வோர் அந்தரங்க, அடையாள உரிமைகள் அபகரிக்கப்படுகின்றன.

 

கணனி விஞ்ஞானத்தின் மறுபக்கம்

தொழில்நுட்பத் தகவல்களை நன்மை, தீமை என  பல வகையிலும் பாவிக்கலாம் என்பது நாம் ஏற்கனவே அறிந்த விடயமே. அதே சமயம் “ஆழம் அறிந்து கால் விடு” என்பதும் ஒரு தமிழ் மரபு.

நுகர்வோர் நடவடிக்கைகளை அவதானிக்க கணனித் தரவு தகவல் விஞ்ஞானம் (Data Science) எனப் பொதுவாகக் கூறப்படும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கணனி பொறியியல் கிரகிப்பு (machine learning) எனும் ரக தரவு தகவல் ஆய்வு குறிப்பாக உபயோகமாகிறது.

 

பொறியியல் கிரகிப்பு

இது பலதரப்பட்ட கணனியல், புள்ளி விபரவியல், கணிப்பு முறைகள் கூடிய ஒரு ஆழ் கணனி விஞ்ஞானப்பகுதி. இந்த ஆய்வு கணிப்பு முறைகளுக்கு மின் செய் பொருளிற்கு தெரிந்த கணிப்புக்களை – ” பயிற்சித் திரட்டல் தனைக் கொடுத்து அதை வைத்து ஏற்கனவே கணனி எதிர்கொள்ளாத தரவு தகவல்களில் இருந்து புதிய உபயோகமான தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் ஒரு யுக்தியாகும்.

 

நுகர்வோர் குணாதிசய தகவல் திரட்டல்

எனவே இந்த ஆய்வு கணனி படிமுறை செயற்பாடுகள் (Algorithms) அடிப்படையில் அமைக்கப்பட்டது. எந்த நவீன தரவு தகவல் கணனி விஞ்ஞானத்தை உபயோகிப்பினும் பெரும்பாலும் முதலில் அடிப்படை உதாரண தகவல் சேகரித்தல் முக்கியம்.

முகநூல் உபயோகிப்போர் விருப்பு, வெறுப்புக்களை வைத்து அடுத்து அவர்கள் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் (predictive analytics) என்று குறிப்புச் சொல்ல, அனுமானிக்க மேலும் நுகர்வோர் பற்றிய தகவல் துணுக்குகள் தேவை. இதற்கு பாரிய முகநூல் குழுமியங்களில் உள்ளவர்களில் எப்பேர்பட்ட நபர்கள், அவர் குணாதிசயங்களை ஆராயலாம் என்பதை சூசக கேம்பிரிஜ் அனேலெடிக்கா தாபனம் நிர்ணயிக்க முயன்று வெகுவாக வெற்றி பெற்றது.

 

புலனாய்வு 120 வினா விடைகள்

தமது கட்சித் தலைவற்கு சாதகமான தேர்தல் வாக்காளராகத் தகுந்த முகநூல் உபயோகிப்பாளரை மாற்ற முதலில் ஒருவர் மனப்பாங்கு, அவர் வாழ்க்கைச் சூழல் போன்றவற்றை வெளிக்கொண்டு வரும் 120 வினாக்கள் பக்குவமாகத் தெரிவுச் செய்யப்பட்டன. இதை இங்கிலாந்து கேம்பிரிஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் அமைத்து தந்துள்ளார்.

இது சில நூறாயிரம் கைத்தொலைபேசி நுகர்வோரிடம் அவர்கள் உடன்பாட்டுடன் மென்பொருள் மூலம் சேகரிக்கப்ட்டது. இந்த முதல் வட்டப் பயிற்சித் திரட்டல் (training set) என அழைக்கப்படும்.

 

பயிற்சித் திரட்டல்

இந்தப் பயிற்சித் திரட்டல் முகநூல் உபயோகிப்போர் விருப்பு வெறுப்புக்கள், மனோத்துவ உள ஆய்வு கேள்வி பதில்கள், மற்றும் இதர மக்கள் சுபாவங்கள் போன்றவற்றைச் சேர்ந்ததாக அமைந்தது. இந்தக் குணாதிசயம் பற்றிய தரவு தகவல்கள் (psychometric profiles) அடுத்த கட்ட ஆய்விற்குப் பாவிக்கப்பட்டது. இதர தவல்களிற்கு ஒரு உதாரணம் – குறிப்பிட்ட சில கால மின் இணைய நுகர்வோர் மின் வலய ஒட்டுமொத்த உபயோகங்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு உபயோகம் ஆகுதல் .

இந்தத் திரட்டுத் தகவல்கள் சூசக கேம்பிரஜ் அனலெடிக்காவின் விஞ்ஞானிகள் மக்கள் மனோத்துவ பலம் ,பலவீனம், கல்வியளவு, பகுத்து அறிந்து கொள்ளும் ஆற்றல், அதைப் பற்றிக் கேள்விகள் கேட்டால் அதை எப்படி ஒரு நபர் எதிர்க்கலாம் போன்ற பல உட்பொருட்களையும் கொண்டு அமைந்திருந்தது. இப்பேர்பட்ட பட்ட தகவல் மக்கள் மின் இணையத்தில் தொடர்பு கொள்ளாக் காலத்தில் பெற்றுக் கொள்வது கடினம். ஆயினும் 2015 இல் கைத்தொலைபேசி கவர்ச்சியான இலகு தகவல் திரட்டல் கருவி ஆகியது. எனவே கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் சார்ப்பில் சமூகவியல் ஆய்வு எனும் போர்வையில் முகநூல் உபயோகிக்கும் பொது மக்களிடம் 120 கேள்விக்கணைகள் தொடுத்து தகவல் திரட்டினர்.

 

சமர்த்தான பதிலுக்கு சிறிய சன்மானம்

இப்பேர்பட்ட ஆய்வுகளைப் பல்கலைக்கழகங்கள் செய்வது இயல்பானது. இந்தக் கேள்விகளுக்குப் பதில் தந்த ஒவ்வொரு நபர்க்கும் தலா $2- $4 பணம் கொடுக்கப்பட்டது. இது துரித கைத்தொலைபேசி மென்பொருளாகையால் இந்தப் பணக் கொடுக்கல் வாங்கல்கள் சிறிதாகவே இருந்தன. முகநூல் குழுக்களில் சிற்சில வகையினர் தகவல் திரட்டிக் கொள்ள சற்றுக் கடினமானவர்கள். உதாரணமாக இலகுவாக மின் இணைய வழியாகக் கேட்டுக் கொள்வதில் ஆப்பிரிக்க அமெரிக்க ஆண்களின் தகவல்கள்  சற்று அதிக விலை கொடுத்துப் பெறப்பட்டதாம். இதே சமயம் வசதியுள்ள வெள்ளையினப் பெண்கள் அவர் விருப்பு வெறுப்புக் கள், அவர்களுக்கு அலுப்புத் தட்டும் விடயங்கள், போன்ற தகவல்களும் சேகரிக்கப்பட்டனவாம்.

 

மனோத்துவ அடிமட்டம்

இந்த மனோதத்துவம் அறிந்து கொள்ளும் 120 கேள்விகள் பிரதானமாக 5 தலையாய வகைகளைக் கொண்டிருந்தன. இந்த 5 வகைகளையும் ‘சமுத்திரம்“ என்ற குறியீட்டுடன் பிரதான தகவல் பிரிவுகளாக கேம்பிரிஜ் அனேலெடிக்கா உபயோகித்தது.

சமுத்திரம் தகவல் பிரிவுகள்

  1. புதுப்புது அனுபவங்களை விரும்பும் தன்மை
  2. தன்மானம், சுய நிர்ணயம் மதிக்கும் தன்மை
  3. இலகுவாகச் சமூகத்தில் பழகும் தன்மை
  4. மற்றவர்களுடன் ஒத்துப் போகும் தன்மை
  5. இலேசாகக் குழம்பிக் கொள்ளல் / மனப் பலயீனத் தன்மை

இந்தத் தனித்துவமான குணாதிசயங்கள் கலாச்சாரங்களுக்கும் அப்பால் எவ்வாறு ஒருவரை ஊக்குவிக்கலாம், செயல்பாட்டுக் கட்டளைகள் தர உதவும் என்பதை ஆராய்ந்தனர். இதற்கு சில உதாரணங்கள் உரத்துப் பேசுபவர்கள் தாம் சுலபமாக யாவருடனும் பழகுவதாகச்  சொல்லிக்கொள்வர். இவர்கள் இவ்வாறு தம்மை எடுத்துச் சொல்பவர்கள் அடுத்த வருடமும் இது போன்று ஆமோதித்துக் கொள்வார்கள் என்கிறது ஆய்வு.

 

வாக்காளர் கையாளுதல்

அதே சமயம் மேலே குறிப்பிடப்பட்ட குணாதிசியங்கள் அறிந்து கொள்ள உதவும் கேள்விகளை ஆமோதிக்காதவர், தமது சுய நிலையைப் புரிந்து கொண்டவர்கள். இதனால் இவர்கள் உணர்ச்சி வசப்பட வைத்து அதன் காரணமாக அவர்கள் மூலம் சாதகமான விளைவுகளை உண்டு பண்ண வைப்பது சுலபம் அல்ல அறிந்து கொள்ளப்பட்டது.

இதே மாதிரியான பல மனோவியல் கேள்விகள் மூலம் மக்களின் மனப்பாங்கு ஆழ்ந்து ஆராயப்பட்டது. இந்த முடிவுகள் மூலம் பெறப்பட்ட பயிற்சித் திரட்டல் தரவுகள் அடுத்து முகநூல் மூலம் சேகரிக்கப்பட்ட பல்லாயிரம் நுகர்வோர்கள் அவர்கள், சமூக வலைச் சக வாடிகள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டது.

 

பல்கலைக்கழக ஆய்வு என்ற சூசகம்

இந்த ஆய்வுகள் போதிய சதகமான விளைவுகளைப் பெற தொடர்ந்து கேம்பிரிஜ் பல்கலைக்கழக ஆய்வாளர், மனோத்துவ கைத்தொலைபேசி மென்பொருள் பாவிக்கப்பட்டது. இது பல்கலைக்கழகத்தில் வந்தமையால் வஞ்சகம் அறியாமல் பங்கு பெற்றோர் சிறிதளவு வெகுமதி பெற்று தமது அந்தரங்கச் சிந்தனைகளைத் தந்தனர். எனினும் இதில் பங்கு பெற்றவர்களின்  தொடர்புகள் யாவும் முகநூலிலிருந்து சேகரிக்கப்பட்டு அவர்களும் ஆய்வுகளிற்கு மறைமுகமாக உள்ளாக்கப்படுவர் என்பது மறைக்கப்பட்டது. 

கேம்பிரிஜ் பல்கலைப் பேராசிரியர் அலெக்சாண்டர் கோகன் தன்னைத் தேவையில்லாமல் இந்தக் குற்றச் செயலில் யாவரும் இழுத்து விடுகிறார்கள் என்று கூறினும், அவர் பரிசோதனைகளிற்கும் நிதி உதவி தந்தவர் தற்போதய அமெரிக்க சனாதிபதி ஆதரவாளரும் அமெரிக்கச் செல்வந்தர் றாபேர்ட் மேசரும் அவர் மூலதனம் இட்ட கேம்பிரிஜ் அனலெட்டிக்கா சூசக தாபனமும் ஆகும்.

 

முகநூல் பின் கதவுச் சூறையாடல்

இந்த மென்பொருள் முக நூலின் பின்னணிக் கதவு மூலம் சென்று கேம்பிரிஜ் பல்கலைக்கழக மென்பொருள் உபயோகித்தவர்கள் அறியாமல் அவர்கள் உற்றார், உறவினர், சமூக வலைச்சகபாடிகள் அனைவரதும் அவர்களைத் தனிப்பட்ட வகையில் அடையாளமிடும் தகவல்களைத் திரட்டியுள்ளனர். 87 மில்லியன் முகநூல் உபயோகிப்பாளர்கள் அவர்கள் வாழும் இடம், அயல் வீட்டுக்காரர், பக்கத்து வீட்டுக்காரர் கட்கும், இவர்களுக்கும் உள்ள கருத்து ஒற்றுமை, வேறுபாடுகள் எனப் பல தகவல்களும் சேகரிக்கப்பட்டது.

திரட்டப்பட்ட முகநூல் நுகர்வோர் குழுக்களை வைத்து கேம்பிரிஜ் அனெலிடிக்கா சூசகமாக கணனி தகவல் விஞ்ஞானிகள் (data scientists) 253 வகை பிரிவுக் கணனி செயற்பாட்டு (253 separate algorithms) யுக்தி முறைகளை உருவாக்கிக் கொண்டனர். இந்த ஒவ்வொரு யுக்தி முறையும் தனித்தனி முறைகளில் எவ்வாறு வெவ்வேறு நுகர்வோர் பிரிவுகளை பயன்படுத்தலாம் என்பதைப் பொறுத்து அமைந்தது. குறிப்பாக மனித சுபாவங்கள், அடிப்படைத் தேவைகள் ரீதியில் எவ்வாறு மக்களை அவரவர் மனோ நிலை, வாழ்க்கைச் சூழலை வைத்து தேர்தல் வாக்குப் போட வைக்கலாம் என்பதாயிற்று.

 

தனிப்பட்ட தகவல் பிரச்சாரம்

இதன் விளைவு என்னவென்றால் ஒரே வட்டாரத்தில் 10 அயல் வீட்டுக்காரர் வாழினும் அவர்கள் ஒவ்வொருக்கும் தேர்தல் தொடர்பான வேட்பாளர் தகவல் 10 வித்தியாசமான முறையில் பெற்றுக் கொள்ள வாய்ப்பு தருவிக்கப்பட்டது. இது நிச்சயம் அமெரிக்கத் தேர்தலில் வித்தியாசமான வேட்புக் கேட்கும் செயல். இதுவே கேம்பிரிஜ் அனலெடிக்காவின் இரகசிய வேலைகளில் பிரதானமானது.

 

இரகசிய கையாளல் இருநூற்றி ஐம்பதிமூன்று

எனவே தரவு தகவல் விஞ்ஞானத்தைப் பாவித்து 253 வகைகளில் தகுந்த வாக்காளர் ஒருவர் குணம் அறிந்து அவர் எப்பேர்பட்ட மனச் சபல நிலைில் உள்ளார் எந்தத் தேர்தல் வேட்பாளரை ஆதரிக்கலாம், அந்த நபர் தயங்கினால் எவ்வாறு அவர்கள் சாதகமா 3 மனம் மாற்ற உரிய தகவல்களைத் தனித்துவமாக அவர்களுக்கு அனுப்பிவாக்குப் போட வைக்கலாம் என்ற செயற்பாடுகள் பாரியளவில்  உருவாக்கப்பட்டன.

இந்த யுக்திகள் வழக்கமான யதார்த்தமாக வீடு வீடாகச் சென்று கதவு தட்டி வாக்குக் கேட்பதிலும், சந்தியில் மேடை போட்டு அரசியல் பேச்சுக்கள் தருவதினால் பெற்றுக் கொள்ள முடியாதவை. 2015இல் இருந்து இந்த நவீன சூசகங்கள் மின் இணையம், முகநூல் கைத்தொலைபேசி மூலம் வாழ்வின் உளத்தின் சர்வமானவர்களையும், மற்றவர்களையும் தட்டியெழுப்பும் தகவல் ஆயுதமாகின.

 

தேர்தல் போட்டியில் வெற்றியே முக்கியம்

எனவே கேம்பிரிஜ் அனெலடிக்கா சமூக வலைய நுகர்வோர், வாக்காளர் அடிப்படை நம்பிக்கை மீறி அந்தரங்க தகவல் சூறையாடி, மனோத்துவம் பாவித்து, கணனி தரவு தான் விஞ்ஞானம் உபயோகித்து தமக்குக் காசு தந்த எசமான்கள் சார்பாக வாக்குகளைப் பெற்றுத் தந்துள்ளனர்.

இது அமெரிக்க, சனநாயகத்திற்கு முரணாகப்படலாம், வேட்பாளர் தேர்தலில் பங்கு பெறுவதிலும், வாக்குகளைக் கையாளுவதிலும்

பல கேள்விகள் இருந்தாலும்,  சொடுக்கலிலிருந்து வாக்காக மாற்ற மேலேயுள்ள ஆதாரங்கள் உதவியுள்ளன என்பதை நாம் ஒப்புக் கொண்டேயாக வேண்டும்.

– ஊர்க் குருவி

Tags: , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad