admin
admin's Latest Posts
மால் ஆஃப் அமெரிக்கா
மினசோட்டாவின் பெருமைகளில் ஒன்றான மால் ஆஃப் அமெரிக்காவிற்கு இது வெள்ளி விழா ஆண்டு. அப்படியென்ன பெருமை என்றால், அமெரிக்காவின் மிகப் பெரிய அங்காடி வளாகம் என்ற பெயரைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகச் சூடிக் கொண்டு நிற்கிறதே. மினியாபொலிஸ் வாசிகளுக்கு இந்த மால் மேல் எந்தளவு க்ரேஸ் இருக்கிறதோ தெரியாது, இங்கு வரும் வெளியூர் விருந்தினர்களுக்கு இதன் மேல் பெரும் ஆர்வம் இருக்கும். மினியாபொலிஸில் பார்க்க வேண்டிய இடங்கள் என்னும் லிஸ்டில் இது கண்டிப்பாக இருக்கும். இதன் […]
ஒரே ஒரு சந்திரன் ..
மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன். எத்தனை பேருக்கு இந்தப் பெயரில் இவரைத் தெரியுமோ, அறியேன். ஆனால் அந்தப் பிரபலமான மூன்றெழுத்தைத் தெரியாத, ஐம்பதுகளுக்குப் பின்னர், எண்பதுகளுக்கு முன்னர் பிறந்த தமிழர் கிடையாது என அடித்துச் சொல்லலாம். இவர் இறந்து முப்பதாண்டுகள் நிறைவுறும் தருவாயில் சிலர் இவர் இன்னமும் உயிருடன் இருப்பதாக வாதிட, சிலர் இவரைத் தெய்வமாக எண்ணி பூஜித்து வணங்கி வருகிறார்கள். அரசியல், சினிமா போன்ற துறைகளில் பலரது ஏற்ற, இறக்கங்களுக்கு இவர் காரணமாய் இருந்த போதிலும் அனைவரும் […]
நாங்கெல்லாம் அப்பவே அப்படி …
“ஏங்க, வித்யா ஹஸ்பெண்ட் டெபுடேஷன்ல சிகாகோ போறாராம். அவர் கிட்ட ‘திவான் அவென்யுலேர்ந்து’ ரெண்டு கிலோ உளுந்தும், கார அரிசியும் வாங்கிட்டு வரச் சொல்லுங்க. அவரா சொமந்துகிட்டு வரப் போறார்.. கார் தானே சொமக்கப்போது”. “சொன்ன ஒடனே திரும்பிப் பாக்காதீங்கோ.. பின்னாடி ப்ளு கலர் டி-ஷர்ட் போட்டுண்டு வராரே .. பாக்க நம்மவா மாதிரி தெரியறது .. பேச்சுக் கொடுத்துப் பாருங்கோ.” “அவன் ‘Straight from Bangladesh’ ன்னு டி-ஷர்ட் போட்டுருக்கானேடி” “இருந்துட்டு போறது […]
மினசோட்டா மாநிலம் பற்றிய குறுக்கெழுத்துப் புதிர்
இடமிருந்து வலம் மினசோட்டா மாநிலத்தின் அடையாள விளையாட்டு (Official game of Minnesota) (5) கடந்த வருடம் இறந்த மினசோட்டாவைச் சேர்ந்த புகழ்பெற்ற பாப் இசைப் பாடகர் ( 4) மினசோட்டாவின் மிகப் பழமையான முதல் நகரம். (3) மினசோட்டா மாநிலத்தின் செல்லப் பெயர்களில் இதுவும் ஒன்று. இப்பெயரில் மினசோட்டா பல்கலையின் ஃபுட்பால் குழு பன்மையில் உள்ளது (3) மினசோட்டா மாநிலத்துக்குக் கிழக்கே அமைந்துள்ள இம்மாநிலத்தை சுப்பீரியர் ஏரி பிரிக்கிறது. (4) மினசோட்டா மாநிலத்தின் பெரிய […]
மினியாப்பொலிஸ் அரங்கு அருகாமை உணவகங்கள்
மினியாப்பொலிஸ் நகர விருந்தாளிகள் மற்றும் தமிழ் விழாவிற்கு வரும் அன்பர்களும் யாவரும் இந்திய உணவை வேண்டினால் வான்பாதை இணைப்பு முலம் இலகுவாகச் சென்று அடையக் கூடிய உணவகங்கள்: 1 Dancing Ganesha 2 Bombay Bistro 820 S Marquette Ave, Minneapolis, MN 55402 (612) 312-2800 3 Kadai Indian Kitchen 601 S Marquette Ave #200, Minneapolis, MN 55402 (256) 472-2545 4 Bombay Palace 11 […]
கவிதைக்காக கவிதை
பரவசத்தில் தோன்றுமதைப் பற்பல எண்ணங்களோடு பக்குவமாய் ஒப்பிட்டு இயல்பாகவெழுதுவதே கவிதை! கவிதையென நினைத்து கனவில் தோன்றுவதையெலாம் யாருக்கும் புரியாமல் பாருக்குமொழிவதல்ல கவிதை..! முழுதும் படித்தாலும் முடிந்தவரை முயன்றாலும்-‑_ புரியாத கருத்தைப்பலர் அறியாதசந்தமென எழுதுகின்றார்..! அடுக்கான வார்த்தைகளை மிடுக்காக ஒன்றருகிலொன்றாக அள்ளியடுக்கி வைத்ததினாலன்றி அருங் கவிதையாகிவிடுமா?.. உலகிலில் அனைத்துக்குமோர் உருவமுண்டு…அதுபோல அகரமுதல எழுத்தனைத்துக்கும் அழகான கவிதைவடிவமுண்டு எதுகைமோனை நயத்தோடிசைபோல எளிதாய்விளங்கும் பொருளோடு சிந்தனைஊற்றில் பெருக்கெடுத்து சிறப்பாயெழுவதே கவிதையாகும் இயல்பாகவெழும் சிந்தனையோடு இறையருள் கொண்ட எழுத்தின் எழுச்சியேயொரு செந்தமிழ்க்கவிதையின் சிறப்பாகும்! […]
ரிது – பருவக்காலங்களின் கோர்வை
மினியாபொலிஸ் நகரில் ஜனவரி மாதத்தில் “ரிது (RITU) – பருவங்கள்” எனும் நாட்டிய நிகழ்ச்சி நடந்தேறியது. ரிது எனும் சம்ஸ்கிருத சொல், தெற்காசிய நாடுகளில்- குறிப்பாக இந்தியா, பங்களாதேஷ், நேபால், இலங்கை போன்ற நாடுகளில் நிலவும் ஆறு பருவகாலங்களைக் குறிப்பிடும் பதமாகும். இப்பருவக் காலங்களை வரிசைப்படுத்தி நான்காம் நூற்றாண்டில், காளிதாசரால் இயற்றப்பட்ட ரிது சம்ஹாரம் எனும் இலக்கியத்தின் அடிப்படையில் ‘கலா வந்தனம்’ எனும் பரதநாட்டியக் குழுவினர், நாட்டிய நிகழ்ச்சி ஒன்றை ஒருங்கிணைத்து அமைத்திருந்தனர். இந்நிகழ்ச்சி , […]
மினியாப்பொலிஸ் நகரத்தைச் சுற்றியுள்ள பார்வை இடங்கள்
மினியாப்பொலிஸ் நகரத்தில் இருந்து இலகு ரக ரயில் (light-rail), பேருந்து bus மூலம் சென்று பார்வையிடக் கூடிய இடங்கள் (1) DOWNTOWN ST. PAUL இலகு ரக ரயில் – GREEN LINE – ஐ 5ஆவது தெருவிலிருந்து . எடுத்துக்கொள்ளவும் (2) EAT STREET சுமார் 55 க்கும் மேற்பட்ட உணவகங்கள், நிகொலேட் அவென்யுவின் 20 குறுக்குத் தெருக்களில் காணப்படுகின்றன . இவ்விடம் போவதற்கு 3ஆவது அவென்யூ, 2 ஆவது அவென்யூவிலிருந்து பேருந்து எண்கள் 17 […]
தந்தையெனும் உறவு
செல்வமெனக் குழந்தை ஜனித்த பொழுதில் சொல்ல வார்த்தையின்றி உருகிய உள்ளம்! செல்லச்சேய் கரங்களில் தவழ்ந்த பொழுதில் மெல்லப் பூத்திட்ட விழிநீரில் பெருமிதம்! தந்தை எனும் பொறுப்புயர்வு அடைந்ததும் சிந்தை எலாம் குழந்தை நினைந்து நிந்தை எலாம் புறந்தள்ளி உழலும் விந்தை பலபுரிந்து நிற்கும் நற்சொந்தம்! தான் காணப் பெறாத உலகத்தை வான் ஏறித் தொடாத உச்சத்தை சான்றோனாய்த் தன் பிள்ளை அடைந்து மாண்புற வேண்டி ஏங்கும் நெஞ்சம். நடை பயின்ற தளிர் பருவத்தில் கடை விரல்பிடித்துப் […]







