admin
admin's Latest Posts
சொற்சதுக்கம் 7
கீழே கட்டத்துக்குள் இருக்கும் ஒன்பது எழுத்துக்களைக் கொண்டு சொற்களை உருவாக்குங்கள். சொற்கள் இரண்டெழுத்தாகவோ அல்லது அதற்கு மேற்பட்டதாகவோ இருக்கலாம். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். இருபது சொற்களுக்கு மேல் உருவாக்கினால் நீங்களே உங்களுக்கு தமிழ்ப் புலி என்ற பட்டமளித்துக் கொள்ளலாம். விடைகள்
சொற்சதுக்கம் – விடைகள்
ஆ தவம் தடம் ஆல் கல் தபால் ஆவல் கடம் கவளம் பாடல் வடம் தடகளம் பாகம் வளம் ஆடல் பால் களம் கடகம் பாடம் வடகம் ஆதவம் தளம் தகவல் பாகவதம் பாளம் பாதகம் வதம் பாவம் பாதம் வடல்
நிலாவில் உலாவும் மான் விழியே
கலையழகு மிக்க கயல்விழியே குலையாத காதல் கொண்டேன் அழகியே நிலையாக வாராமல் ஓடி ஒளிவதேன் அலையாக வந்து மோதிச் செல்கிறாய்! தேடவே கிடைக்கா தெள்ளமுதே நாடவே செய்திடும் உன் அழகு கோடான கோடி மக்களின் பேரழகி! பாடவே வைக்கிறாய் கவிஎழுதி! நிலாவில் உலாவும் மான் விழியே நிம்மதி தேடி அலைய வைக்காதே நினைவிலும் கனவிலும் உன் முகமே நிறைந்திடும் நீவந்தால் என் அகமே! கருகான பயிர்போல் நான் வாடுறேன் உருகாத மனம்போல் நீ நடிக்கிறாய் அர்த்தமற்ற […]
எதிர்பாராதது…!? (பாகம் 3)
( * பாகம் 2 * ) அப்பா தனக்கு இப்போதைக்குக் கல்யாணம் பண்ணி வைக்க மாட்டார் என்று உறுதியாய் அறிவாள் கல்பனா. அம்மா பவானிதான் அரித்தெடுக்கிறாள். பஞ்சாபகேசன் அசைவதாயில்லை. “உனக்கு ஒண்ணும் தெரியாதுடி….நாம என்ன ஆம்பிளைப் பிள்ளையா பெத்து வச்சிருக்கோம்…ஒரு பொண்ணுதானே இருக்கு…. உனக்கும் எனக்கும் பென்ஷனா வருது? ஏதோ வியாபாரத்தைப் பார்த்தேன்…. காலத்தை ஓட்டினேன். கஷ்டப்பட்டு ஒரு பொண்ணைப் படிக்க வச்சிட்டேன்… என் தங்கச்சி லலிதா இருந்தா… அவ வேலைக்குப் போனதால கூடக் கொஞ்சம் […]
கோடை மழை
மூணு மணிக்கெல்லாம் இருட்டிட்டு வந்தது. இன்னும் செத்த நேரத்துக்கெல்லாம் மழை புடி புடினு புடிக்கப்போவுது. கல்லு வீட்டு மாடியில் காயவைத்திருந்த சோத்து வத்தலை அதைப் பிழிந்து வைத்திருந்த புடவையோடு சுருட்டிக் கொண்டு ஓடி வந்து வீட்டில் ஒரு அறையின் மூலையில் வைத்துவிட்டு திரும்புகையில் மின்சாரம் போனது. “புடுங்கிட்டான் கரண்டை.. இனி எப்ப வருமோ..?” -அம்மா “இடியும் மின்னலுமா இருக்குன்னு நிறுத்தி இருப்பான்.. மழை விட்டொடனே குடுத்திடுவான்”.- அப்பா. “தோட்டத்துல கிடக்குற அந்த காஞ்ச செராவை (சிறியதாக பிளக்கபட்ட […]
எதிர்பாராதது – பாகம் 2
* பாகம் 1 * தொலைபேசி மணி அடித்தது. ரிங் டோனை வைத்து அது கங்காவின் செல் என்று அறிந்து பேசாமல் இருந்தார் தாமோதரன். அவளுக்கு ஃபோன் வந்தால் அவர் போய் எடுக்க மாட்டார். அவளே வந்து எடுக்கட்டும் என்று இருந்து விடுவார். அதுபோல் அவருக்கு ஃபோன் வந்தால் அவளும் போய் எடுப்பதில்லை. அடித்து ஓயட்டும், நமக்கென்ன என்று விட்டுவிடுவாள். இப்போது மணி அடித்துக் கொண்டேயிருந்தது. நிற்கிறவரை அடிக்கட்டும்…எனக்கென்ன? என்று உட்கார்ந்திருந்தார். அவள் எங்கே என்ற […]
தீரன் அதிகாரம் ஒன்று
விதவிதமான போலீஸ் கதைகள் பார்த்திருக்கிறோம். முழுக்க சினிமாத்தனமான போலீஸ் கதைகள், தினசரிக் குற்றங்களைப் பதிவு செய்த கதைகள், பிரபலக் கொலை வழக்குகள் சார்ந்த கதைகள் என வந்துகொண்டே தான் இருக்கின்றன. போலீஸ் கதை என்றால் நன்றாகக் கதை விடலாம் என்ற அதிகாரம் இயக்குனர்களுக்கு வந்துவிடும். அதிலும் தெரிந்த உண்மைக் கதைகள் என்றால் அதைப் பார்ப்பதில் ரசிகர்களுக்கும் ஒரு ஆர்வம் வந்துவிடும். தொண்ணூறுகளில் இந்த ஜானரில் செல்வமணி நட்சத்திர இயக்குனராக மிளிர்ந்தார். புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் ஆகிய […]
பக்த விஜயம்
ஒவ்வொரு யுகங்களுக்கும் ஒவ்வொரு பக்தி முறை உண்டென்பது சாஸ்திரம் வகுத்த விதிமுறை. அந்த வழியே கலியுகத்தில் இறைவனை உணர நாம சங்கீர்த்தனம் மட்டுமே போதுமானது. கலியின் ப்ரவாகத்தில் கரை சேர வழி உண்டென்றால் அது நாம சங்கீர்த்தனம் என்ற கயிறே. “சங்கீத ஞானமு பக்தி வினா” என்று த்யாகப்ரஹ்மமும், “காயன பாடிதவா ஹரி மூர்த்தி நோடிதவா ” என்ற புரந்தர தாஸரின் பாடல் வரிகளும் மனதில் வந்து போயின. ‘க்ளோபல் ஆர்கனைசேஷன் ஆஃப் டிவினிட்டி மினசோட்டா’ (Global […]
வாய்ப்புகள் திரும்புவதில்லை
நூறாவது தடவையாக திலகவதி கதிர் கூறிய வார்த்தைகளை நினைவுபடுத்திக் கொண்டாள். சுற்றி வளைத்துப் பேசினாலும் கடைசியில் அவன் பேசிய மொத்தப் பேச்சின் அடக்கமும் அந்த ஒரு வாக்கியத்தில்தான் முடிவு பெற்றது. ‘நல்ல நண்பர்களாக இருக்கும் நாம் ஏன் கணவன்-மனைவியாகக் கூடாது?’ என்ன துணிச்சல்? என்ன ஒரு துரோகம்? திலகவதி ஒரு அறிவுஜீவி. தான் படிக்கும் இரசாயனப் பாடம்தான் அவளது முதல் காதல். அதில் முனைவர் பட்டம் பெற்று மேல் படிப்புக்கு வெளிநாட்டுப் பல்கலையில் நுழைய வேண்டும் என்பதுதான் […]







