\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

இந்தியா ஃபெஸ்ட் 2017 (India Fest)

இந்தியா ஃபெஸ்ட் 2017 (India Fest)

  இந்தியா அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா (IAM) வருடம் தோறும் இந்தியச் சுதந்திரத் தினத்தையொட்டி மினசோட்டாவில் வசிக்கும் இந்தியர்களையும், இந்திய அமைப்புகளையும் ஒருங்கிணைத்து மினசோட்டா ஸ்டேட் கேப்பிடல் (State Capitol) மைதானத்தில் நடத்தும் இந்தியா ஃபெஸ்ட் (India Fest) நிகழ்வு, இந்தாண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று வெகு விமரிசையாக நடந்தது. அன்றைய தினம் வெளிப்புற நடமாட்டத்திற்கு ஏற்ற தட்பவெப்பம் அமைந்திருந்தது, இந்த நிகழ்வுக்குச் சாதகமாக இருந்தது. காலை பதினொரு நிகழ்ச்சிகள் தொடங்கின. மாமன்றக் கட்டிடத்தின் முன்பாக மேடை […]

Continue Reading »

பார்க்கர் ஏரி நீர் சறுக்கு (Water Ski Show)

பார்க்கர் ஏரி நீர் சறுக்கு (Water Ski Show)

மினசோட்டா எங்கும் ஏரிகளாக இருப்பதால், விதவிதமான நீர் சார்ந்த விளையாட்டுகளை இங்குள்ளோர் விளையாடுவதுண்டு. அதில் வாட்டர் ஸ்கீ (Water Ski) எனப்படும் நீர்ச் சறுக்கு விளையாட்டும் ஒன்று. பனியில் சறுக்கிச் செல்வது போல், தண்ணீரின் மேல் சறுக்கிச் செல்லும் விளையாட்டு இது. வேகமாகச் செல்லும் படகில் கட்டப்பட்டிருக்கும் கயிறை ஒரு குழுவாகப் பிடித்துக்கொண்டு, ஒருவர் பின் ஒருவராக, ஒருவர் மேல் ஒருவராகப் பல நிலைகளில், பார்வையாளர்களைக் கவருமாறு சாகசம் புரியும் விளையாட்டு இது. மினசோட்டாவில் நீர்ச் சறுக்கு […]

Continue Reading »

மினசோட்டா தலைமையக மறுதிறப்பு (Minnesota Capitol Reopening)

மினசோட்டா தலைமையக மறுதிறப்பு (Minnesota Capitol Reopening)

  முதன்முதலில் 1905 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட மினசோட்டாவின்  தலைமையகத்தில் 2013இல் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. இருக்கைகளை அதிகரிப்பது, பொதுமக்களுக்கான புதிய கலந்துரையாடல் அறைகள் அமைப்பது, கழிப்பறைக் கட்டுமானங்கள், புதிய விருந்தினர் மையம் எனப் பல விஸ்தரிப்பு வேலைகள் நடைபெற்றன. இதற்காகச் சுமார் 310 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது. இச்சமயத்தில், கட்டிடத்தின் சில பகுதிகள் மட்டும் பயன்பாட்டில் இருந்தன. இம்மாதம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி, பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, தலைமையகம் மக்களின் முழுமையான பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது. […]

Continue Reading »

கவித்துளி

Filed in இலக்கியம், கவிதை by on August 28, 2017 0 Comments
கவித்துளி

கவித்துளி 1 இரவின் மடியில் இளைப்பாறுகையிலே இன்னிசை மழை இனிதெனப் பொழிந்திடவே இளந்தென்றல் இதயத்தை இதமாய் வருடிடவே இசையில் இணைந்திட பாவிமனம் தவித்திடவே இன்பத்தின் உச்சந்தனை அள்ளி நுகர்ந்திடவே இன்னிசையோடு இயைந்தே இன்பத்தை எய்திடவே இதயத்தில்  நாணத்தோடு காதல்தீபம் ஏற்றிடவே இன்முகத்தோடு இதய சிம்மாசனத்தில் ஏறிடவே இதழில் பழரசம் பருகிடக்  காத்திருக்கவே இடுப்பு மடிப்பினில் இதயம் பறிபோயிடவே இரவின் நீளத்தில் கோலமகளும் நாணிடவே இரவின் ஒளியினில் இதழ் பதித்திடவே இன்னுயிரும் மெய்யதுவும் ஒன்றாகி இணைந்துவே !!! கவித்துளி 2 […]

Continue Reading »

நீங்கள் எட்டு மணி நேரம் தான் வேலை பார்க்கிறீர்களா?

நீங்கள் எட்டு மணி நேரம் தான் வேலை பார்க்கிறீர்களா?

  உலகமெங்கும் மே ஒன்றாம் தேதி கொண்டாடப்படும் தொழிலாளர் தினம், அமெரிக்காவில் மட்டும் செப்டம்பர் முதல் திங்கள் அன்று கொண்டாடப்படும் காரணம் என்ன? அமெரிக்காவுக்குச் சைனீஸ் நூடுல்ஸும் டொமட்டோ சாஸும் பிடிக்கும் அளவுக்கு, சோஷலிசமும் போராட்டங்களும் பிடிப்பதில்லை. மே 1 முதல் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை முன் வைத்து நடத்தப்பட்ட சிகாகோ தொழிலாளர் போராட்டத்தை உலகமே வருடந்தோறும் மே ஒன்றாம் தேதி அன்று நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்க, அமெரிக்காவில் மட்டும் தொழிலாளர் […]

Continue Reading »

Kids Drawing – Happy Indian New years

Kids Drawing – Happy Indian New years

Continue Reading »

நக்கல் நாரதரின் நையாண்டி – 1

நக்கல் நாரதரின் நையாண்டி – 1

Continue Reading »

அனாமதேய ஆபத்து

அனாமதேய ஆபத்து

கடந்த இரண்டு மூன்று வாரங்களாக இணையங்களிலும், சமூகத் தளங்களிலும் காட்டுத் தீயெனப் பரவிவரும் சொல் ‘சரஹா’. இது புதிய சமூகப் பிணையப் பயன்பாட்டு மென்பொருள் (Social networking apps / Social networking software).  வாட்ஸப், ட்விட்டர், ஸ்நாப்சாட், இன்ஸ்டாகிராம், பின்ட்ரெஸ்ட் போன்று பல பயன்பாட்டு மென்பொருட்கள் இருக்கும் பொழுது, இதென்ன புதுசா சரஹா? சரஹா (Sarahah) சவூதி அரேபியரான, ஜெயின் அல்-அபிதின் டாஃபிக் சரஹாவை உருவாக்கியுள்ளார். அரேபிய மொழியில் ‘சரஹா’ என்றால் வெளிப்படை, நேர்மை என்று […]

Continue Reading »

ஏ. ஆர். ரஹ்மான் – 25

ஏ. ஆர். ரஹ்மான் – 25

ஏ.ஆர்.ரஹ்மானுக்குத் திரையுலகில், இது இருபத்தைந்தாவது ஆண்டு. 25 ஆண்டுகளுக்கு முன்பு, ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று ரோஜா வெளியான சமயம், அவருடைய வயது 25. இந்த இளைஞன் தான் இந்திய இசையைப் புரட்டிப் போடப் போகிறான் என்றும், இவன் உள்ளூர் இசையை உலகிற்கும், பலவகை உலக இசையை நம்மூருக்கும் பரப்பவிருக்கும் ஆஸ்கர் நாயகனாக இருப்பான் என்று யாரும் எண்ணியிருக்கவில்லை. சாதனைகளுக்கு எந்த நிறுத்தமும் இல்லாமல், ஓடிக் கொண்டிருக்கும் ரஹ்மானின் இசைப்பயணத்தை, அவருடைய சிறந்த 25 பாடல்களைக் கேட்டுக்கொண்டே […]

Continue Reading »

விக்ரம் வேதா

விக்ரம் வேதா

மணிரத்னம் பாணியைக் கையில் எடுத்திருக்கிறார்கள் இயக்குனர்கள் இணை காயத்ரி புஷ்கர். மணிரத்னம் தான் மஹாபாரதம், சத்தியவான் சாவித்திரி, ராமாயணம் என நாம் கேட்டு அறிந்த புராணக் கதைகளை, நாட்டு நடப்புகளுடன் இணைத்து, படங்களைக் கொடுத்து வந்தார். ரௌடியான கர்ணன், காஷ்மீர் போன சத்தியவான், சந்தன மரக் கடத்தல் செய்த ராவணன் என்று புராண மிக்ஸ் கதாபாத்திரங்களை வடிவமைத்து வந்தார். அந்த வகையில், இதில் நாம் சிறு வயதில் கேட்ட, வாசித்த, ரசித்த விக்ரமாதித்தன் வேதாளம் கதையை என்கவுண்டர் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad