admin
admin's Latest Posts
எதிர்பாராதது – பாகம் 2

* பாகம் 1 * தொலைபேசி மணி அடித்தது. ரிங் டோனை வைத்து அது கங்காவின் செல் என்று அறிந்து பேசாமல் இருந்தார் தாமோதரன். அவளுக்கு ஃபோன் வந்தால் அவர் போய் எடுக்க மாட்டார். அவளே வந்து எடுக்கட்டும் என்று இருந்து விடுவார். அதுபோல் அவருக்கு ஃபோன் வந்தால் அவளும் போய் எடுப்பதில்லை. அடித்து ஓயட்டும், நமக்கென்ன என்று விட்டுவிடுவாள். இப்போது மணி அடித்துக் கொண்டேயிருந்தது. நிற்கிறவரை அடிக்கட்டும்…எனக்கென்ன? என்று உட்கார்ந்திருந்தார். அவள் எங்கே என்ற […]
தீரன் அதிகாரம் ஒன்று

விதவிதமான போலீஸ் கதைகள் பார்த்திருக்கிறோம். முழுக்க சினிமாத்தனமான போலீஸ் கதைகள், தினசரிக் குற்றங்களைப் பதிவு செய்த கதைகள், பிரபலக் கொலை வழக்குகள் சார்ந்த கதைகள் என வந்துகொண்டே தான் இருக்கின்றன. போலீஸ் கதை என்றால் நன்றாகக் கதை விடலாம் என்ற அதிகாரம் இயக்குனர்களுக்கு வந்துவிடும். அதிலும் தெரிந்த உண்மைக் கதைகள் என்றால் அதைப் பார்ப்பதில் ரசிகர்களுக்கும் ஒரு ஆர்வம் வந்துவிடும். தொண்ணூறுகளில் இந்த ஜானரில் செல்வமணி நட்சத்திர இயக்குனராக மிளிர்ந்தார். புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் ஆகிய […]
பக்த விஜயம்

ஒவ்வொரு யுகங்களுக்கும் ஒவ்வொரு பக்தி முறை உண்டென்பது சாஸ்திரம் வகுத்த விதிமுறை. அந்த வழியே கலியுகத்தில் இறைவனை உணர நாம சங்கீர்த்தனம் மட்டுமே போதுமானது. கலியின் ப்ரவாகத்தில் கரை சேர வழி உண்டென்றால் அது நாம சங்கீர்த்தனம் என்ற கயிறே. “சங்கீத ஞானமு பக்தி வினா” என்று த்யாகப்ரஹ்மமும், “காயன பாடிதவா ஹரி மூர்த்தி நோடிதவா ” என்ற புரந்தர தாஸரின் பாடல் வரிகளும் மனதில் வந்து போயின. ‘க்ளோபல் ஆர்கனைசேஷன் ஆஃப் டிவினிட்டி மினசோட்டா’ (Global […]
வாய்ப்புகள் திரும்புவதில்லை

நூறாவது தடவையாக திலகவதி கதிர் கூறிய வார்த்தைகளை நினைவுபடுத்திக் கொண்டாள். சுற்றி வளைத்துப் பேசினாலும் கடைசியில் அவன் பேசிய மொத்தப் பேச்சின் அடக்கமும் அந்த ஒரு வாக்கியத்தில்தான் முடிவு பெற்றது. ‘நல்ல நண்பர்களாக இருக்கும் நாம் ஏன் கணவன்-மனைவியாகக் கூடாது?’ என்ன துணிச்சல்? என்ன ஒரு துரோகம்? திலகவதி ஒரு அறிவுஜீவி. தான் படிக்கும் இரசாயனப் பாடம்தான் அவளது முதல் காதல். அதில் முனைவர் பட்டம் பெற்று மேல் படிப்புக்கு வெளிநாட்டுப் பல்கலையில் நுழைய வேண்டும் என்பதுதான் […]
ஒற்றைப் பார்வையால் ….!!

வைகறைப் பொழுதினில் ஜன்னலிடை நுழைந்து எனை இழுக்கும் காலைக் கதிரவனின் கண்கூடக் கூசும் ஒரு நிமிடம் உந்தன் ஒற்றைப் பார்வையால் …..! அதிகாலை உறைபனியில் புல்நுனியில் படர்ந்திருந்த பனித்துளியாய் எனை என்னுள் உறைய வைத்தாயே உந்தன் ஒற்றைப் பார்வையால் …! யாமத்தைக் கூட்டவே கனவினில் புன்னகையைத் தெளித்தே பூக்கோலமிட்டு பல வண்ணங்களை என்னுள் தீட்டினாயே உந்தன் ஒற்றைப் பார்வையால் …! மழையின் ஸ்பரிசத்தை நடுநிசியில் அறிந்திட மின்சாரத்தை என்னுள் பாய்ச்சியே தென்றலின் தீண்டலைத் தந்தாயே உந்தன் ஒற்றைப் […]
கறுப்பு வெள்ளி ( Black Friday ) பதினேழு பாங்கான பரிகாரம்

“கறுப்பு வெள்ளி” எனப்படும் வர்த்தக விழுபடிச் சலுகை நாள் அமெரிக்க இணைதள வியாபாரிகளை இவ்வருடம் இன்புற வைத்துள்ளதாம். நுகர்வோர் பலரும் தமது கைத்தொலைபேசிகள் மூலமே பல்வேறு பண்டங்களையும் பெரும் விழுபடி (deep discount) உடன் வாங்கிப் புதிய சாதனையை உண்டாக்கியுள்ளனராம். இது வருடம் முழுவதும் ஆயுத்தமாகி ஆவலோடு எதிர்பார்த்திருந்த வர்த்தரர்களுக்கு இறுதியாண்டில் வரவுள்ள பரிகாரம் என்கிறது “ரயிட்டேர்ஸ்” செய்திதாபனம். இதுவரை சேகரிக்கப்பட்ட தரவு தகவல்களின் படி “சாமரின்” சில்லறை வியாபாரிகள் இணைதள விற்பனைகளில் $7.9 பில்லியன் வருமானத்தை […]
கந்துவட்டி

அசல் பெற்ற பிள்ளையா? அசலின் நகலா? வட்டி! தனிவட்டி கூட்டுவட்டி தெரியாதவனுக்கு கந்துவட்டிக் கணக்கு யார் சொல்லிக் கொடுத்தது? கந்துவட்டி எண்ணெயில் கொப்பளிக்கிறது ஏழைகளின் உடல்கள்! வட்டியில் பிழைப்பவர்களே! நீங்கள் சம்பாதிப்பது பணத்தையல்ல… பாவத்தை! பல ஏழைகளின் உடல்களை எரித்துத் தின்கிறது உங்கள் குடல்கள்! வட்டிமேலே வட்டி போட்டு கழுத்தை இறுக்கும் கந்துவட்டிக் கயிறு… பல தாலிகளைத் திரித்து உருவான கயிறு! மஞ்சள் கயிறு நிறம்மாறிப் போகுது! ஏழைகளின் அழுகையைக் குடித்துக் குடித்து தினம் வாழுது! ஏதுமில்லா […]
மாயாஜால உலகம்

இருபது, முப்பது வருஷங்களுக்கு முன்பு வாழ்க்கை என்பது எப்படி இருந்தது? எழுவோம், தயாராவோம், பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கோ, கடைக்கோ செல்வோம், வீடு திரும்புவோம், இடையில் சாப்பிடுவோம், உறங்குவோம். கரண்ட் பில் கட்டுவதற்கு லைன், ரயில் டிக்கெட் எடுப்பதற்கு லைன், சினிமா டிக்கெட் எடுப்பதற்கு லைன். சாயங்கால வேளைகளில் தெருவில் ஆங்காங்கே நின்று பேசிக் கொண்டிருப்போம். இன்று? வாழ்க்கை எவ்வளவு மாற்றம் கண்டுள்ளது? நிற்க. எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம் என்று புலம்பும் கட்டுரை அல்ல இது. […]
கேள்வி

ஒரு கேள்வி.. பூமி எங்கும் குளிர் பரப்பி, வெளிச்சத்திற்காக மட்டும் சுடாத சூரியனை எழுப்பி, விடிந்திருக்கிறது இந்த நாள். தன் வாழ்வின் இறுதி நாளை வண்ணங்கள் பரப்பிக் கொண்டாடிவிட்டு, நளினமாகக் காற்றில் ஆடி, விழுதலை வெற்றியாக்கி, நிலத்தை அடைகிறது ஒரு பழுத்த இலை.. மரத்திலிருந்து நிலம் பார்த்த இலை, இப்பொழுது நிலத்தில் இருந்து மரம் பார்க்கிறது. உறவல்ல.., பிரிவு உணர்த்தும் பிரம்மாண்டம்… சருகிடம் அந்த மரம் கேட்கும் ஒரு கேள்வி அதனை மீண்டும் இலையாக்கும். அந்தக் கேள்விக்காக […]