\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பயற்றம் பணியாரம்

Filed in அன்றாடம், சமையல் by on October 6, 2013 0 Comments

சமையல் குறிப்பு – பயற்றம் பணியாரம்

payirram-Panniyaram-520x416

தேவையானவை

  • வறுத்துக் குற்றிய பாசி பயறு – (பயிற்றம்மாவு)  – 2 pounds
  • முன்று முழுத் தேங்காய் துருவி எடுத்தது
  • பனஞ் சர்க்கரை 20 ounze
  • கரும்புச் சீனி 10 ounce
  • ஏலக்காய் 5
  • உப்பு  தேவையானஅளவு
  • அரிசிமாவு   20 ounce
  • மஞ்சள்தூள்   1 தேயிலைக்கரண்டி
  • பொரிக்க எண்ணெய்

செய்யும்முறை

 துருவிய தேங்காய்ப்பூவை பொன்னிறமாக வாணலியில் வறுத்து, மாவாக இடித்துக்கொள்ளவும். பின்னர் பயிற்றமாவில், சிறிது தேங்காய், சர்க்கரை,  சீனி, சேர்த்து இடித்துக் கலந்து கொள்ளவும். பின்னர் பொடித்த  ஏலக்காய்ப்பொடி, உப்பு சேர்த்து சிறிது கொதிநீரில் குழைத்து சிறிய உருண்டைகளாக செய்துக் கொள்ளவும்.

தொடர்ந்து அரிசிமாவை, உப்பு, மஞ்சள் சேர்த்துக்  கரைத்து அகன்ற

ஆழம் குறைந்த தட்டில் வைத்து உருளைகள் ஒவ்வொன்றையும் அரிசிமாக் கரைச்சலில் தோய்த்து, சூடான எண்ணை உள்ள வாணலியில் பொரித்து எடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad