admin
admin's Latest Posts
வண்ணப் பட்டங்கள் விழா 2017

மினசோட்டா மாநிலத்தில் ப்ளூமிங்டன் நகரில் உள்ள வேலி பூங்காவில், பட்டங்கள் பறக்கவிடும் விழா நடைபெற்றது. இந்தப் போட்டியை ப்ளூமிங்டன் நகர சபையினர் மற்றும் மினசோட்டா பட்டம் விடுவோர் சங்கம் சேர்ந்து நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். சிறுவர் முதல் பெரியவர் வரை பங்கேற்று வண்ண வண்ணப் பட்டங்களைச் செய்து, பறக்கவிட்டு மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் சிறப்பான பட்டம் செய்தவர்கள், உயரமாக பறக்கவிட்டவர்கள் மற்றும் அதிக நேரம் பறக்க விட்டவர்களுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தனர். இவ்விழாவில் குழந்தைகள் விளையாட செயற்கை […]
அம்மா கடை காப்பி…

”ம்ம்…. ஏண்டா அம்பி… எங்க உங்கப்பா… “ கேட்டுக் கொண்டே அந்தத் திண்ணையின் தாவி அமர்ந்து கொண்டார் பக்கத்து வீட்டு கஸ்தூரி மாமா. “தெர்ல மாமா, எங்கயோ போயிருக்கா…” என்று பதில் சொல்லி விட்டு, அந்த இத்துப் போன ரப்பர் பந்தைச் சுவற்றில் எறிந்து விளையாடிக் கொண்டிருந்தான் கணேசன். இவன் பதிலைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் மடியில், வேஷ்டி மடிப்பில் சுற்றி வைத்திருந்த வாழைப்பட்டையை வெளியில் எடுத்துப் பிரித்து, அதிலிருந்து டி.கே.எஸ். பட்டணம் பொடியை, ஆட்காட்டி விரல் […]
அந்த 158 நாட்கள்

பெரிய அளவில் அரசியல் அனுபவமும், ஆளுமையும் இல்லாது, புகழ் பெற்ற தொழிலதிபர், தொலைகாட்சியில் மெய்மை நிகழ்ச்சிகள் நடத்துபவர், உலக அழகிப் போட்டிகள் நடத்தும் நிறுவனர் போன்ற சிறப்புகளைப் பெற்றிருந்த டானல்ட் ட்ரம்ப், அமெரிக்க அதிபராகப் பதவியேற்று ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. பத்து மாதங்களுக்கு முன்பு வரை, சூரியன் மேற்கே உதிக்கவும் வாய்ப்புண்டு ஆனால், ட்ரம்ப் அதிபராக வாய்ப்பேயில்லை என்று ஹேஷ்யம் கூறி வந்தன ஊடகங்கள்; தங்களது பாரம்பரியத்துக்கே பெரிய இழுக்கு என்றனர் குடியரசுக் கட்சியினர்; மிக எளிதாக […]
ஒரே ஒரு சந்திரன் -பாகம் 2

(பாகம் 1) ராமச்சந்திரனின் சிறு வயதிலேயே அவரது தந்தை இறந்துவிட, அவர்களது குடும்பம் ஏழ்மையில் மூழ்கியது. பின்னர் அவரது தாயார் சத்யபாமா மிகுந்த சிரமங்களுக்கிடையே, ராமச்சந்திரனையும், அவரது மூத்த சகோதரர் எம்.ஜி.சக்ரபாணியையும் வளர்க்க வேண்டியிருந்தது. இந்தச் சமயத்தில் தன் பிள்ளைகளுக்கு மூன்று வேளைச் சாப்பாடு கிடைக்கும் என்ற ஒரே காரணத்தால், அவர்களை மதுரை பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேர்த்து விடுகிறார் சத்யபாமா. களையான முகமும், சிவந்த நிறமும் கொண்டிருந்த ராமச்சந்திரனுக்குப் பயிற்சியளிக்கத் துவங்கினர் பாய்ஸ் கம்பெனியினர். போதுமான […]
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஜூலை 2017)

முந்தைய பகுதிகளைக் காண, ஃபிப்ரவரி 2017 ஏப்ரல் 2017 சொற்பக் காலம் இருந்த திரையுலக வேலை நிறுத்தமா அல்லது வேறென்னமோ தெரியவில்லை. கடந்த இரு மாதங்களில் சூப்பர் ஹிட் பாடல்களின் எண்ணிக்கை ரொம்பக் குறைச்சல்தான். இந்தக் காலக்கட்டத்தில் இளையராஜா சில கோரமான படங்களுக்கு இசையமைத்திருந்தார். ரஹ்மான் இசையமைத்த நேரடி தமிழ் படங்கள் ஏதுமில்லை. ஹாரிஸும், சந்தோஷும் தலா ஒரு படத்துக்கு இசையமைத்திருந்தனர். யுவன், மூன்று படங்களுக்கு இசையமைத்து இருந்தாலும், ஒன்றும் தேறவில்லை. வரிசையாகப் பாடல்கள் வெளியிடுவது இமான் […]
சொற்புதிர் – காய்கறிகளைக் கண்டுபிடியுங்கள் – விடை

ஜூன் மாதம் தேசியப் பழங்கள் மற்றும் காய்கறிகள் மாதமாகக் கொண்டாடப்பட்டது. பொதுவாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காய்கறிகளும் பழங்களும் கடைகளில் நிரம்பி வழியும். இக்காலங்களில் புத்தம் புதிய பழங்களும், காய்கறிகளும் தோட்டத்திலிருந்து நேரடியாக உழவர் சந்தைகளில் கிடைக்கும். பல சமயங்களில் நாம் காய்கறிகளின் ஆங்கிலப் பெயர்களை அப்படியே குறிப்பிடுவதுண்டு. அவசரத்தில், அதற்கான தமிழ்ப் பெயர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. இங்கே பட்டியலிலுள்ள காய்கறிகளின் தமிழ்ப் பெயர்கள் அருகிலுள்ள கட்டத்தில் மறைந்துள்ளன. அதனைக் கண்டுபிடிப்போமா? BROCOLLI – பச்சைப்பூங்கோசு […]
ஓவியா – தி பிக் பாஸ்

சமூக வலைத்தளங்கள் அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கின்றன. செய்தித் தளங்கள் தினமும் இது குறித்த செய்திகள் வாசித்துக் கொண்டிருக்கின்றன. ஆய்வுக்கட்டுரைகள் குவிகின்றன. ஒப்பீட்டுக் கவிதை பரவலாகப் பரவுகிறது. மீம்ஸ் கொட்டுகின்றன. எல்லாம் ஸ்கிரிப்ட் தான் என்று சொல்லிக் கொண்டே, தவறாமல் பார்க்கிறார்கள். டிஆர்பி எகிறுகிறது. தியேட்டரில் கூட்டம் குறைகிறது. போட்டி சேனல்களில் சூப்பர் ஹிட் திரைப்படங்களை இவ்வேளையில் தினமும் ஒளிபரப்புகிறார்கள். ஆனாலும், பிக் பாஸும் அதன் வெற்றியும் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. டிவியில் இருந்து சிவகார்த்திகேயனைச் சினிமாவுக்கு அனுப்பி வைத்துவிட்டு, […]
கண்ணம்மாவின் பாரதி

மாலைச் சூரியன் மஞ்சளாய் அஸ்தமித்துக் கொண்டிருந்தான். சிங்காரச் சென்னையில் தினந்தோறும் சூரியன் அஸ்தமிக்கும் நேரம் கிட்டத்தட்ட அதே மணித்துளியில்தான்… மாலை 5.55 அல்லது ஓரிரு நிமிடங்கள் முன் பின்னாக இருக்கலாம். அந்த நேரத்தை நெருங்கிக் கொண்டிருந்ததால், சூரியனும் நாள் முழுதும் உழைத்த களைப்புத் தீர ஓய்வெடுப்பதற்காக மேகங்களுக்குப் பின்னே ஒளிந்து, வானத்தின் அடிப்பகுதி நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தான். அவனது மஞ்சள் கிரணங்கள், மெரினா கடற்கரையின் மணலையும் மஞ்சள் தூள் போலக் காட்டிக் கொண்டிருந்தன. அந்த மஞ்சள் கிரணங்களுக்கு […]
செயற்கை நுண்ணறிவு வேலை வாய்ப்பைக் குறைக்குமா?

சென்ற சில வருடங்களாகக் கணனித் தொழில் நுட்பம் அதன் வளர்ச்சியில் முன்னணியை அடைந்துள்ளமை நாம் அறிந்த விடயம். சென்ற நூற்றாண்டின் மத்தியில் தொடங்கி, கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் கணனிகள் தாமாகத் தகவல் ஆராயும் வல்லமையில் பல மடங்குகள் வளர்ந்துள்ளன என்று ஒப்பீட்டளவில் நாம் அவதானிக்கலாம். இந்த வளர்ச்சி கைத்தொலைபேசிக் கமெரா படமெடுப்பதற்கு நமக்கு உபயோகமாகும் போது யாவருக்கும் ஆட்சேபணை இல்லை. ஆனால் மனிதன் பகுத்து அறியும், மிகுந்த சம்பளத் தொழில் முறைகளாகிய மனித உரையாடல்களை வர்த்தக, நீதிமன்ற […]
விவசாயிகள் சந்தை – 2017

விவசாயத்தைப் பிரதான உற்பத்திப்பொருட்களாக ஏற்றுமதி செய்யும் மினசோட்டா மாநிலத்தில் கோடைக் காலம் குதூகல என்பது உள்ளூர் காய்கறி வாங்கியோ அல்லது சொந்தத் தோட்டத்தில் வளர்த்தோ, சமைத்துச் சுவைக்கும் காலம். கோடை கடந்தால் குளிர் வந்துவிடும். எனவே, சுறுசுறுப்பாக பொடிநடை போட்டு, அழகான உணவுகளைப் பதமாகத் தெரிவு செய்து, மிகக் குறைந்த சில்லறைக் காசுகளால் பை முழுதும் பல கறிவாங்க ஒரே சந்தர்ப்பம் விவசாயிகள் சந்தையே. இதோ உங்கள் அருகாமையில் உள்ள இவ்வருட உள்ளூர் விவசாயச் சந்தைகள் அட்டவணை. […]