admin
admin's Latest Posts
மினஹஹா நீர்வீழ்ச்சி (Minnehaha falls)
மின்னியாபொலிஸில் வாரயிறுதியில் குடும்பத்துடன் எங்குச் செல்வது என்று ரொம்பவும் குழம்ப வேண்டியதில்லை. மதிய உணவு தயார் செய்து கொண்டு எங்காவது ஒரு ஏரிக்கரையோரம் தஞ்சம் புகுந்து விடலாம். உட்கார்ந்து சாப்பிடுவதற்குத் தயார் நிலையில் மேஜை நாற்காலி, குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டுக் கருவிகள், பெரியவர்கள் நடமாட நடை பாதை எனச் சகல அம்சங்களும் இருக்கும். மினஹஹா நீர்வீழ்ச்சியும், அது அமைந்திருக்கும் மினஹஹா பூங்காவும் அருமையான நல்ல வாரயிறுதிப் புகலிடங்கள். மினியாபொலிஸ் நகருக்குள்ளேயே இருக்கும் சிறு நீர்வீழ்ச்சி இது. மினடோங்கா […]
கிறீன்லைன் – சிறிய மீ-கொங் (Little Mekong)
மினசோட்டா மாநிலத்திற்கு வருகை தரும் விருந்தாளிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் கிழக்காசிய – முக்கியமாக தாய்லாந்து, வியட்னாம், கம்போடிய – மலையகவாசிகளாகிய மங் (Hmong) மக்களையும், சீனாவையும் இணைக்கும் மீ-கொங் ஆற்றோர உணவுகளைப் பரிமாற வரவேற்கிறது செயிண்ட் பால் நகர சிறிய மீ-கொங் பகுதி. இந்தப்பகுதி ஃப்ராக் டவுன் (Frogtown) என்றும் அபிமானிகளால் அழைக்கப்படுகிறது. எச்சில் ஊறும் பல்வகை கிழக்காசிய உணவகங்கள் பல்கலைக்கழக வீதி (University Avenue), குறுக்கு வீதிகள், வடக்கு டேல் (Dale North st.) […]
கர்மா….
”ஏன்னா, நம்ம ஷாலு சொல்றதக் கேட்டேளா?” சோஃபாவில் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்த கணவனிடம் காஃபியைக் கையில் கொடுத்துக் கொண்டே, கேட்டாள் சாரதா. “எதப்பத்தி சொல்றே?” அவளின் கேள்வியில் பெருமளவு ஆர்வம் காட்டாமல், டி.வி.யில் ஓடிக் கொண்டிருந்த செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் பிரேம். “அதான்னா… நேத்து எனக்கும் அவளுக்கும் பெரிய சண்டை… நான் சொன்னாக்கா, கேக்க மாட்டான்னு தோண்றது.. நீங்க கொஞ்சம் பேசிப் பாருங்கோளேன்.”` “என்னம்மா பிரச்சனை? நம்மதான் அவ்வளவு பேசினோமே, இன்னுமென்ன… நீயுந்தான் அவளோட சாய்ஸ்க்கு […]
கிராமத்துக் காதல் ….!!
ஏருபுடிச்ச மச்சானே ! மனசுல காதலை வெதைச்சவரே ! இந்தப் பூங்குயிலை ஏரெடுத்துப் பார்த்திடுங்க … பொத்தி வெச்ச ஆசையிங்கே அருவியா கொட்டு்துங்க…. ஒங்க நெனப்பில் மச்சானே துவச்ச துணியைத் தான் துவச்சேனே… இதுதான் சாக்குன்னு …என்னாத்தா வாயார திட்டித்தீர்த்தாளே … புத்தி பேதலிச்சுப் போச்சுன்னு சொன்னாளே… பேதலிச்சது புத்தியா? மனசா ? எல்லாமறிஞ்ச மச்சானே சட்டுனுதான் சொல்லிடுங்க … வெரசா வாரேனு சொல்லிப் போனீக வருசம் மூணாச்சு ! எங்கழுத்தில் தாலி ஒன்னைக் கட்டிடுங்க குலசாமியா […]
மரபிசைக் கலைஞர்களுடன் ஒரு சந்திப்பு – பாகம் 1
மினசோட்டா தமிழ்ச்சங்கத்தினர், தமிழ் மரபு கலைகளைப் போற்றும் விதத்தில் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழர் இசையான நாதஸ்வரம், தவில் மற்றும் பறையிசையை இங்குள்ளவர்கள் பயிலும் வண்ணம் தமிழகத்திலிருந்து இவ்விசைக் கலைஞர்களை வரவழைத்துள்ளனர். திரு. ராமச்சந்திரன், நாதஸ்வர இசையிலும், திரு. சிலம்பரசன் தவில் இசைப்பதிலும், திரு. சக்தி பறையிசையிலும் மிகுந்த தேர்ச்சிப் பெற்றவர்கள். கடந்த சில வாரங்களாக இவர்கள், மினசோட்டாவில் பயிற்சிப் பட்டறையை நடத்தி வருகின்றனர். பனிப்பூக்கள் சார்பில் இக்கலைஞர்களுடன் ஒரு நேர்முக […]
நிச்சயமாய் வந்துசேரும் !!
வானில் பறக்கும் விஞ்ஞானிக்கும் வனத்தில் திரியும் மெய்ஞ்ஞானிக்கும் தானில் என்றலையும் தருக்கருக்கும் தனக்கென ஒன்றிலாத் தவமுனிக்கும் ஆலயம் வழிபடும் அன்பருக்கும் அங்கொன்றும் இலையெனும் அனைவருக்கும் பாலமாய்ச் செயல்படும் பண்பாளருக்கும் பலமாய் வெடிவைத்தே தகர்ப்போருக்கும் நாட்பல கடந்திடினும் நினைப்போருக்கும் நன்றியில் பழையதை மறப்போருக்கும் சீரிய வாழ்வினில் திளைப்போருக்கும் சிரிப்பது போதுமென்று இருப்போருக்கும் வாழிய எனப்பாடும் நல்லவருக்கும் வளமெண்ணிப் பொறையுறும் அல்லவருக்கும் மாளாமல் செல்வங்கள் சேர்த்தோருக்கும் மகவுக்குப் பாலில்லா வறியவருக்கும் காலங்கள் கடந்திட்ட முதியோருக்கும் கட்டுடல் மாறிடாக் காளையருக்கும் மாறாமல் […]
வயலின் மேதை திரு. வி.வி.முராரி அவர்களின் இசை மழை
கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள், மினசோட்டா மாநிலம், மெடினா நகரிலுள்ள தேவுலப்பள்ளி இல்லத்தில் வயலின் மேதை திரு. வி.வி. முராரி அவர்களின் வயலின் இசை மழை பொழிந்தது. கர்நாடக இசை மும்மூர்த்திகளின் ஒருவரான திரு. முத்துஸ்வாமி தீஷிதரின் “சித்தி விநாயகம்” கீர்த்தனையோடு களை கட்டியது கச்சேரி. தனது துரிதமான நடையினாலும் அபரிதமான மேல் கால ஸ்வரங்களுடன் கூடிய ஆலாபனையோடு “ஷண்முகப்ரியா” ராகத்தில் ரசிகர்களைக் குதூகலத்துடன் வரவேற்றார் வித்வான் முராரி, இதைத் தொடர்ந்து வந்தது நாத […]
பாதுகாப்பான நீச்சல் முறைகள்
வட அமெரிக்காவில் கோடைகாலம் தொடங்கிவிட்டது. இனிக் குழந்தைகளும் பெரியவர்களும் குதூகலமாகப் பொழுது போக்கும் ஒரிடம் நீச்சல் குளங்கள். குறிப்பாக மினசோட்டா, மிச்சிகன், விஸ்கான்சின் மாநிலங்களிலும், ஒன்ராரியோ மாகாணத்திலும் ஏரிகள் ஆறுகள் பலவுண்டு. இங்கெல்லாம் விரைவில் கூட்டம் நிரம்பி வழியும். நீச்சல் சிறந்த பொழுதுபோக்கு மட்டுமல்லாது உடல் நலம் பேணும் சிறந்த பயிற்சியாகவும் அறியப்படுகிறது. எனினும் மற்ற விளையாட்டு, உடற்பயிற்சியை விட நீச்சல் சற்று அபாயகரமானது. எனவே நீச்சலில் பாதுகாப்பாக ஈடுபடுதல் அவசியம். குழந்தைகளும், சிறுவர்களும் குளத்து நீரில் […]







