\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

தார் மணலில் இருந்து எரிபொருள்

 

தார் மணலில் இருந்து எரிபொருள்

நாம் வாகனங்களில் உபயோகிக்கும் பெற்றோலியம், கனேடிய தார் மணலில் இருந்து எவ்வாறு வருகிறது என்று பார்க்கலாம். தார் மணலில் இருந்து எரிபொருள் பிரிப்பது நிலத்தடி எண்ணெய் எடுப்பதை விட அதிக செலவுள்ளது. சுற்றுச்சூழலிற்கும் அதிக மாசு படுத்தும் செயலாகும் இது.

தார் மணல் அகழ்வு இரு வகையில் நடைபெறலாம். மேற்தரை மணல் அகழ்வு. இது பாரிய பிரதேசத்தைப் பெரும் குழிகாளாக விட்டுச் செல்லும். இரண்டாவது முறை ஆழ் கிணறுகள் துளைத்து தார் மணல் பெறும் அகழ்வு. இவையிரண்டும் கச்சா எண்ணெய் (crude oil) அகழ்விலிருந்து சற்று வித்தியாசமானது. 

அகழுதலும் பிரித்தலும்

ஏறத்தாழ 255 சதுர மைல் பரப்பு அல்பேர்ட்டா மாகாணம், கனடாவில் மண் ஊசி இலைக் காடுகள் கொண்ட சதுப்பு நிலப்பகுதியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்படுகிறது.

முதலில் மேல் மண்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் மேற்பரப்பு மண் அகற்றப்படும். அதன் பின்னர் பெரிய இயந்திர கிண்டி அகப்பைகள் (big mining shovels) எரிபொருள் நில எண்ணெய் மணலைக் கிண்டி மணலூர்திகளில் (Trucks) ஏற்றும் . இந்த நில எண்ணெய் மணல் கலவை ஒரு ஒட்டு மணல் – நீர் மற்றும் ஒரு வகை நிலக்கரி – (bitபுmen) கொண்டதாகக் காணப்படும்.

மணலூர்திகள் அயலில் உள்ள உற்பத்திச் சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு இந்த எரிபொருள் எண்ணெய் மணலும், வெந்நீரும் சேர்த்து, நன்கு குலுக்கி எடுக்கப்படும். இந்தக் குலுக்குதல் தார் மணலை மணல், நீர், மற்றும் ஒரு வகையான நிலக்கரி (bitumen) என மூன்று பாகங்களாகப் பிரிக்க உதவும். .

இந்தக் கலவையின் மேற்பகுதியில் இருந்து நிலக்கரி வடித்து எடுக்கப்பட்டு, மேலதிக இரசாயனங்கள் கொண்டு பலமிழக்கச் செய்யப்படும் (Dilute). இந்தப் பதத்தில் உள்ள நிலக்கரியே இலகுவாக பல நீண்ட மைல்களுக்கு குழாய் மூலம் செலுத்தப்படும். இதிலிருந்து எரிபொருள் தயாரிப்பது இந்த எண்ணெய்க் குழாய்களின் மறுபக்கத்தில் உள்ள எரிபொருள் உற்பத்திச் சாலைகளின் பங்கு. 

இதன் பக்க விளைவாக வரும் நீர் மீண்டும் பாவிக்கப்படும். எஞ்சிய மணல் மீண்டும், கிண்டப் பட்ட இடத்தில் கொண்டு போய் கொட்டப்படும்.

நீராவி மூலம் பிரித்தல்

தார் மணல் 225 அடிக்குக் கீழ் குடைந்து எடுக்கப்பட்டால், இன்னும் ஒரு முறை கையாளப்படும். இதன் பொழுது இரண்டு ஆழமானக் கிணறுகள் வெட்டப்படும். 

ஒரு கிணறு அதிவெப்ப நீராவியை நேரடியாக மணலூடே பாய்ச்ச உதவும். இதன் மூலம் ஆழமான இடத்தில் நிலக்கரி பிரிந்து ஒழுக உதவும். எனவே மற்ற கிணற்றுக் குழாய்கள் மூலம் நிலக்கரி உறியப்பட்டு மேற்தரைக்குக் கொண்டு வரப்படும். 80% சதவீதமான கனேடிய தார்மணல் இவ்வாறு தான் எடுக்கப்படுகிறது.

நிலக்கரி பதப்படுத்துதல்

குழாய்களால் செலுத்தப்பட்ட சேறு போன்ற நிலக்கரி, விஸ்கொன்சின் மாநில, சுப்பிரியர் எரிபொருள் உற்பத்திச் சாலையில் பிரித்தெடுக்கப்பட்டு சாதாரண வாகனங்களில் உபயோகிக்கக் கூடிய செயற்கை நிலக்கரி/ கச்சா எண்ணெய் (synthetic crude oil) தரப்படும். சராசரியாக இரண்டு டன் (Ton) தார் மணல் ஒரு பீப்பா (Barrel) நிலக்கரி எண்ணெயைத் தரும்.

தார் மணல் தலையிடி

பதப்படுத்தப் படாத தார்மணல் நிலக்கரி தண்ணீரை விட அடர்த்தியானது. எனவே இவை கடத்தப்படும் குழாய்கள் கசிந்தால், ஒழுகினால், வெடித்தால் அவை கலக்கும் நீர் நிலைகள், ஆறுகள், ஏரிகளிலிருந்து கழிவை அகற்றுவது முடியாத விடயம்.

இதற்கு ஒரு உதாரணம் ‘என்ப்ரிட்ஜ் குழாய்’ 2010 ஆம் ஆண்டு மிச்சிக்கன் மாநில ‘கலாமாசூ’ ஆற்று விபத்து.

தார் மணலில் இருந்து எரிபொருள் பிரித்து நிலத்தடி எண்ணெய் எடுப்பதை விட, அதை நிலத்தில் விட்டு, போரியல் ஊசியிலைக் காட்டு சதுப்பு நிலங்களைப் பாதுகாத்து, உலகுக்கு உயிர்வாயு ஏற்படுத்த வழிவகுப்பது தற்காலத்திற்கும் வருங்காலத்திற்கும் உதவும் விடயமாகும்.

  • ஊர்க் குருவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad