admin
admin's Latest Posts
மரபிசைக் கலைஞர்களுடன் ஒரு சந்திப்பு – பாகம் 2

(பாகம் 1) கேள்வி (சிலம்பரசன்): உங்களுக்குப் பல கருவிகள் வாசிக்கத் தெரியும் என்று கூறினீர்கள். ஒரு கருவி கற்றுக் கொண்டால் மற்ற கருவிகள் வாசிக்க கற்றுக்கொள்வது சுலபமா? சிலம்பரசன்: சொல்கட்டு எடுத்து கொண்டால், லயம் சம்பந்தப்பட்ட எல்லாக் கருவிகளுக்கும் “தா தீ தம் நம் தகிட” போன்று சொல்கட்டுகள் அமைந்திருக்கும். ட்ரம்ஸ் போன்ற கருவிகள் மேற்கத்தியக் கருவிகள். அதன் வாசிப்பு முறையே வேறு. அதற்கும் வாத்தியத்துக்கும் சம்பந்தம் இல்லை. ட்ரம்ஸ் கருவிக்கு வெஸ்டர்ன் நோட்ஸ், நான் பயன்படுத்துவது […]
சிரத்தை

”ஆச்சு.. இன்னையோட சரியா ஏழு வருஷம் முடிஞ்சுது…. இப்போதான் நடந்ததுபோல இருக்கு…” படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டே நினைவு கூர்ந்தான் கணேஷ்… “ஆமாம்… நேக்கும் அதே நெனப்புத்தான்…” அவன் முழுதாக விளக்கியிருக்காவிடினும், எதைப்பற்றிச் சொல்கிறான் என்று புரிந்து கொண்ட லக்ஷ்மி, அவனுக்கு விடையளித்துக் கொண்டிருந்தாள். படுக்கையில் அருகருகே அமர்ந்துகொண்டு ஒன்றும் பேசாமல் சற்று நேரம் இருந்த அவர்களின் மௌனத்தைக் கலைத்தது அவசர அவசரமாய் உள்ளே ஓடிவந்து படுக்கையில் ஏறிக் குதித்த சிறியவளின் ஆர்ப்பாட்டம். பெற்றோர் இருவரும் பேசாமல் […]
மினியாப்பொலிஸ் மாநாட்டு அரங்கு Minneapolis Convention Center

மாநில விருந்தாளிகளையும், உள்ளூரவரையும் பல கண்காட்சிகளுக்கும், கலைக்கூடங்களுக்கும், மாநாடுகளுக்கும் வரவேற்கிறது மினியாப்பொலிஸ் மாநாட்டு மண்டபம். மினியாப்பொலிஸ் நகரமும் இதன் அரங்குகளும் மற்ற பெரும் நகரங்கள் போன்றல்லாது, வருவோர் இலகு பாவனை கருதித் திட்டமிட்டு அமைக்கப்பட்டது. மினியாப்பொலிஸ் நகரத்தின் வர்த்தக மையம் நிக்கலெட் மால் (Nicollet Mall) ஆகும். இந்த மாலிற்கும் மினியாப்பொலிஸ் இசையரங்கிற்கும் (Orchestra Hall) அருகே அமைந்துள்ள அரங்கே மினியாப்பொலிஸ் மாநாட்டு மண்டபமாகும். முகவரி 1301 2nd Ave S, Minneapolis, […]
ஃபெட்னா பேரவை விழா – தயாராகும் மின்னசோட்டா

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான ஃபெட்னாவின் (FETNA) பேரவை விழா, இந்த ஆண்டு மின்னசோட்டாவில் மினியாபொலிஸ் கன்வென்ஷன் சென்டரில் (Minneapolis Convention Center) நடைபெறவுள்ளது. இதற்காக அமெரிக்கா மட்டுமில்லாமல் உலகின் பல பகுதிகளிலிருந்தும் விருந்தினர்கள் ட்வின் சிட்டீஸிற்கு ஜூலை முதல் வாரம் (July 1st and 2nd) வருகை தர உள்ளனர். இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களாக, கயானா நாட்டின் பிரதமர் மோசசு வீரசாமி நாகமுத்து, இலினாய் மாநிலத்தின் கீழவை உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, இந்தியப் […]
ஜெகத்காரணி

அகம் குளிர்ந்திடவே “ஜெகத்காரணி” எனும் தெய்வீக ஆடற் கதை, அழகுறு சக்தி வடிவங்களாய் , ‘நிருத்திய கலாசேக்ஷ்தினரால்’ சித்தரிக்கப்பட்டு, 2017 ஆனி மாதம் 17ஆம் நாள் சனிக்கிழமையன்று, வண்ணமுற வழங்கப்பட்டது. மினசோட்டாவில் அமைந்திருக்கும் மகிமைமிகு இந்து ஆலயத்தில், ‘நவ சந்தி’ எனும் மாபெரும் ஹோமம் நிகழ்ந்து , 11ஆவது வருட விழாவாகிக் கனிந்திடவே, ஜெகம் புகழுறு “ஜெகத்காரணி”யின் அருட்பிரசாதமாய், இக்கலை நிகழ்ச்சி, இனிதாய் மலர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆடற்கதையினை வடிவமைத்து நெறிப்படுத்தியவர் , “நிருத்திய கலாசேஷ்திர […]
மால் ஆஃப் அமெரிக்கா

மினசோட்டாவின் பெருமைகளில் ஒன்றான மால் ஆஃப் அமெரிக்காவிற்கு இது வெள்ளி விழா ஆண்டு. அப்படியென்ன பெருமை என்றால், அமெரிக்காவின் மிகப் பெரிய அங்காடி வளாகம் என்ற பெயரைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகச் சூடிக் கொண்டு நிற்கிறதே. மினியாபொலிஸ் வாசிகளுக்கு இந்த மால் மேல் எந்தளவு க்ரேஸ் இருக்கிறதோ தெரியாது, இங்கு வரும் வெளியூர் விருந்தினர்களுக்கு இதன் மேல் பெரும் ஆர்வம் இருக்கும். மினியாபொலிஸில் பார்க்க வேண்டிய இடங்கள் என்னும் லிஸ்டில் இது கண்டிப்பாக இருக்கும். இதன் […]
ஒரே ஒரு சந்திரன் ..

மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன். எத்தனை பேருக்கு இந்தப் பெயரில் இவரைத் தெரியுமோ, அறியேன். ஆனால் அந்தப் பிரபலமான மூன்றெழுத்தைத் தெரியாத, ஐம்பதுகளுக்குப் பின்னர், எண்பதுகளுக்கு முன்னர் பிறந்த தமிழர் கிடையாது என அடித்துச் சொல்லலாம். இவர் இறந்து முப்பதாண்டுகள் நிறைவுறும் தருவாயில் சிலர் இவர் இன்னமும் உயிருடன் இருப்பதாக வாதிட, சிலர் இவரைத் தெய்வமாக எண்ணி பூஜித்து வணங்கி வருகிறார்கள். அரசியல், சினிமா போன்ற துறைகளில் பலரது ஏற்ற, இறக்கங்களுக்கு இவர் காரணமாய் இருந்த போதிலும் அனைவரும் […]
நாங்கெல்லாம் அப்பவே அப்படி …

“ஏங்க, வித்யா ஹஸ்பெண்ட் டெபுடேஷன்ல சிகாகோ போறாராம். அவர் கிட்ட ‘திவான் அவென்யுலேர்ந்து’ ரெண்டு கிலோ உளுந்தும், கார அரிசியும் வாங்கிட்டு வரச் சொல்லுங்க. அவரா சொமந்துகிட்டு வரப் போறார்.. கார் தானே சொமக்கப்போது”. “சொன்ன ஒடனே திரும்பிப் பாக்காதீங்கோ.. பின்னாடி ப்ளு கலர் டி-ஷர்ட் போட்டுண்டு வராரே .. பாக்க நம்மவா மாதிரி தெரியறது .. பேச்சுக் கொடுத்துப் பாருங்கோ.” “அவன் ‘Straight from Bangladesh’ ன்னு டி-ஷர்ட் போட்டுருக்கானேடி” “இருந்துட்டு போறது […]
மினசோட்டா மாநிலம் பற்றிய குறுக்கெழுத்துப் புதிர்

இடமிருந்து வலம் மினசோட்டா மாநிலத்தின் அடையாள விளையாட்டு (Official game of Minnesota) (5) கடந்த வருடம் இறந்த மினசோட்டாவைச் சேர்ந்த புகழ்பெற்ற பாப் இசைப் பாடகர் ( 4) மினசோட்டாவின் மிகப் பழமையான முதல் நகரம். (3) மினசோட்டா மாநிலத்தின் செல்லப் பெயர்களில் இதுவும் ஒன்று. இப்பெயரில் மினசோட்டா பல்கலையின் ஃபுட்பால் குழு பன்மையில் உள்ளது (3) மினசோட்டா மாநிலத்துக்குக் கிழக்கே அமைந்துள்ள இம்மாநிலத்தை சுப்பீரியர் ஏரி பிரிக்கிறது. (4) மினசோட்டா மாநிலத்தின் பெரிய […]