admin
admin's Latest Posts
மால் ஒஃப் அமெரிக்காவில் ஹாலோவீன் கொண்டாட்டம்

மின்னியாபொலிஸ் நகரில் உள்ள மிகப்பெரிய மால் ஒஃப் அமெரிக்காவில் ஹாலோவீன் கொண்டாட்டம் நடைப்பெற்றது. -சரவணகுமரன்
வீடற்ற மனிதர்கள் யாம்

வீடற்ற மனிதர்கள் யாம் வீணாகிப் போனோமே வீடேறும் காலம் வரை வீதியிலே வாழ்வோமே விதியாலே நொருங்கி நின்றோம் வித்தையெல்லாம் மறந்து நொந்தோம் வீராப்பு, விறல் எல்லாம் விரைவாக களைந்து நின்றோம் விலங்கு போலே நடத்திடுவார் விரைந்து எம்மை கடந்திடுவார் விரல் பட யோசிப்பார் விலக்கி வைக்க முயன்றிடுவார் வீடற்ற மனிதர்கள் யாம் வீணாகி போனோமே வீடேறும் காலம் வரை வீதியிலே வாழ்வோமே வினா ஒன்று கேட்கின்றேன் விளக்கிடுவீர் விடை தெரிந்தால் […]
மரம்கொத்திப் பறவை

கொத்திக் கொத்தி நீ யெழுப்பு மோசைகூட புத்திக்கு இதமாய் இசையாய் யமைந்ததுவோ சங்கேத ஒலியிலுன் சகாக்களுடன் நீகுலவும் சங்கீதக் காதல் மொழிக்கொரு சான்றாகுமாம் கூரிய மூக்கால் முட்டி மரப்பட்டை யுரிக்கும்போது வீறியெழும் வேகமுடன் குத்தியெழும் ஒலிதான் இசைவடிவம் தருகின்ற எதிரொலியா யெங்கும் விசையுடன் வெளியே வெகுவாய்க் கேட்குமாம் இலைகளும் பூக்களுமுன் இன்னிசை கேட்டு இசைந்தினிதே ஆடும் – மரமெல்லாம் தாளமிடும் மரமீதில் அமர்ந்தாடித் தலையசைத் தாடுமழகேயது மாபாரதத்தின் பெருமை சொல்லும் பரதமாகும் மரங்களை […]
மாலைப் பொழுதில் மயக்கும் சப்தஸ்வரங்கள்

உடல், பொருள், நாடி, நரம்பு, ஆன்மா அனைத்தும் சங்கீதம் பற்றிய நினைப்போடு துடிக்க வேண்டும் என்றால் நீங்கள் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சிக்கு வந்திருக்க வேண்டும். “Sapthswarangal a evening of musical enchantment ” என்ற தலைப்புக்கு ஏற்ற வாறு ஒரு “ இசையால் மந்திரித்த” மாலைப் பொழுது. கச்சேரியின் முதல் வர்ணமாக “Cool” ராகமாக ஆரம்பித்த பெஹாக் “வனஜாக்ஷி ” காதுகளில் தேன் போல் வந்தது. கம்பீரமாக வந்த “அடாணா” வில் “ஸ்ரீ மஹாகணபதி” களை கட்டியது. […]
ஹாலோவீன்

ஆதவன் சற்றே இளைப்பாற அந்திமம் சற்றே பவனி வர விருந்தா வித்தையா என அறிந்தும் அறியாமலே விந்தையாய் கேள்விதனைக் கேட்டபடி உலாவரும் குழந்தைகளை மகிழ்விக்க அக்டோபரில் வந்த ஹாலோவீனே இன்முகத்தை முகமூடிக்குள் மறைத்தே இடையினில் மந்திரக்கோலைக் கொண்டே விந்தைபல காட்டி வியக்கச் செய்தே இனிப்புகளை அள்ளிச் சென்ற ஹாரிபார்டரையும் அறிந்தும் அறியாமலே சாகசமாய் எண்ணி மகிழ்வித்த ஹாலோவீனே இல்லாத ஆவியையும் பிசாசையும் இன்பமாய் கொண்டாடி மகிழவே காண்பவருக்கு பயத்தினையும் அணிபவருக்கு இன்பத்தையும் […]
இரவல் சொர்க்கம்

‘ஓர் உயிரைக் காப்பாற்ற இன்னோர் உயிரைப் பறித்தது முறைதானா?’ ‘பிள்ளையைக் காக்க கணவருக்கு முடிவளித்தது சரியா?’ ‘வாழ்வில் இனி எனக்கு நிம்மதி கிட்டுமா?’ கத்தியின்றி இரத்தமின்றி கேள்விகளாலேயே ரணமாக்கும் வல்லமைகொண்ட வக்கீலான மனசாட்சியிடமிருந்து தப்ப முடியாது தவித்துக்கொண்டிருந்தாள் ஆதிரை. கேள்விகள்…. கேள்விகள்…. விடாது துரத்தும் கேள்விகள்… எங்கே ஓடுவாள் ஆதிரை? ஓடத்தான் முடியுமா? கடந்த ஆறுமாதத்திற்கு மேலாக ஓடி ஓடியே உருத்தெரியாது போய்விட்டாளே! இனியும் ஓடுவதில் அர்த்தமில்லை எனும் நிலையில் சுருண்டு விழுந்தவளுக்கு, அந்த ஆயாசம்கூட […]
நாமும் நமது மினசோட்டாச் சூழலும்

வாருங்கள் நாம் ஒரு சூற்றாடல் சாகச ஆய்விற்குச் செல்வோம். நாம் மினசோட்டா மாநிலத்தில் வசிப்பவர்கள் என்றால் எமக்கு இவ்விட ஏரிகள், பூங்காக்கள் பற்றி ஓரளவு தெரிந்திருக்கும். இனி இதை சற்று விபரமாக அறிந்து கொள்வோம். நீங்கள் மினசோட்டா மாநிலத்தில் எங்கு வாழ்ந்தாலும் ஒரு இயற்கைப் பூங்கா உங்கள் அருகில் இருக்கும். நமது மாநிலத்தில் 67 பூங்காக்கள் உண்டு. அதேசமயம் உல்லாசமாக 62 கூடாரம் போட்டு சமைத்துச் சாப்பிட, ஏரிகள் ஆறுகளில் நீந்தி விளையாட எமக்கு வசதிகளும் உண்டு. […]
சாதல் வைபோகமே!

அமெரிக்கா வந்த புதிதில், வியப்புக்குண்டாக்கிய அமெரிக்கர்களின் நடவடிக்கைகளில், இந்த ஹாலோவீன் (Halloween) கொண்டாட்டமும் ஒன்றாக இருந்தது. அதுவரை விழா என்பதும், கொண்டாட்டம் என்பதும் மங்களகரமான அம்சமாகவே பார்த்த எனக்கு, இந்தப் பேய்த்தனமான கொண்டாட்டம் வியப்பு அளித்ததில் எந்த வியப்பும் இல்லை. ஆங்காங்கே பேய் வீடு செட் போடுவார்கள். பேய் கெட்டப்புடன் சுற்றுவார்கள். கடைகளில் எலும்புக்கூடு, ரத்தக் காட்டேரி பொம்மைகள் விற்பார்கள். இப்படி இவர்களது செய்கைகள், பேய்களை ரொம்பவும் காமெடி பீசுகளாகக் காட்டுவதாக இருக்கும். நம்மூரில் பேய்களை வைத்து […]