admin
admin's Latest Posts
சுகமான தீபாவளி

”ஏன்னா… நான் சொன்னேனே.. ஜிலேபி ரெட் வாங்கிண்டு வந்தேளா?” மங்களம் மாமியின் கேள்வி தொடங்கியது. “நீ சொன்ன எல்லாம் வாங்கிண்டு வந்துட்டேண்டி.. அது ஒண்ணு தவிர… கடைக்காரா யாருக்கும் ரெட்டுனா என்னன்னே தெரியலடி… அது தமிழ் வார்த்தைதானா?” ஒரு சாதாரணத் துணிக்கு பதினைந்து ரூபாய் தர வேண்டுமா என்ற எண்ணத்தில் விட்டுவிட்டு வந்து, அதைச் சமாளிப்பதற்காக இழுத்தார் சுந்தரம் மாமா. “ஆமா.. உங்களுக்கு ஒண்ணு வாங்கிண்டு வர சாமர்த்தியமில்லன்னா, நேக்குத் தெரியாதுன்னு சொல்லிடுங்கோ… ஜிலேபி ரெட்டு தெரியாதவா […]
அஹிம்சை தினம் 2017

மினசோட்டா மாநிலத்தில், இந்திய அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா மஹாத்மா காந்தியின் பிறந்த தினத்தை ஒட்டி, அக்டோபர் மாதம் 12ஆம் திகதி. அஹிம்சை தினம் (NON-VIOLENCE DAY) கொண்டாடினர். சென்ற ஆண்டைத் தொடர்ந்து, இரண்டாம் முறையாக் கொண்டாடப்பட்ட இந்த தினம், மினசோட்டா மாநிலத்தின் தலை நகரக் கட்டிட அரங்கில் நடைபெற்றது. புருஷ் கோரி இந்திய மினசோட்டா அசோசியேஷன் சார்பில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழக்கினார். மினசோட்டா கவர்னர் மார்க் டேட்டன் கையெழுத்திட்ட, மாநிலச் சான்றிதழ் வழங்கப்பட்டு இந்திய அசோசியேஷன் […]
ஆப்பிள் டோநட் பணியாரம்

வட அமெரிக்காவில் இலையுதிர் காலம் வந்து விட்டது. இதனால் இவ்விடம் இலை தழைகள் நிறம் மாறுவது ஒரு புறம்; சுவையான பழ அறுவடைகள் மறுபுறம். தமிழர் பிறந்த நிலங்களில் கறுவாப்பட்டை, ஏலக்காய் வாசம் இயல்பாகவே உள்ளது. ஆயினும், அமெரிக்காவுக்கு வருகை தந்த ஐரோப்பியக் குடிகள் கொண்டுவந்து அறிமுகப்படுத்திய ஆப்பிள் பழச் சோலைகளின் பாரம்பரியமோ தனி வகை. மென்மையான ஆப்பிள் பழ நறுமணம் கறுவாப்பட்டையுடன் கலந்து மூக்கை மொய்த்து வயிற்றையும் நாக்கையும் ஊற வைக்கும் வாசம், வட அமெரிக்காவில் […]
ஹாலோவீன் கார்த்திகை கவர்ச்சி விளக்குகள்

ஊருசனம் ஓய்ந்திருக்கு; ஊதல் காற்றும் அடிச்சிருக்கு. வெட்ப தட்ப மாற்றம் வழமை போல் வருகிறது வட அமெரிக்காவிற்கு. பகலவனாகிய சூரியன் பருவகாலம் தொட்டுப் பதுங்குகையிலும் பாங்காக வருகிறாள் இயற்கையன்னை. இலையுதிர்காலத்தை , அவள் தன் இயல் வண்ணத் தூரிகைகளுடன் வரைகிறாள். பனிப்பூக்கள் எழுத்தாளர் சரவணக்குமரன் அவரது வர்ணஜாலக் கட்டுரையில் வர்ணித்தது போல் மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, செவ்வூதா நிறங்கள் வட அமெரிக்கக் காடுகள், மேடுகள், ஏரிக்கரைகள், ஆற்றோரங்கள் என அனைத்தையும் எழிலோடு மின்ன வைக்கின்றன. இயற்கையன்னை […]
வீரத்துறவி சுப்பிரமணிய சிவா

Courtesy: Wikipedia.org அக்டோபர் மாதம் இந்திய சுதந்திரத்திற்கும், நாட்டின் மேம்பாட்டிற்கும் ஒரு பெரிய புண்ணிய காலம் என்றே சொல்ல வேண்டும். இந்திய நாட்டிற்காகச் சேவை புரிந்த ஒப்புயர்வற்ற பலர் உதித்த சிறந்த மாதம் இதுவென்றே தோன்றுகிறது. அண்ணல் காந்தியடிகள் அக்டோபர் இரண்டாம் நாள் உதித்தது உலகம் அறிந்த ஒன்று. பெருந்தலைவர் என்றும், கர்ம வீரர் என்றும் போற்றப்பட்ட காமாராஜரின் நினைவு நாளும் இந்த இரண்டாம் திகதியே. இவர்களிருவர் தவிர, சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பிரதமராகப் பதவி வகித்து, […]
பண்டிகைகள் – அங்கேயும் இங்கேயும்

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கலாச்சாரம் உள்ளது. அதற்கேற்ப வழிபாடுகள், தெய்வங்கள், பண்டிகைகள் போன்றவை வேறுபடும். ஆனால், யோசித்துப் பார்த்தால் இந்தப் பண்டிகைகளிடையே சில ஒற்றுமைகளைக் கவனிக்கலாம். ஹாலோவீன் (Halloween) – ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் கொண்டாடப்பட்டு வந்த இந்தப் பண்டிகை, தற்சமயம் உலகமெங்கும் பரவி வருகிறது. உலகமயமாக்கத்தால் இந்திய நகரங்களுக்கும் இது அறிமுகமாகி உள்ளது. இது குளிர்காலத்தை வரவேற்பதற்கான, இறந்தவர்களை நினைவுகூர்வதற்கான, குழந்தைகளிடம் பயத்தைப் போக்குவதற்கான ஒரு பண்டிகை. அக்காலத்தில் மக்கள் பழங்களை இத்தினத்தில் பரிமாறிக் கொள்வர். […]
தெரிஞ்சுக்கலாமா? – பாகம் 1

உலகின் நீளமான மயானம் (longest cemetry) எது தெரியுமா? உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் தான் நீளமான மயானம் என்றும் கருதப்படுகிறது. கட்டப்பட்டு 16௦0 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், நில நடுக்கம், கடும் புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள், போர்ப் படையெடுப்புகள், பீரங்கித் தாக்குதல்கள் என அனைத்தையும் தாங்கி இன்றும் கம்பீரத்துடன், பெருமையுடன் நிற்கிறது இந்தச் சுவர். இன்று சீனா என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த நாட்டை மூன்றாம் நூற்றாண்டில் உருவாக்கியவர் க்வின் ஷி ஹுவாங் […]
கல்லூரி நுழைவுத் தேர்வுகள்

அமெரிக்காவில் கல்லூரி வாசலை மிதிக்கவிருக்கும் மாணவ, மாணவிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் தொக்கி நிற்கும் கேள்வி ‘சாட்’டா அல்லது ‘ஆக்டா’ என்பது தான். பல வருடங்களுக்கு முன்பு வரை கல்லூரித் தேர்வு முறைகள் அவரவர் சேரவிருக்கும் கல்லூரியைப் பொறுத்து வேறுபட்டு வந்தது. கிழக்கு, மேற்கு விரிகுடாப் பகுதிகளில் இருந்த கல்லூரிகள் சாட் தேர்வையும், மத்திய மேற்குப் பகுதியில் இருக்கும் கல்லூரிகள் ஆக்ட் தேர்வையும் ஏற்றுக் கொண்டன. ஆனால் சமீப காலங்களில் சாட் மற்றும் ஆக்ட் தேர்வு மதிப்பெண்கள் பெரும்பாலும் […]