admin
admin's Latest Posts
மின்னசோட்டாவில் இலையுதிர் வர்ண ஜாலம்
இயற்கையின் கால மாற்றங்களில் இலையுதிர் காலமானது மிகவும் ரம்மியமானது. மரங்களுக்கான உணவைச் சூரிய ஒளியில் இருந்தும், காற்றில் இருந்தும் இலைகள் தயாரிக்கும் போது, இந்தச் சமையலில் ஈடுபடும் க்ளோரொஃபில் (Chlorophyll) எனும் ரசாயனம், இலைகளுக்குப் பச்சை நிறத்தை, சூரியன் அதிக நேரம் இருக்கும் வசந்தக் காலத்திலும், கோடை காலத்திலும் கொடுக்கிறது. இது போல், தாவரங்களில் இருக்கும் பிற வகை ரசாயனங்கள், மற்ற வண்ணங்களுக்குக் காரணமாக அமைகின்றன. கரோடெனாய்ட்ஸ் (Carotenoids) என்பது மஞ்சள், ஆரஞ்சு போன்ற வண்ணங்களை வாழைப்பழம், […]
அறிவுள்ள காகம் !
காகம் ஒன்று பறந்து திரிந்தது
கோடை வெயில் தீயாகச் சுட்டது
தாகம் தீர்க்க அலைந்து வாடியது
காகம் குடிநீருக்காகத் தவித்தது !
குளம் குட்டையெல்லாம் சுற்றியது
களைப்பில் மரத்தில் நின்றது
எல்லாமே வறண்டு கிடந்தது
தாகம் தீர்க்கத் தண்ணீர் எங்கே ?
மாறி வரும் மரபுகள் – தேவவிரதன்
காதல், காதல், காதல், காதல் போயின் சாதல் என்றான் ஓர் கவிஞன் கவிதைக்குப் பொய் அழகு என்றான் இன்னொரு புலவன் அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்றார் ஒருவர் இன்று அந்த உறவு கடல் கடந்து போய் விட்டது கணினித் தொடர்புடன் இந்தியாவின் இதயம் கிராமங்களில் என்றார் ஒரு கிழவர் அந்த இதயத்தை விட்டு நகர்ந்து வருபவர்தான் இன்று நான் காணும் தலைமுறை மனதை ஒருமிக்க மதம் என்றனர் ஆன்றோர் ஆனால், மதத்தின் பெயரால் மதம் பிடித்து […]
ஒரே ஒரு சந்திரன் – பாகம் 3
(பாகம் 2) ராஜகுமாரி திரைப்படத்திற்கு முன்னரே, ராமச்சந்திரனுக்கு , நந்தலால் என்பவர் இயக்கிய ‘சாயா’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது . படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே அவரது மனைவி பார்வதி உடல்நலம் குன்றி இறந்துவிட, ஊருக்குச் சென்றதால் ஹீரோ வாய்ப்பை அவர் இழக்க நேர்ந்தது. மனைவி இறந்தது ஒரு பக்கம், கதாநாயகன் வாய்ப்பு பறிபோனது ஒரு பக்கமென துயரங்கள் தாக்கிய போது ராமச்சந்திரன் ராணுவத்தில் சேர்ந்து விட விரும்பினார். அவரது மனதை மாற்றி திரைப்படங்களில் […]
மன்னிப்பாயா ..
நிரஞ்சனுக்குத் தூக்கம் கலைந்துவிட்டது. புரண்டு புரண்டு படுத்தாலும் தூங்க முடியவில்லை. படுக்கையை ஒட்டிய மேஜை மீதிருந்த செல்ஃபோனை எடுத்தான். பளீரென ஒளிர்ந்து கண்ணைக் கூசியது. கண்களை இடுக்கிப் பார்த்ததில் மணி 3.17 am என்று காட்டியது. பக்கத்தில் திரும்பிப் பார்த்தான். கால்களில் துணி விலகியதைக் கூட உணராமல், குழந்தை போல் குப்புறப் படுத்து, நித்சலனமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள் ஷர்மி. தூக்கத்திலும் முகத்தில் மெலிய புன்னகை. விலகிக் கிடந்த நைட்டியை இழுத்துவிட்டு, பக்கத்திலிருந்த போர்வையைக் கழுத்து வரையில் போர்த்தி […]
மஹாகணபதிம் ஆவாஹயாமி……
”ஏன்னா….. நாளைக்குச் சத்த ஆஃபீஸுக்கு லீவு போட்றேளா?…. “ கேட்ட லக்ஷ்மியைச் சற்றுக் எரிச்சலுடன் பார்த்தான் கணேஷ். “ஏன், என்னத்துக்காக லீவு போடணும்?” என்று கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு சாதாரண தொனியில் கேட்க, “நாளைக்கு கணேஷச் சதுர்த்தின்னா…. ஆத்துல பூஜை பண்ணணும், இது ஆம்பளேள் பண்ற பூஜை”…. என்று இழுக்க, “நோக்குத் தெரியாதாடி, நேக்கு இந்த பூஜை புனஸ்காரத்துலெல்லாம் பெருசா இண்ட்ரஸ்ட் இல்லடி.. என்ன விட்டுடேன்….” என்று கெஞ்சத் தொடங்கினான். “நான் உங்கள எப்பப்பாத்தாலுமா தொந்திரவு […]
பகுத்தறிவு – பகுதி 7
(பகுதி 6) சென்ற இதழில் ரமணர் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அவரின் வாழ்வில் நடந்த பல சிறிய, ஆனால் அரிய நிகழ்வுகளையும், அவை காட்டும் பகுத்தறிவையும் தொடர்ந்து பார்ப்போம். ரமணர் குகையில் வாழ்ந்து கொண்டிருந்தார் என்று ஏற்கனவே பார்த்தோம். அவரின் அதீத ஞானத்தைச் சிறிது சிறிதாக உணரத் தொடங்கிய கிராம மக்கள் அவரைத் தினமும் வந்து பார்க்கத் தொடங்கினர். தினமும் வந்து பார்க்கத் தொடங்கியவர்கள், அவருக்கு உணவு, உடை எனக் கொடுத்துப் பாதுகாக்கத் தொடங்கினர். அவரின் பாதுகாப்பிற்காக […]







