admin
admin's Latest Posts
மீண்டு(ம்) வரும் சுதந்திரம்

விண்ணோர் போற்றிடும் வகைவாழ்ந்து
வியத்தகு சாத்திரம் பல படைத்து
மண்ணோர் வாழ்நெறி வரையறுத்த
மதிநிறை மக்கள் வாழ்ந்திட்ட தேசமிது!!
பல்லாயிரம் ஆண்டுகள் முன்னமேயே
சொல்லால் செயலால் நிலையுணர்ந்து
பொல்லாதது செய்யாது வாழ்ந்திருந்து
வெல்லாத துறையில்லாதிருந்த தேசமிது !
பகுத்தறிவு – பகுதி 6

பகுதி – 5 சென்ற பகுதியில், பாரதிக்கும் குள்ளச்சாமிக்குமான ஒருசில சம்பாஷணைகள் குறித்துப் பார்த்தோம். விரிவாக இல்லாவிட்டாலும், ஒரு சிறு அறிமுகமாகப் பார்த்தோம். ஆனால் அங்கு என்ன நடந்தது, அதில் எந்த அளவு பகுத்தறிவைப் புகுத்த முடியும் என்பதெல்லாம் போகப்போக விரிவாகப் பார்த்துக் கொள்ள வேண்டியவை. பாரதி குறித்துப் பேசியதற்கு முக்கியக் காரணம், இலக்கிய ஆர்வமுள்ள பலரும் பனிப்பூக்களில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதுதான். இலக்கியத்தை விட்டு விலகும், அதுவும் தமிழிலக்கியத்தை விட்டுவிலகி, பகுத்தறிவு என்ற நோக்கில் பார்க்கத் […]
5 மற்றும் 10 கிலோமீட்டர் ஓட்டப் பந்தயம் (Are you hungry MN)

ஜூலை 22ம் தேதி ஆர் யு ஹங்ரி (Are you hungry MN) சார்பில் ஐந்து மற்றும் பத்து கிலோமீட்டர் ஓட்டப் பந்தயம் மினசோட்டா மாநிலத்தில் உள்ள ஈடன் ப்ரைரே (Eden Prairie) நகரத்திலுள்ள ஸ்டாரிங் ஏரிப் பூங்காவில் (Staring Lake Park) நடைபெற்றது. இப்போட்டியை ‘ஆர் யு ஹங்ரி?’ நிர்வாகக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். போட்டி 9 மணிக்கு ஆரம்பித்தது சுமார் 10:30 மணியளவில் போட்டி நிறைவு பெற்றது. இந்தப் போட்டியில் 214 பேர் ஓடி […]
வாசகர்களுக்கு வணக்கம் !

உங்களனைவரையும் எங்களின் தலையங்கத்தின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படும் எங்களின் தலையங்கங்கள் என்பது நீங்களறிந்ததே. அந்த மூன்று மாதங்களில் நடைபெற்ற நாட்டு நடப்புகளில் முக்கியமான சிலவற்றை ஒரு சிறு முத்தாய்ப்பாய் வெளியிடுவது எங்கள் தலையங்கத்தின் நோக்கங்களில் ஒன்று என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த வகையில், கடந்த மூன்று மாதங்களில் நடைபெற்ற விஷயங்களில் முக்கியமான ஒன்று குறித்துப் பேசலாம். உலக அளவில், எப்பொழுதும் போன்ற நடப்புகளே என்று தைரியமாகச் சொல்லிவிடலாம் என்று தோன்றுகிறது. […]
வரவேற்கும் கலாச்சாரத்தை உருவாக்குதல்

ஊர்ப் புறத்தில் வாழவைக்கும் தர்மம் என்பது வழி தெரியாது வந்தவர்களை வசதியுள்ளதோ இல்லையோ, வரவேற்று உபசரித்தலாகும். இன்றைய வருமானம் மிகுந்த தனிக்குடும்ப வாழ்க்கைச் சூழலிலும், நகர வாழ்வில் பக்கத்து வீட்டாரையே சரியாகத் தெரியாத அநாமதேயச் சூழலில் எமது சமூகத்திடையே வரவேற்கும் கலாச்சாரத்தை உருவாக்குதல் எமது மேம்பாட்டிற்கு அவசியம். ஏறத்தாழ கால் நூற்றாண்டுகளாகப் பதிப்பகம் சார்ந்த தகவல்துறையில் பணிசெய்து வந்தேன். அப்போது எனது பணிகளில் ஒன்று தகவல் சேவைப் பதிவகங்களுடனும், பத்திரிகையாளர்கள், ஆய்வாளர்கள், சட்டத்துறை, கணக்கியல், கணனியியல், மருத்துவம், […]
தாய்நாடு திரும்புவாய்..!.செல்லமகனே..!

எந்தன் தாயுன்னைத் தேடுகிறாள்
—-எங்கே சென்றாய் செல்லமகனே..!
தாய் நாட்டில் கல்வியறிவுபெற்று..
—-அயல் மண்ணில் பணியாற்றவா..!
இயந்திரமாய் எளிதில் பொருளீட்ட..
—-இயல் புக்கெதிராய் மாறினாயோ..!
நீவளர்ந்த ஊரிங்கே நித்தம்..
ப்ரோக்கலி பைட்ஸ்

ப்ரோக்கலி (Broccoli) என்றாலே அது ஒரு நல்ல காய்கறி என்ற மனப் பிம்பம் வந்துவிடும். வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல், பச்சை நிறக் காய்கறிகள் எல்லாம் நல்லதே என்று ஒரு நம்பிக்கை. அது பெரும்பாலும் உண்மையும் கூட. ப்ரோக்கலி விஷயத்தில் முற்றிலும் உண்மை. ப்ரோக்கலி, முதன் முதலில் இத்தாலியின் மத்திய தரைக்கடல் கரைப் பகுதிகளில் விளைவிக்கப்பட்டது. அமெரிக்காவில் 1920களின் வாக்கில் தான் நுழைந்தது. தற்சமயம் அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் இது அதிக அளவில் பயிரிடப்படுகிறது. […]
நாட்டின் நெறிமுறைகள் (Ethics) கேள்விக்குறியிலா?

நாட்டின் நெறிமுறைகள் கேள்விக்குறிக்குத் தள்ளப்பட்டுள்ளனர் அன்றாடம் தொலைக்காட்சியைப் பார்த்தால், வானொலி கேட்டால், பத்திரிகை இணையதள எழுத்துக்களை வாசித்தால் அமெரிக்க அரசியல் ஏதோ சர்க்கஸ் கும்மாளம் என்பது போல நமக்குத் தோன்றலாம். ஆயினும் சனநாயக கோட்பாட்டையே கேள்விக்குறியாக்க கூடிய நிலைமைகளை நாம் புறக்கணிக்கலாகாது. நாட்டின் 230 ஆண்டுச் சரித்திரத்தில் அரசு நெறிமுறைகள் (Government Ethics) பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளன என்கிறார் அண்மையில் பதவி விலகிய, அமெரிக்க அரசு நெறிமுறை (U.S. Office of Government Ethics) அலுவலக அதிகாரி […]
ஓட்டு வீடு

காசி வீட்டிற்குள் இருக்க முடியாமல் தவித்தார். அந்தச் செங்கல் சுவர், பெயிண்ட் எல்லாம் இறுக்குவது போல இருந்தது. வீட்டின் வாசல் நோக்கி நடந்தார். மனைவி சுபா புரிந்தது போல ஒரு குவளை தண்ணீரைக் கையில் ஏந்தியபடி அவரைத் தொடர்ந்தார். அந்த வீட்டின் வாசலில் உள்ள சிறிய வராந்தாவில் அமர்ந்தார். வெளிக் காற்று, ஏதோ இறுக்கத்தைக் குறைத்தது போல இருந்தது. ஆனாலும் முழு அமைதி இல்லை. “சுபா .. மனசுக்கு கஷ்டம் குறையல.. அம்மா திடீர்னு இப்படி போவான்னு […]
தவத்தில் எழுந்த தேவாலயம் – Grotto of the redemption

ஜெர்மனியில் 1872 ஆம் ஆண்டு பிறந்த பால் டோபர்ஸ்டேன் (Paul Dobberstein) தனது இருபதாவது வயதில் கல்லூரி கல்விக்காக அமெரிக்கா வந்தார். மில்வாக்கியில் ‘செயிண்ட் பிரான்சிஸ் தே செல்ஸ்’ (Saint Francis de Sales) கல்லூரியில் மதகுருக்களுக்கான படிப்பைப் படித்தார். படித்து முடித்து, தனது பொறுப்பை ஏற்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு ஜன்னி காய்ச்சலில் படுத்தார். அச்சமயம் கன்னிமாதாவிடம், தான் உயிர் பிழைத்து வந்தால், அவருக்குத் தேவாலயம் கட்டுவதாக வேண்டினார். அவரது வேண்டுதல் பலித்தது. மீட்சிக்கான மண்டபத்தை […]