admin
admin's Latest Posts
ஃபெட்னா பேரவைத் தமிழ் விழா 2017

ஃபெட்னாவின் 2017 பேரவைத் தமிழ் விழா, மினியாபொலிஸில் எம்சிசி (MCC) என்றழைக்கப்படும் பிரமாண்ட கன்வென்ஷன் சென்டரில் (Minneapolis Convention Center) ஜூலை 1, 2 மற்றும் 3 ஆம் தினங்களில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவுக்கு அமெரிக்கா, இந்தியா, கனடா, சிங்கப்பூர் என உலகின் பல பகுதிகளிலிருந்தும் விருந்தினர்கள் வந்து கலந்துகொண்டனர். முன்னதாக, 31 ஆம் தேதி வெள்ளியன்று மாலை, வந்திருந்த விருந்தினர்களைச் சந்தித்து, அவர்களுடன் உணவருந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘நட்சத்திர இரவு’ நிகழ்ச்சி செயிண்ட் பாலில் […]
பிக் பாஸ் சர்ச்சைகள்

‘பிக் பாஸ்’. தமிழ் தொலைக்காட்சியை, இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தை, உலகில் பல மூலைகளில் வாழ்ந்து வரும் தமிழரை ஆட்டி வைக்கும் சொல்லாகி விட்டது பிக் பாஸ். யூ டுயூபில் கிளிக் செய்யும் லிங்க்கில் எல்லாம் சுத்தமாகச் சவரஞ்செய்து கண்ணாடி போட்ட கமல் மேதாவித்தனம் காட்டி முறைக்கிறார். ஜூலியானா, கஞ்சா கருப்பு, ஆர்த்தி, சினேகன், காயத்ரி, ஓவியா எனப் பலரது பெயரைக் கேட்டு, படித்துக் காதுகளும், கண்களும் சிவந்து விட்டன. ஜி.எஸ்.டி. புண்ணியத்தால் புதுத் தமிழ்ப்படம் ஏதும் வராமல் […]
கர்நாடக இசை நிகழ்ச்சி

மினசோட்டா மாநிலத்தின் மேப்பிள்க்ரோவ் நகரில் அமைந்துள்ள ஹிந்து தேவாலயத்தில், ஜூன் மாதம் 10ஆம் திகதி கர்நாடக இசைக்கச்சேரி விமரிசையாக நடைபெற்றது. இதில், பிரபல கர்நாடக இசைக் கலைஞர்களான ஸ்ரீசாய் ஸ்ரீனிவாசன், ஸ்ரீ சங்கரன் நம்பூதிரி மற்றும் வயலின் வித்வான் பகல ஜெயப்பிரகாஷ், புல்லாங்குழல் வித்வான் கோ. நடராஜ் மற்றும் தவில் வித்வான் கணேஷன் கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில வாசகர்களின் பார்வைக்கு: – புகைப்படம்: இராஜேஷ் கோவிந்தராஜன்.
கவிதையாய் நீ ….!!

சேமித்த காதலின் சிதறல்களாய் நீ …. கண்ணீர்க் குவளைகளின் கதறல்களாய் நீ …. எண்ண ஓட்டத்தின் சிறகுகளாய் நீ …. நினைவு அலைகளின் சின்னமாய் நீ …. ஆசைக் கடலின் ஓடமாய் நீ … கனவு ஆலையின் உறைவிடமாய் நீ….. கற்பனை ஊற்றின் பிம்பமாய் நீ ….. என்றுமே எந்தன் காதலாய் நீ ….!! – உமையாள்
அ முதல் ஃ வரை …!

அ- அதிசயிக்க மறந்துவிட்டேன் அதிசயமே நீ என்பதால் ஆ- ஆர்ப்பரிக்க மறந்துவிட்டேன் அலைகடல் நீ என்பதால் இ- இரவை ரசிக்க மறந்துவிட்டேன் என் நிலவே நீ என்பதால் ஈ – ஈகை செய்ய மறந்து விட்டேன் ஈகையின் இருப்பிடம் நீ என்பதால் உ- உலகைக் காண மறந்துவிட்டேன் என் உலகமே நீ என்பதால் ஊ- ஊஞ்சலில் ஆட மறந்துவிட்டேன் என் தென்றல் நீ என்பதால் எ- எழுதுகோலைப் பிடிக்க மறந்துவிட்டேன் என் இறகு நீ என்பதால் ஏ- […]
23 வது கற்பாலக்கொண்டாட்டம் (Stone Arch Bridge Festival)

ஸ்டோன் ஆர்ச் ஃபெஸ்டிவல் என்பது மினியாப்பொலிஸ் நகரில் செயின்ட் ஆந்தனி நீர்வீழ்ச்சிக்கருகே மிசிசிப்பி ஆற்றைக் கடக்க உதவும் பண்டைய கற்பாலத்தில் கொண்டாடப்படும் கோடைக்கால விழாவாகும். இது வெள்ளிக் கிழமை ஜூன் 16இல் இருந்து ஞாயிற்றுக் கிழமை ஜூன் 18 வரை நடைபெற்றது. வானம் முகில் பிளந்து மழை பொழிவேன் என மிரட்டினும் மழையினால் கொண்டாட்டங்களிற்குப் பாதிப்பில்லை. இம்முறை மினசோட்டாக் கோடை வெய்யில் உக்கிரம் இல்லாமல் யாவும் இதமான கால நிலை விழாவாக அமைந்தது. இது மிசிசிப்பி […]
வொண்டர் வுமன் – திரை விமர்சனம்

மேற்கத்தியத் திரைப்படங்களில் அதிசய சக்தி வாய்ந்த ஹீரோக்களைப் படைப்பதில் மார்வெல் மற்றும் டீசி காமிக்ஸ் மிகப் பிரபலமான நிறுவனங்கள். டீசி காமிக்ஸின் படைப்பு தான் வொண்டர் வுமன். இந்தப் படத்தைப் பட்டி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார். மிஸ் இஸ்ரேல் பட்டம் வாங்கிய கால் கடாட் வொண்டர் வுமனாக நடித்துள்ளார். கதாபாத்திரத்துக்குப் பொருந்தும் வகையில் இருக்கிறார். இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வெற்றி கண்டுள்ளது. ஆண்கள் ஆதிக்கம் மிகுந்த அதிசய மனிதர்களில் தனக்கெனத் தனியிடம் பிடித்துள்ளார் வொண்டர் வுமன். சிலந்தி […]
மோகத்தைக் கொன்றுவிடு !!

ஆயிரம் படித்தும் ஆவது அறிந்தும்
ஆலயம் புகுந்தும் ஆன்மிகம் உணர்ந்தும்
ஆசையை மனதில் ஆறாது செய்வது
ஆண்களின் வாழ்வில் ஆகாத செயலோ?
காணுமிடம் எங்கெங்கும் கன்னியரின் கோலம்
காட்சிப் பிழையோ இல்லை கருத்துப்பிழையோ?
காலங் கடப்பினும் கருவளையம் தோன்றிடினும்
காமக் களிப்பது கருத்துவிட்டு அகலாததேனோ?